Showing posts with label சிக்னல் கவிதைகள். Show all posts
Showing posts with label சிக்னல் கவிதைகள். Show all posts

Monday, 20 February 2023

அலப்பறைகள்


அவசர ஊர்திகளை விட
அதிகமாய் ஒலிப்பான்களை அலறவிட்டு
விரைகின்றன
கட்சிக்கொடிகளைக்
கட்டிக்கொண்ட வாகனங்கள்
விரையும் வேகத்துக்கு
மக்கள் பணிகள் நிறையுமோ
என்று நோக்கினால்
அதே குண்டும் குழியுமான சாலைகள்தான்
ஆனால் சீறும் அந்த வாகனங்களோ
உயர்தரமான மகிழுந்துகள்! 😉

 

May be an image of 1 person, car, street, road, tree and sky

Thursday, 16 May 2019

பதட்டம்

#சிக்னல்_கவிதைகள்
120 கோடி
மக்கள் தொகைக்கு
பல லட்சம் கோடிகளில்
சில நூறு அரசியல்வாதிகள்
நடத்தும் ஊழலுக்கும்
கொடூரமான
பாலியல் வன்முறைகளுக்கும்
சாதிமத கொள்ளைகளுக்கும்
கொலைகளுக்கும்
வராத பதட்டமெல்லாம்
நம் மக்களுக்கு
பச்சை சிக்னலுக்கு
காத்திருக்கும்
20 விநாடிகளில்
வந்துவிடுகிறது
சாலைகளில்!

ஜனநாயகத்தின் தற்கொலை

சாராயத்துக்கும்
சுயநலத்துக்கும்
அடிமையாகி,
உடல் பலம்
மனபலம் இழந்து
திரியும் அடிமைகள்,

கட்டப்பஞ்சாயத்து,
ஊழல்,
ரவுடித்தனம்,
சாதி மத வெறி,
கொள்ளையென்று
அஞ்சாமல் திரிந்து
அரசியல் வேட்பாளர்களாய்
வந்து நிற்கும்
குறு நில
சாம்ராஜ்ய தலைவர்களுக்கு
ஓட்டுப்போட்டு
தேர்ந்தெடுக்கும் போது
அங்கே
முதலில்
ஜனநாயகம்
தற்கொலை
செய்துகொள்கிறது!

அரசியல்_சாதனைகள்

பென்ஸ், லம்போகினி,
பென்ட்லி வகையறா கார்கள்

பனாமா, சுவிஸ்,
அமெரிக்க சிங்கப்பூர் முதலீடுகள்

பதவி, பாதுகாப்பு காவல்துறை,
சைரன் ஒலி, இத்யாதி போதைகள்

மாறும் வாக்குறுதி, சாதிக்கலவரம்,
மத அரசியல் சாயங்கள்

பொய், பித்தலாட்டம், காழ்ப்புணர்ச்சி,
பொறாமை, பேராசை குணங்கள்

கொலை, கொள்ளை, ஊழல்
கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல்,
கஞ்சா குற்றங்கள்

கல்வித்தந்தை, சிந்தனையாளர்,
சமூகபோராளி, தொழிலதிபர், வள்ளல்
முகமூடிகள்

குறை அறிவியலறிவு, இதிகாச,
வரலாற்று வாய்சவடால் பொய்கள்

இதெல்லாம் தான்
இந்தியாவில்
#அரசியல்_சாதனைகள்!




Image may contain: 11 people, people smiling

Saturday, 20 April 2019

சாபம்

சுட்டெரிக்கும்
சாலைகளில்
தெறிக்கிறது
செத்த
மரங்களின்
#சாபம்

தற்கொலைப்படை

ஃஸ்விகி
ஃஸோமட்டோ
தாறுமாறாய்
விரைந்து
உயிரைக்கொடுத்து
உணவு விநியோகிக்க
சாலையில்
புதிதாய் சேர்ந்திருக்கும்
#தற்கொலைப்படை!

சைரன்

போன வாரம்
தேர்தலில்
உங்களிலொருவன்
என்று
காலில் விழுந்த
வேட்பாளர்
இன்று மந்திரியாய்
மக்களை பார்க்காமல்
சாலையில்
விரைகிறார்
#சைரன் ஒலிகளோடு
காவல் துணையோடு!

Sunday, 17 February 2019

முரண்

குறைந்தப்பட்ச
போக்குவரத்து விதிகளை
மதிக்காத மக்கள்
குறைந்தபட்சம்
நன்மைசெய்யும்
ஆட்சியாளர்களை
எதிர்நோக்கி
காத்திருக்கிறார்கள்

#முரண்

அவலம்

ஒரு நாட்டின்
ஆட்சி நிர்வாகத்தை
தலைநகரின் சாலையில்
கண்டுக்கொள்ளலாம்
சாலைகள்
படுமோசமாய் இருக்கின்றன

#அவலம்

பகுத்தறிவு

நடுஇரவின்
வெறிச்சிட்ட சாலையிலும்
விதிகளை மதித்து
ஓரமாய் நடக்கின்றன
நாய்கள்
அப்போதும்
சீறிப்பாய்கின்றன
ஆறறிவின்
வாகனங்கள்!

#பகுத்தறிவு

February 2018

திறமை

பெண் ஓட்டுநர்களிடம்
அறச்சீற்றமடைந்து
சீறிப்பாய்ந்து
வாகனங்களின் முன்னே
விழும் ஆண்களை
அப்போதும் உரசுவதில்லை
பெண்கள்

#திறமை

தற்கொலைகள்

சீனப்பெருஞ்சுவரை
எழுப்பாத வரை
இந்தியாவின்
சாலைத்தடுப்புச்சுவர்கள் யாவும்
பாதசாரிகள் எகிறிகுதித்து
மாயும்
தற்கொலைக் களங்களே!

#தற்கொலைகள்

சாகும்வித்தைகள்

#சிக்னல்_கவிதைகள்
நடுத்தெருவில் தவறவிட்ட வறுத்தப்பட்டாணிகளைப் போல
எல்லாத்திசைகளிலும்
சிதறிஓடுகின்றன
இருசக்கர வாகனங்கள்
பலரின் கனவுகளை
நசித்தப்படி! 

Thursday, 16 November 2017

சிக்னல்_சிந்தனை

தமிழகத்தின் சாலைகளில் செல்லும் நாய்களை வாகனங்கள் மோதிவிட்டால், அது எப்போதுமே நாய்களின் தவறில்லை!
ஒரே ஒரு தேர்தல்தான் நடந்தது, ஒருமுறைதான் ஓட்டுப் போட்டோம், 3 முதல்வர்கள், 5 வருட தண்டனை, இந்தி நாடாக, இந்துத்துவ மாநிலமாக மாறுகிறது தமிழகம்! இது நம்முடைய தவறா, இந்த அமைப்பின் தவறா தெரியவில்லை, எது எப்படியோ, அரசியல் தெரியவில்லை எனினும் முதல் பத்தியில் இருக்கும் செய்திப்பற்றி தெரியும், சாலை விதிகளை பெரும்பாலும் நாய்களே சரியாக மதிக்கிறது!
#சிக்னல்_சிந்தனை

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...