Showing posts with label Life. Show all posts
Showing posts with label Life. Show all posts

Monday, 23 March 2015

மருந்தோடு பல்பும் இலவசம் !


மறுபடியும் என் ஐந்து வயது மகள் டாக்டர், அப்பாவிற்குப் பதில் இப்போது அம்மா நோயாளி...

 மகள்: என்ன உங்களுக்கு
 நான்: ஜுரம் டாக்டர்....

 ஹ்ம்ம் சரி இருங்க.. செக் பண்றேன்.....ஸ்டத்தஸ்கோப்பை வைத்து பரிசோதித்து விட்டு....
 உங்களுக்கு வயுத்துல ஒரு பிரச்சனை....

 இல்லை டாக்டர் எனக்கு ஜுரம் தான் ....

 நாந்தான் டாக்டர்...பேசாம சொல்றதை கேளுங்க......உங்களுக்கு வயித்துல ஒரு பிரச்சனை, அங்கே ஒரு பூச்சி இருக்கு...அது அப்படியே  உங்க நெஞ்சுல வந்து...இப்போ உங்க கண்ணுல வந்து இருக்கு...

 அடக்கடவுளே....டாக்டர் எப்படிச் சொல்றீங்க?

 உங்க கண்ணுல ரௌன்டா கருப்பா  இருக்கே...ஹ்ம்ம் அது என்ன?
 கார்னியா வா டாக்டர்?

 ஹ்ம்ம் அதுதான்....அந்த பூச்சியால, உங்க கண்ணுல இருக்குற..கார்னியா ரொம்பப் பெருசா ஆகி இருக்கு...அது இப்போ சின்னதாகனும்.....நான் மருந்து தரேன்...அதுனாலதான் உங்களுக்கு ஜுரம்....

 டாக்டர் அது என்ன பூச்சி டாக்டர்?
 அதுவா...அது பேரு பாம் லைட்....
 (பாம் என்றதும் அவள் அண்ணனும் ஜெர்க் ஆகி விட்டான்...)

 என்னது பாமா? அப்போ அந்தப் பூச்சி என்னை ப்ளாஸ்ட் பண்ணிடுமா...இப்போ என்ன செய்யுறது டாக்டர்?

 ஹலோ....என்ன நீங்க? "கிரிக்கெட்ன்னு" பூச்சி இருக்கு, அதுக்காக அது கிரிக்கெட் ஆடுமா? அது மாதிரிதான் பாம் ப்ளாஸ்ட் அது பூச்சி பேரு அவ்வளவுதான்...ஒழுங்கா கொடுத்த மருந்த சாப்பிடுங்க......ஹ்ம்ம் நெக்ஸ்ட்...... 

பி.கு: மருந்தோடு பல்பும் இலவசம் இந்த டாக்டரிடம்! :-)

Wednesday, 5 February 2014

டாஸ்மாக்

விழுந்து கிடப்பவருக்கு
உதவி செய்வதிலும்
தயக்கம்!
மனிதாபிமானமும்
குழப்பத்தில்,
டாஸ்மாக் உபயத்தில்!

Wednesday, 8 January 2014

வாழ்க்கைக் கோல்கள்


ஆர்வம் மட்டுமே திறவுகோல்,
நம்பிக்கை என்பது நெம்புகோல்,
தேவை என்பது ஊன்றுகோல்
எதையும் புதிதாய்க் கற்றிட!

மூன்று கோல்களில்
எது பழுதடைந்தாலும்
கற்றல் பயணம் முடிந்துவிடும்!
 

Tuesday, 7 January 2014

புன்னகை


மறதி என்பது
இல்லாமல்
போயிருந்தால் - இந்த
புன்னகையும் இல்லாமல்
போயிருக்கும்

அந்தப் புன்னகை
இல்லாமல்
போயிருந்தால் - இந்த
வாழ்க்கை ஒன்றும்
வறண்டு போயிருக்கும்

அந்த வாழ்க்கை என்பது
வறண்டு போயிருந்தால் - இந்த
நம்பிக்கை என்பது
துவண்டு போயிருக்கும்

இந்த நம்பிக்கை ஒருநாள்
துவண்டு சாய்கையில் - அந்த
வாழ்க்கையும் முடிந்துபோகும்
பெரும் புன்னகையின் விதைகளை
மண்ணில் ஈந்து!

Sunday, 29 December 2013

நா காக்க

gossip

யாரோ வடித்த
சிலையை -
நீங்கள் செதுக்குவதும்
விந்தை!
சுயம்புவை செதுக்கி
சில்லுகளாக்க வேண்டாம்,
உங்கள் வார்த்தைகளின்
உளியில்!

மௌனம் என்பது
மரணத்திற்குச் சமம்
பல வேளைகளில்!
பிறிதொரு வார்த்தை
எழுப்பிடாது ஏற்கனவே
செத்துவிட்ட சிலையை!

யாகாவா ராயினும் நாகாக்க!

Wednesday, 13 November 2013

மனமிருப்பின்

இதுவே கடைசிப் பயணம்
என ஆகும் போது
தராத எதையும்
தந்துவிட
எண்ணாதீர்கள்

நான் என நின்ற
நானிலிருந்து
விழுந்து
விடாதீர்கள்

சாதி மதக்
கொள்கைகளை
மாற்றிக்
கொள்ளாதீர்கள்

நீயுமா என்று
அவன்(ள்) துடித்ததை
நினைவில்
கொள்ளாதீர்கள்

ஊசிபோல்
உள்ளிருந்து துளைக்கும்
மனதிற்காகவோ
ஊருக்காகவோ
உருகி ஒழுகி ,
துயரம்,
செதுக்காதீர்கள்

மனமிருப்பின்
பிறிதொரு
வாழ்கையைச்
செதுக்குங்கள்
வாழும்போதே!

Thursday, 31 October 2013

போரின்றி அமையாது!


வீசும் புயற்காற்றில்
போரிட்டு
கொண்டிருக்கிறது
மரம்

சில கிளைகள்
முறிகின்றன
சில விதைகள்
புதைகின்றன
முன்னமே 

விடியலில் 
சில பனித்துளிகள்
இலைகளை
நனைக்கின்றன
வேரின் தாகத்தை
தணிக்காமல் 

புயல் தோற்றால்
அமைதித் திரும்பும்
மரம் தோற்றால்
கூடுகளும் குஞ்சுகளும்
சிதறிப் போகும்

சில வேர்களின் பிடியில்
நிலைக் கொண்டு
ஆடிக்கொண்டிருக்கிறது
மரம்

 

Thursday, 10 October 2013

மரமே நீயும் கேளாய்

















காய்ந்த மரமாய் நிற்கும்
மனிதரிடம் கதைத்து -
செவிவழிக் கரைத்திடும்
சுமைதனை விட

கனி ஈன்று
கனிவுடன் நிற்கும்
மரமே மரமே - என்
மனவழிக் கசிந்திடும்
வலியினை உரைப்பேன்
உன்னிடமே, நீயும் கேளாய்

மரமாய் நீ நில்
மருந்தும் வேண்டாம்
உனையே வருத்தி
கிளை முறிக்க வேண்டாம்
பூவோ காயோ
இலையோ கனியோ
எதுவும் வேண்டாம்

உன் இலைகளில் சொட்டும்
ஒரு பனித்துளிப் போதும் - என் 
இமைகளைக் கழுவி  
விழிகளைத் திறந்து
அது வெளிச்சம் காட்டும்

உன் கிளைகள் தாலாட்டும் 
மெல்லிய சாமரம் போதும் - என்
சுவாசத்தில் நுழைந்து, 
திணறும் மூச்சுக்குழலை
அது திறந்திட உதவும்

கல்லாய், மண்ணாய்
மரமாய் நிற்கும்
மனிதர்களிடையே நாளையும்
நான் வாழ்ந்திடல் வேண்டும்,
மரமே மரமே நீயும் கேளாய்!

Monday, 7 October 2013

நாம்



நான் என்ற நானில் இருந்து
என்னை மாறச் சொல்கிறாய்
நீ என்றும் நீயாகவே
இருந்து கொண்டு

என்னை மாற்றிக் கொண்டால்
மட்டுமே உனக்குப் பிடிக்கும்
என்றால் - மாறிய நான்
உண்மையில் யார்?

அன்பை கேட்டால்
அலுப்பாய் உணர்கிறாய்  -
அன்பை கேட்டல்
அன்பின் இயல்பு
நீ அலுப்பாய்
உணர்ந்தால், - அதற்கு
நானா பொறுப்பு?

பேசினால் திமிர் என்கிறாய்
பேசாவிட்டால் தினவு என்கிறாய்
மாறும் உன் இயல்பில்
நீ நீயெனத் தெரிவது
எனக்கு நீதானா?

நானும் நீயும்
நாமில்லை -
நானெனும் நானும்
நீயெனும் நீயும்
விலகும்வரை!

பழங்கதை



பூனைகளின்
பசிக்கிருந்த ஆப்பம் - அதை
குரங்கொன்று விட்டது ஏப்பம்

பாட்டி சொன்னக் கதையிது
மாறிக் கொண்டே வருகுது

பூனைகள் என்றும் பூனைகளாய் 
மந்தையில் சிக்கிய மாடுகளாய் 
குரங்குகள் பெருகினத் தலைவர்களாய்
நாடொன்று ஆனது இங்கே ஆப்பமாய்

ஆப்பமும் ஆகும் துண்டுகளாய்,
குரங்குத் தலைவர்களின் கைகளிலே
நாளை வரும் தேர்தலிலே!

பாட்டி சொன்னக் கதையிது
பாங்காய் இன்றும் பொருந்துது!

Tuesday, 1 October 2013

கீச்சுக்கள்

GIVING is joyful, when it is received with LOVE!
Charity is wonderful when it is accepted with Generosity/Magnanimity!


-------------------------
ஒரு முழம் கயிறு, ஒரு துளி விஷம், ரயில் தண்டவாளம், ஆறு, குளம், உயரமான பகுதி, சாதி விஷமம், மத வெறித் தாக்குதல், விபத்து, சாராயம், கூலிப்படை.........................

ஓர் உயிர் தன்னை அழித்துக் கொள்ளவும் அல்லது அதனை அழித்து விடவும் எத்தனையோ வழிகள் இருக்கும் போது, ஒருவனை வாழ வைக்கவோ, அல்லது அவன் வாழ்ந்திடவோ ஒரு வழியும் இல்லாமல் போய் விடுமா?!

------------------------------------------------- 

அவ்வளவுதான்

கவலைப்பட்டுக்
கண்ணீர் விட முடியாது
கடமை அழைத்திடும்,

கடமை முடிந்ததும் - பெரும்
காலம் கடந்திடும் - பிறிதோர்
கவலையும் மறைந்திடும்

Photo: அவ்வளவுதான்
---------------------
கவலைப்பட்டுக் 
கண்ணீர் விட முடியாது 
கடமை அழைத்திடும்,  

கடமை முடிந்ததும் - பெரும்  
காலம் கடந்திடும் - பிறிதோர் 
கவலையும் மறைந்திடும்

கீச்சுக்கள்

உங்களை ஏமாற்றும், துன்பம் தரும்,
வதைக்கும் யாரும் உங்களுக்கு ஓர் ஆசான்,
ஆசான்கள் தங்குவதில்லை,
அவர்கள் தரும் அனுபவங்கள் தங்கிவிடும்!
வாழ்க்கை பாதையில் அவர்களையும்
வாழ்த்தியே கடந்து செல்லுங்கள்!

Photo: உங்களை ஏமாற்றும், துன்பம் தரும், 
வதைக்கும் யாரும் உங்களுக்கு ஓர் ஆசான், 
ஆசான்கள் தங்குவதில்லை, 
அவர்கள் தரும் அனுபவங்கள் தங்கிவிடும்! 
வாழ்க்கை பாதையில் அவர்களையும் 
வாழ்த்தியே கடந்து செல்லுங்கள்! 

----------------------------------------------------
துன்பங்களைக் கடக்கையில்
நீங்கள் மௌனம் கொண்டால்
அது விரக்தியின் நிலை!
துன்பங்களைக் கண்டு
நீங்கள் சிரிக்க ஆரம்பித்தால்
அது ஞானத்தின் நிலை!
#சுயநலமாய் இருங்கள், ஞானம் பெற்றால் போதும்!  

Photo: துன்பங்களைக் கடக்கையில் 
நீங்கள் மௌனம் கொண்டால்
அது விரக்தியின் நிலை! 
துன்பங்களைக் கண்டு
நீங்கள் சிரிக்க ஆரம்பித்தால் 
அது ஞானத்தின் நிலை! 
#சுயநலமாய் இருங்கள், ஞானம் பெற்றால் போதும்! :-) 
-------------------------------------------------------------
உணவுப் படைத்தல் பெரும் கருணை, பசிக்கு உணவிடுதலை விடப் பசியறிந்து உணவிடுதல், உள்ளன்போடு உணவிடுதல் என்பது ஒரு சிறந்த வரம்!

வேண்டாததை, பழையதைப் பிச்சையிட்டு, தானம் செய்தேன் என்று சொல்லிக்கொள்வதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இடையூறு இல்லாமல் உணவுப் படைத்தலும் தான் இன்றைய காலக் கட்டத்தில் ஏற்பட்டு விட்ட ஓர் அறம்!

# அன்பிலா உணவு என்பிலே!



























Photo: உணவுப் படைத்தல் பெரும் கருணை, பசிக்கு உணவிடுதலை விடப் பசியறிந்து உணவிடுதல், உள்ளன்போடு உணவிடுதல் என்பது ஒரு சிறந்த வரம்!  

வேண்டாததை, பழையதைப் பிச்சையிட்டு, தானம் செய்தேன் என்று சொல்லிக்கொள்வதும்,  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இடையூறு இல்லாமல் உணவுப் படைத்தலும் தான் இன்றைய காலக் கட்டத்தில் ஏற்பட்டு விட்ட ஓர் அறம்!

# அன்பிலா உணவு என்பிலே!
----------------------------------------------------------------------------------------
காலையில், "இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு" என்று, எழுவதைத் தள்ளிப்போடுவதில் இருந்து அந்த நாளின் தோல்விக் கணக்குத் தொடங்குகிறது....
"அப்புறம்" "இன்னொரு நாள் செய்யலாம்/ பார்க்கலாம்" என்று சோம்பலுக்குத் தொடர்ந்து இடம் கொடுக்கையில், தோல்வி மெதுவே உங்கள் முதுகில் ஏறி, உங்கள் உச்சி மண்டையின் நடுவே ஏறிக் கொடி நாட்டப் பயணப்படுகிறது, அதன் இலக்கை அடையும்போது, எதிரே வரும் அதிர்ஷ்டத்தையும் அது எட்டி உதைக்கிறது!

# "இது பூட்ட கேஸ்....போடா அதிர்ஷ்டமே வேற வழியப் பார்த்துகிட்டு" என்று சொல்வது, எப்போதும் தூங்கிக் கொண்டிருக்கும் உங்கள் காதுகளில் விழாது!  

:-)
------------------------------------------------------------------------------------------------
பெய்யும் மழை எங்குப் பெய்தாலும், மழையாகவே பெய்கிறது அதன் தன்மை மாறாமல்!

மழைப் பெறும் நிலங்கள்தான் மாறிக்கொண்டே இருக்கிறது, முன்பு சதுப்புக் காடுகளாக, பின் செம்மண் பூமிகளாக, இப்போது கான்க்ரீட்/தார்ச் சாலைகளாக!
 


சுதந்திரம்

ஒருவரின் சுதந்திரத்தில் தலையிடும்போது
இன்னொருவரின் சுதந்திரமும் பறிபோகிறது!
நேசம் மிகுந்திருப்பின் அது சுகம் - இல்லையெனில்
அது ஒரு பெரும் வலி மனதின் மையத்தில்!

Photo: ஒருவரின் சுதந்திரத்தில் தலையிடும்போது 
இன்னொருவரின் சுதந்திரமும் பறிபோகிறது! 
நேசம் மிகுந்திருப்பின் அது சுகம் - இல்லையெனில் 
அது ஒரு பெரும் வலி மனதின் மையத்தில்!

Wednesday, 18 September 2013

இப்படிக்கு........அன்பு!


வீசும் காற்றில் காற்றாய்
உன் உயிரின் சுவாசமாய்
நான் கலந்தால் என்ன ?

உதிர்ந்து விழும்
பறவையின் இறகாய்
உன் துயர்
நான் உதிர்த்தால் என்ன ?
பகலில் வெளிச்சமாய்
இரவில் குளிர்ச்சியாய்
உன் விழிகளில்
நான் உறைந்தால் என்ன ?

கொட்டும் மழையாய்
பாய்ந்தோடும் அருவியாய்
உன் தாகம்
நான் தீர்த்தால் என்ன ?

சுழன்றோடும் ஆறாய்
புரட்டிப்போடும் புயலாய்
உன் கண்ணீர்
நான் அழித்தால் என்ன ?

மின்னும் விண்மீன்களாய்,
தேய்பிறைக் காணாத நிலவாய்
உன் பரிசாய்
நான் வந்தால் என்ன ?

காய்ந்துக் கிடக்கும் பாலையில்,
கானல்நீரின் வேனலில்
சுனையாய் என் குருதி
உன் உயிர் காக்க
வழிந்தால் என்ன ?

சாய்ந்துக் கிடக்கும் இம்மரத்தில்
சலசலக்கும் இலைக்கூட்டத்தில்
பிரிந்து விழும் இலையாய்
உன் மடியில்
நான் வீழ்ந்தால் என்ன ?

இருளைக் கிழித்து
விளைக்கை ஏற்றிப் பின்
வானில் இருந்து
மறையும் விடிவெள்ளியாய்
நான் மறைந்தால் என்ன ?

காற்றில் வரும் சுவாசத்தில்
மழையில் வரும் குளிரினில்
விண்மீன்களின் கண் சிமிட்டலில்
தேவதைகள் தரும் வரங்களில்
என் அருவம் நீ கண்டால் என்ன ?

இயற்கையில் இயைந்து
இதயத்தில் நெகிழ்ந்து
இறைத்திட்ட அன்பை
விரிந்த இவ்வண்டத்தின்
ஒவ்வொரு துளியிலும்
நீ உணர்ந்தால் என்ன ?

இல்லாதுப் போனாலும்
இல்லாமல் இல்லை
காணாதுப் போனாலும்
காணாமல் இல்லை
அன்பில் கரைந்து
துயரம் மறந்து
என்றும் நிறைவாய்
நீ வாழ்ந்தால் என்ன ?


Tuesday, 17 September 2013

பேரழகி!


நாள்தோறும் வெயிலில் உழைத்து
கல்லுடைத்து மண்சுமந்து - மகனை
சுமக்கிறாள் அவள்!

குடித்து விட்டு சீரழியும் குடும்ப
தலைவனையும் பொறுத்து - வம்பு
பேசித் திரியும் வல்லூறுகளைத் தவிர்த்து
மகனுக்காக உணர்வு கொல்கிறாள்

இளமையில் கொடிய வறுமை
மகனை அண்டாமல் - காம்பு
வற்றிய மார்பில் இருந்து தன் உதிரம்
தருகிறாள் - மகனுக்காக உண்டிச் சுருக்கி
உயிரை  வளர்க்கிறாள்

வெயிலிலும் மழையிலும் வாடிய மங்கை
பால் போல் வண்ணமில்லை - அவளின் 
வற்றிச் சுருங்கிய தேகத்தில்
பஞ்சு போல் மென்மையுமில்லை -
உணர்வு அழித்து உண்டி சுருக்கியவள்
உங்கள் பார்வைக்கு அழகியும் இல்லை

எனினும்
பெண்மை போற்றும் ஒரு நல்லவன்
நாளை - உங்கள் முன் வருவான்
வண்ணத்தில் ஏதுமில்லை,
வடிவத்தில் மோகமில்லை
புறத்தில் நாட்டமில்லை,
அகம் கொண்ட அன்பே பெரிது,
பெண்ணே தெய்வம் என்பான்
தாய்மை நிறைந்தவளே பேரழகி
என்றொரு  உண்மைக் கூறுவான்!

Thursday, 12 September 2013

உள்ளச்சார்பு

கடந்துச் செல்ல எத்தனிக்கிறான்
கடக்க முடியாத பாதைகளையும்

கிடைத்தது ஏதுமில்லை
வலிகளும் வேதனைகளுமன்றி

கொள்ளைக் கொண்டது ஏதுமில்லை
கொடுத்துச் சென்றதன்றி

எடுத்துக்கொண்டது ஏதுமில்லை
தவரவிட்டதன்றி

கண்ணீரைத் தந்ததில்லை
புன்னகையைப் பெருக்கியதன்றி

செல்வத்தைப் போற்றியதில்லை
சில துன்பம் நீக்கியதன்றி

எவரையும் வீழ்த்தியதில்லை
தோள் சாய நின்றதன்றி

இழந்தது அதிகமென
பெற்றது சிறுமையென
நிர்சிந்தையில்
ஓர்கணம் நிலைதடுமாற......

யாருமற்ற முதியவளின்
சுருங்கிய கரங்கள்
தலை தொட்டு
நேசத்துடன் வாழ்த்திட
ஆண்டவனின் குழந்தையொன்று
அப்பா என்று கன்னம் வருடிட.....

கடந்து செல்ல எத்தனிக்கிறான்
கடக்க முடியாத பாதைகளையும்
அத்துணைப் பாறைகளையும்
தகர்த்துக்கொண்டே

ஒளியில்லா ஓர் வாழ்வும்
பிறர்க்கு ஒரு விளக்காகும்!

That moment!




Wings are to fly
Tattered it may be
Eyes are to see
Woeful it could be
Life is to live
Uncertain it might be
In the momentary world!

Thursday, 29 August 2013

தாமதம்

ஓர் நிலவு தேய்கையில்
ஒளி கொஞ்சம் குறைகையில்
உற்று நாம் நோக்குவதில்லை
முழுதாய் மறைகையில் மட்டும்
"அமாவாசை" என்கிறோம்!

Friday, 23 August 2013

பதுக்கல்

சூழும் கருமேகங்களைக்
காற்று கடத்தத் துடிக்க 

நீண்ட நெடு மரங்கள்
பாங்காய் அதனைச் சிறை பிடிக்க 

காற்றில் நெகிழ்ந்து,
மரங்களின் வருடலில் சிலிர்த்து
மேகம் உருகிடும்...
மழையாய்

தோட்டத்தில் துள்ளும் கன்று
ஆடிக் கலைத்திட
அம்மா என்ற குரலில்
பசுவின் அருகில் சென்றிட 
கன்று நாவால் மடி வருட,
தாய்மையில் நிறைந்து
பசு, அன்பை சுரந்திடும்
 பாலாய்

எந்திர உலகத்தில்
நாளை வரும் என்ற சோம்பலில்
அன்பைக் கூட அளவிட்டு
மனமில்லாமல் மடிந்த பின்
தரும் நம் பதுக்கல்
ஆற்றல் மட்டும் கைவரவில்லை
ஏனோ இயற்கைக்கு இயற்கையாய்

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...