Showing posts with label அணுக்கதை. Show all posts
Showing posts with label அணுக்கதை. Show all posts

Monday, 20 February 2023

தட்_பிரதமர்

 

க.மணி: “டேய் நாம எடுக்கிற அடுத்தப்படத்திலே நீதான் பிரதமர், சீன் சொல்றேன் கேட்டுக்க”
செ: “அட இருங்கண்ணே நானே சொல்றேன், வேளைக்கு ஒரு ட்ரஸ்ஸூ, ஊரெல்லாம் சுத்திப்பார்க்குறேன், மேடையில மட்டும் இருபதடி தூரத்திலேயே நின்னு பேசுறேன், யாரு கழுவி ஊத்தினாலும் நம்ம தாத்தாவுக்கு தாத்தாத்தான் காரணம்ன்னு சொல்றேன், பெரிய்யாஆஆ பணக்காரங்க கூட மட்டும் டின்னர் சாப்பிடுறேன், நம்ம ஊர்ல அரசாங்கத்தால யார் செத்தாலும் கண்டுக்காம வெளிநாட்டுல யாராவது செத்த இரங்கல் செய்தி சொல்றேன், அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம்ண்ணே எப்பவும் புல் மேக்கப்புல தான் வெளியே வருவேன் நம்ம சுத்தி இந்த போட்டோ மட்டும் புடுக்கிறவங்க நிறைய இருக்கணும், கரெக்டாண்ணே?!
க.மணி: “ஆளாளுக்கு டைரக்டர் ஆனா எப்படிடா நான் படமே எடுக்கல போங்கடா!”

ஆன்ட்டி_இந்தியன்

 

நிருபர்: கருப்புபணத்தை உங்கள் கட்சி ஒழித்துவிட்டதா?
அதிபர்: ஆம் ஒழித்துவிட்டது, மெல்லிய பச்சை, நீல நிறத்தில் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை தவறுதலாக கருப்பு என்று சொல்லிவிட்டோம், ஆனால் ஊதா, இளஞ்சிவப்பு, ப்ளூ, ப்ரவுன் என்று பல வண்ணங்களில் ரூபாய் நோட்டுகளை அச்சடித்திருக்கிறோம்!
நி: 😩வாராக்கடன்கள் அதிகரித்துவிட்டதே?
அ: உண்மை, கடனை திருப்பிக்கொடுக்காமல் இருந்தவர்களை இனி “வராதே” என்று நாட்டை விட்டு துரத்திவிட்டோம், அதனால் வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, இனி வரவே வராதே என்று சொல்லிவிட்டபடியால் சீர் செய்யப்பட்டுவிட்டது!
நி: 😓 எல்லோரையும் வங்கிக்கணக்கு தொடங்கச்செய்து, பின்பு அவர்களின் குறைந்த சேமிப்பையும், வங்கி கணக்கில் “மினிமம் பேலன்ஸ்” இல்லை என்று வங்கிகள் சுருட்டியது பற்றி?
அ: 60 ஆண்டுகால ஆட்சியில் நாடு மோசமாகிவிட்டது, ஏழைகளின் பணம் போய்விட்டதன் வலி ஒரு ஏழைத்தாயின் மகனுக்குத்தான் தெரியும்!
நி: யார் அது? 🤔
அ: நான்தான்
நி: 😱 ஏழைகளின் நாட்டின் அதிபராகிய ஏழைத்தாயின் மகனான நீங்கள் 4000 கோடியை பயணத்துக்காக செலவழித்தது பற்றி?
அ: அது நாடுகளின் நட்புறவுக்காக
நி: 😰அப்போது ரீனா நாடு ஏன் கருணாச்சலத்தில் ரோடு போட்டது?
அ: எல்லையில் பயங்கரவாதம் நீங்க எங்கள் ஆட்சியில் எல்லாம் சரிசெய்யப்படும்
நி: 🤭நீங்கள்தானே இப்போது ஆட்சியில்?
அ: நான் நாட்டின் சோக்கிதார்...
நி: 🙄ஆனால் நான் கேட்டது?
அதிபர் புகைப்பட கருவி நோக்கி புன்னகைக்க, இரண்டு பேர் நிருபரை குண்டுகட்டாய் தூக்கி வெளியே எறிகிறார்கள்!
#ஆன்ட்டி_இந்தியன் என்று நிருபரை சூழ்ந்துக்கொண்டு மங்கீஸ் முழங்க, நிருபர் ராஜினாமா செய்கிறார்! 😐
சுபம்!

அன்புள்ள அடிமை

 

“அன்புள்ள அடிமைக்கு உன் தலைவனின் கடிதம், படித்தப்பின் நீ ஒன்றும் கிழிக்க வேண்டாம், நீ இருப்பது போலவே அவ்வப்போது வெறுப்பு அறிக்கைகளை விட்டுக்கொண்டும், வாய்க்கு வந்தப் பொய்களை பரப்பியும் தலைமைக்கு உண்மையாய் இரு!”
 
“நீ படிக்காமல் இருத்தல் நலம், ஒரளவு படிக்க தெரிந்தால் போதும், நீ கூலியாக உழைக்க பிற மாநிலங்களுக்கு போ, அங்கேயும் பெரிய காண்டரக்டுகளை நான் கம்பானி, கதானி தகர்வால் வகையறாக்களுக்குத்தான் கொடுத்திருக்கிறேன், நீ ரயிலில் புளி மூட்டையைப் போல் அடைந்து டிக்கெட் இல்லாமல் பயணிக்கலாம், கண்டுக்கொள்ள மாட்டார்கள், போகும் மாநிலத்தில் மொழி பிரச்சனை வராது, ஏற்கனவே உன் தாய்மொழியை அழித்து உனக்கு இந்தியை புகட்டிய மாதிரி பிற மாநிலங்களிலும் இந்தியை திணித்து உனக்கு உதவி செய்கிறோம், உன்னைப்போலவே மொழிப்பற்று இல்லாத பலகோடி சங்கிகளை நான் உருவாக்கி வைத்திருக்கிறேன், அவர்கள் உனக்காக இந்தியில் பேசுவார்கள், உணவுக்காக கவலைப்பட வேண்டாம், உனக்காக ஒரே ரேஷன் என்று செயல்படுத்தியிருக்கேன், எங்கே போனாலும் உனக்கு கோதுமையும் புழுத்துப்போன அரிசியும் கிடைக்கும், நீ அதை உண்டு மகிழ்ந்திரு!”
 
“நீ கொலைக்குற்றங்கள் செய்யலாம், தப்பிப்பது உன் திறமை, உன் அடுத்த தலைமுறை கல்வியைப் பற்றி நீ கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, ஒருவேளை எப்படியோ நீ பணக்காரன் ஆனால் உன் பிள்ளைகளை நம் தொழிலதிபர்களின் கோச்சிங் சென்டரில் சேர்த்து, பரீட்சை எழுத வைத்தோ வைக்காமலோ செலவு செய்து கல்விக்கொடுக்கலாம், நீ கூலியாகவே இருந்தால் உன் பிள்ளைகளும் நடோடிகளாகவே திரியலாம், எங்கே போனாலும் நீ மறுபேச்சில்லாமல் எங்களுக்கே ஓட்டுப்போட வேண்டும், இல்லையென்றால் நாங்களே போட்டுக்கொள்வோம், கூடிய விரைவில் இது எதுவுமே தேவையில்லை என்று நானே ராஜாவாக என்னை அறிவித்துக்கொள்வேன், அதற்கு முன்னேற்பாடாக வரி, கல்வி, தொழில் என்று மாநிலத்தின் எல்லா உரிமைகளையும் பறித்துக்கொள்வேன்!”
 
“வறட்சி, வெள்ளம் பற்றிய கவலையில்லை, எங்கே உன்னால் பிழைக்க முடியுமோ அங்கே போ, போகும் வழியில் செத்தால் அது உன் கவலை, நீயாக சுடுகாட்டிற்கு சென்று படுத்துக்கொள் இன்னும் அதற்குத்தான் நாங்கள் வரிப்போடவில்லை, ரொம்பவும் கஷ்டமாயிருந்தால் ஜெய் பராம் என்று சொல்லிக்கொள், நாங்களும் அவரை வைத்துத்தான் அரசியல் செய்கிறோம், எங்கள் அரசியல் போக நேரமிருந்தால் அவர் உனக்கு கருணை காட்டட்டும், இத்தனை செய்யும் நானே உனக்கு 56 இன்ச் மார்பழகன், உன் காவலாளி, உன் தலைவன், நீ சோர்வடையும் போதெல்லாம் நீ என் பங்கீ பாத் உரையை கேள், மோட்சமடைவாய், எப்போதும் நாமெல்லாம் கிந்துக்கள் என்பதை நீ மறவாதே, நீ பசியில் துடிதுடித்து செத்தாலும் எல்லையில் படைவீரர்கள் இருப்பதை மறக்காதே, இந்த நாட்டில் தாங்கிரஸ் உருவாக்கிய கட்டமைப்பு அத்தனையும் நாங்கள் விற்றுத்தின்றாலும், ஆட்சி எங்களிடம் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் காரணம் தாங்கிரஸ்தான் என்பதை மறக்காதே!”
 

ஆணிவேர்_ஆட்டம்

 

இராவணனிடமிருந்து மீண்டபின்
சந்தேகித்த ராமனை விட்டு
ஒரு சோமனை மணந்தாள்
 
ஆடலரசியின் பின்னே
கோவலன் செல்ல
உதவாதவனுக்காக ஊரையெரிப்பது
வெட்டிவேலையென்று
மேலே படிக்க
அப்பன் வீடு சென்றாள்
 
நடுஇரவில் ஞானம் வேண்டி
விட்டுச்சென்ற சித்தார்த்தனை
தேடிப்பிடித்து மகன் ரகுலனை அவனிடம் ஒப்படைத்து
தேசாந்தரம் சென்றாள்
 
குடித்துவிட்டு கும்மாளமிட்ட
கணவனை வெட்டிவிட்டு
சிறைசென்றாள்
 
ஒருதலைக்காதலால்
தொல்லைக்கொடுத்தவன் மீது
ஆசிட் ஊற்றினாள்
கல்லூரி சென்ற
 
இப்படி பகீரென்று வந்த
காட்சிகளில் “ஒழுக்கம்” கெட்டுவிட்டதாக புலம்பி,
நாடு நாசமானதாக துடித்தது
இந்திய ஆண்சமூகம்!

Thursday, 16 April 2020

தேர்தல்_காளன்கள்!

#அணுக்கதை
“ஏங்க உங்க அம்மாவை கொண்டு போய் முதியோர் இல்லத்தில தள்ளிட்டு வர்றீங்களா இல்லையா? எனக்கு இப்பவே இரண்டுல ஒன்னு தெரிஞ்சாகனும்” என்ற மனைவியின் தாக்குதலில் அம்மாவை “தள்ளிவிட்டு” வந்த வார்டு கவுன்சிலர் ஏகாம்பரம், எம்.பி தேர்தலில் நிற்கும் தன் கட்சி வேட்பாளருக்காக, அந்தக்குப்பத்தில் இருந்த 70 கடந்த பேரிளம் பெண்களை காலைத்தொட்டு வணங்கி, கட்டியணைத்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்!
#தேர்தல்_காளன்கள்!

தலைமுறைச்சாபம்!

இந்த மௌனம்தான்
எவ்வளவு அழகாய் இருக்கிறது
என்றான்
வார்த்தைகளை பறித்துக்கொண்டு

இந்த அடக்கம்தான்
எத்தனை உயர்ந்தது
என்றான்
சுதந்திரத்தை நசித்துவிட்டு

இந்த பொறுமைதான்
என்னை கவர்கிறது
என்றான்
சிறகுகளை பிய்த்துவிட்டு

இந்த கருணைதான்
என்னை தக்கவைக்கிறது
என்றான்
ஏளனம் செய்துவிட்டு

இந்த அறிவுதான்
என்னை வியக்கவைக்கிறது
என்றான்
சுயத்தை கொன்றுவிட்டு

அத்தனையும் கேட்டிருந்த
கூண்டுக்கிளி
இனி உன் வம்ச கூட்டுக்குள்
கிளிகளே இல்லாது
போகட்டுமென்று சாபமிட்டு
படபடவென இறக்கைகளையடித்துக்கொண்டு
செத்து வீழ்ந்தது!
#தலைமுறைச்சாபம்!

நம்பிக்கை

#அணுக்கதை
மரம் வெட்டப்பட்டது
அதன் கடைசி விதை
அவசரமாய் பூமியில் ஒளிந்துக்கொண்டது!

தேர்தல்_திருவிழா

#அணுக்கதை
காசு கொடுக்கும் வேட்பாளர்களும், காசு வாங்கும் மக்களும் சேர்ந்து தேர்தலின் மூலம் ஜனநாயகத்தை நிலை நிறுத்தப்பாடுபட்டார்கள், நடுவே சொந்தப்பணத்தை போட்டு, சில வேட்பாளர்கள் சுயேச்சைகளாய் ஜனநாயகத்தை சீர்குலைத்துக்கொண்டிருந்தார்கள்! 😎
#தேர்தல்_திருவிழா

Wednesday, 15 April 2020

ஆன்ட்டி_இந்தியன்

#அணுக்கதை
நிருபர்: கருப்புபணத்தை உங்கள் கட்சி ஒழித்துவிட்டதா?
அதிபர்: ஆம் ஒழித்துவிட்டது, மெல்லிய பச்சை, நீல நிறத்தில் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை தவறுதலாக கருப்பு என்று சொல்லிவிட்டோம், ஆனால் ஊதா, இளஞ்சிவப்பு, ப்ளூ, ப்ரவுன் என்று பல வண்ணங்களில் ரூபாய் நோட்டுகளை அச்சடித்திருக்கிறோம்!
நி: 😩வாராக்கடன்கள் அதிகரித்துவிட்டதே?
அ: உண்மை, கடனை திருப்பிக்கொடுக்காமல் இருந்தவர்களை இனி “வராதே” என்று நாட்டை விட்டு துரத்திவிட்டோம், அதனால் வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, இனி வரவே வராதே என்று சொல்லிவிட்டபடியால் சீர் செய்யப்பட்டுவிட்டது!
நி: 😓 எல்லோரையும் வங்கிக்கணக்கு தொடங்கச்செய்து, பின்பு அவர்களின் குறைந்த சேமிப்பையும், வங்கி கணக்கில் “மினிமம் பேலன்ஸ்” இல்லை என்று வங்கிகள் சுருட்டியது பற்றி?
அ: 60 ஆண்டுகால ஆட்சியில் நாடு மோசமாகிவிட்டது, ஏழைகளின் பணம் போய்விட்டதன் வலி ஒரு ஏழைத்தாயின் மகனுக்குத்தான் தெரியும்!
நி: யார் அது? 🤔
அ: நான்தான்
நி: 😱 ஏழைகளின் நாட்டின் அதிபராகிய ஏழைத்தாயின் மகனான நீங்கள் 4000 கோடியை பயணத்துக்காக செலவழித்தது பற்றி?
அ: அது நாடுகளின் நட்புறவுக்காக
நி: 😰அப்போது ரீனா நாடு ஏன் கருணாச்சலத்தில் ரோடு போட்டது?
அ: எல்லையில் பயங்கரவாதம் நீங்க எங்கள் ஆட்சியில் எல்லாம் சரிசெய்யப்படும்
நி: 🤭நீங்கள்தானே இப்போது ஆட்சியில்?
அ: நான் நாட்டின் சோக்கிதார்...
நி: 🙄ஆனால் நான் கேட்டது?
அதிபர் புகைப்பட கருவி நோக்க புன்னகைக்க, இரண்டு பேர் நிருபரை குண்டுகட்டாய் தூக்கி வெளியே எறிகிறார்கள்!
#ஆன்ட்டி_இந்தியன் என்று நிருபரை சூழ்ந்துக்கொண்டு மங்கீஸ் முழங்க, நிருபர் ராஜினாமா செய்கிறார்! 😐
சுபம்!

கடவுள் ஒன்றுதான்

மைதானத்தில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கிறது,
“டேய் சாமிகிட்ட வேண்டிக்கடா”
“நோடா நாங்க முஸ்லீம்டா”
“சோ வாட் டா?”
“முஸ்லீம் இந்து சாமியை கும்பிடக்கூடாதுடா!”
“ஓ முஸ்லீம்னா கும்பிடக்கூடாதா? பட் எல்லாரும் சாமிதானேடா?!”
“சரிடா” என்றவன் திரும்பிக்கோவிலை பார்த்துவிட்டு நகர்கிறான்!

சலசலவென்று பேசிக்கொண்டே தோளில் கைப்போட்டுக்கொண்டுச்சென்ற கும்பலில் இருந்த இரு குழந்தைகளுக்கும் வயது 6ல் 8க்குள் தான் இருக்கும், அவர்களுக்கு மதம் மெதுவாய் போதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது, இருப்பினும் நட்பு மதத்தை தோற்கடிக்கிறது என்பதுதான் அழகு! கடவுள் ஒன்றுதான், வழிபடும் முறை மட்டுமே வேறு என்று பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்குமா சமூகம்?! ❤️

சுடுகாட்டுச்சாம்பல்


ஒரு காடு அழித்து ஆசிரமம், இன்னமும் அழித்து சிலை, இன்னமும் அழித்து பார்க்கிங் வசதிகள், கடைசியில் நானே சிவன் என்று ஒருவர் சொல்ல, “இந்த கருமத்துக்கு ஏன்டா என் உயிரை வாங்குறீங்க?” என்று சிவன் கூக்குரலிட்டு, ஏற்கனவே உயிரிழந்த காட்டையும் மதியிழந்த மக்களையும் விட சுடுகாடே மேல் என்று சாம்பலில் கலந்தார்!

Friday, 20 December 2019

ஆண்ட்டி_இந்தியன்

#அணுக்கதை

“இங்கே பாரு 300, 350, 40 க்கு 400, 1000 எத்தனை விதமான செய்திகள், அதிலும் ஒருவர் 300 ல் 275 பேர் தீவிரவாதிகள், 25 பேர் பயிற்சியாளர்கள்ன்னு சொல்லியிருக்கார், வீடியோ கேமை வேற வார் வீடியோன்னு பரப்பி, அதுக்குள்ள இன்னொருத்தர் எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை, டாடிதான் மீண்டும் பிரதமரா வரணும்ன்னு சொல்லியிருக்கார், இதுக்கும் போருக்கும் என்னடா சம்பந்தம்? பாரு இப்பக்கூட விமானிய பிடிச்சதக்கூட முதல்ல இல்லன்னு சொல்லிட்டு அப்புறம் அவங்க ஆதாரம் காட்டியதும் ஒத்துக்கிட்டாங்க, என்ன மாதிரி அரசியல்வாதிங்க, ச்சை!”
“ஹா ஹா, இதை விட கிந்தியாவை யாரும் கேவலப்படுத்த முடியாது!”
“டேய் நான் உங்க ஆளுங்க சொன்னதைத்தான் சொன்னேன், எப்போ கிந்தியாவை கேவலப்படுத்தினேன்?!”
“இல்லை யூ ஆர் ஆண்ட்டி இந்தியன்!”
“டேய் அவனா நீ?!” 😥

#ஆண்ட்டி_இந்தியன்

நான்கைந்து_கட்சிகளும்_நலிந்துப்போன_நாடும்

#அணுக்கதை
பத்திரிக்கையாளர்களும் ஒரு பிரதமரும்!
“சார், நீங்கள் ஏற்கனவே போன ஆட்சியில் கொண்டுவந்த ஜிஎஸ்டி யையும், பெட்ரோல் விலையேற்றத்தையும் எதிர்த்துவிட்டு, அதையெல்லாம் மாற்றுவதாக கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு அதையே திரும்ப செய்வது பற்றி?”
பிரதமர் ஏதோ ஒரு கேமராவை பார்த்து கண்ணசைக்கிறார், பின்பு வாயசைக்கிறார்
“சார் என்ன சொல்கிறீர்கள், கேட்கவில்லை”
“நான் ஏழைத்தாயின் மகன்...”
“பணமதிப்பிழப்பில் நூற்றுக்கணக்கான பேர் இறந்தது பற்றி?”
“நான் ஏழைத்தாயின் மகன்...”
“இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளதைப்பற்றி?”
“அடுத்த மாதம் நான் டிரம்பை சந்திக்க அமெரிக்க பயணம் செல்கிறேன்....”
“தொடர்ந்து உங்கள் அமைச்சர்கள் சர்ச்சையான முறையில் கருத்துகள் கூறினாலும் நீங்கள் மௌனமாய் இருப்பதன் காரணம்”
“காங்கிரஸின் மோசமான ஆட்சியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பேன்”
“பட் சார் இப்ப ஆட்சியில் இருக்கிறது நீங்கள்தான்?”
“நான் ஒரு ஏழைத்தாயின் மகன்...”
“49000 தொழிற்சாலைகள் நலிவடைந்தும் மூடப்பட்டும், 5 லட்சத்துக்கு அதிகமான பேர்கள் வேலை இழந்திருக்கிறார்களே?”
“மன் கீ பாத்தில் பதில் சொல்கிறேன்”
“ஆட்சி முடியும் நேரத்தில் நீங்கள் இதுவரைக்கும்
இல்லாத அளவில் சலுகைகளை வாரியிரைத்திருப்பதும், சில மாதங்களுக்கு வேண்டிய பட்ஜெட்டை ஆண்டு முழுமைக்கும் போட்டிருப்பதை பற்றி...?”
செக்யூரிட்டி ஒருவர் வந்து அந்த நிருபரை தள்ளிக்கொண்டு போகிறார்
சுதாரித்துக்கொண்ட பத்திரிக்கையாளர்கள், ராபேலை ஒதுக்கி, ஏற்கனவே அரசு கொடுத்திருந்த கேள்வித்தாளை எடுத்து கேள்விகள் கேட்க,தொடர்ந்த எல்லா கேள்விகளுக்கும் “ஏழைத்தாயின் மகன், தான் ஒரு ஏழைத்தாயின் மகனென்று அழுத்தியும் அழுதும் சொல்கிறார்”, கலங்கிப்போன பத்திரிக்கையாளர்கள்,
இறுதியாக,
“சார் நீட் போன்ற தேர்வுக்கெல்லாம் கடுமையான சோதனைகளை செய்யும் போது, இராணுவ வீரர்கள் வாகனங்களை மோத எப்படி சர்வசாதரணமாய் 250-350 கிலோ வெடி மருந்துகள் நிரம்பிய வாகனத்தை எடுத்துக்கொண்டு வர முடிந்தது??”
“இது மோசமான தாக்குதல், இராணுவ வீரர்களின் “தியாகம்” வீண்போகாது..”
உடன் தமிழ்நாட்டு கட்சி பிரதிநிதி, “ஆமாம் 40 வீரர்கள் இறந்திருக்கிறார்கள், தமிழ்நாட்டில் 40 திலும் வெற்றிப்பெற செய்ய வேண்டும், இந்தக்கொடுமைகள் நிகழாமல் இருக்க பிரதமரே பிரதமராக இருக்க வேண்டும்!”
கூட்டம் முடிந்ததும் பல நிருபர்கள் தாங்கள் ராஜினாமா கடிதங்களை அனுப்பியும், சிலர்
ஏர்வாடியில் அனுமதிக்கப்பட்டதாகவும் கேள்வி! 😱

#நான்கைந்து_கட்சிகளும்_நலிந்துப்போன_நாடும்

சிஸ்டம்_சரியில்ல!

#அணுக்கதை
குழாயடியில், ஒருவரை பார்த்து இன்னொருவர்
“என்ன இங்கே நிக்கிறீங்க? தண்ணி வரலையா?”

“ம்ம்ம் எங்கம்மா தண்ணி வருது? எல்லா பம்பிலும் சாக்கடைதானே வருது, இந்தக்கோவில் பம்ப்லதானே ஏதோ தண்ணி வருது?”

“ஏங்க்கா ஆயிரத்தை வாங்கீட்டாங்களா? குடுக்கக்கூடாதுன்னு கோர்ட்ல சொல்லிட்டாங்களாமே?”

“ம்க்கும், பாடையில போறவனுங்க, குடிக்க தண்ணியில்ல, சாக்கடத்தண்ணி வருது, தெருவுக்கு தெரு சாராயக்கடைய தொறந்துவுட்டுட்டு, எல்லாத்தண்ணியையும் அங்கே இறைக்குறானுங்க போல, அததது குடிச்சிட்டு மூத்திரத்தை அடிச்சிட்டு மல்லாந்து கிடக்குதுங்க, இதுல ஒரு கொடந் தண்ணிக்காக ரோடு ரோடா நாயா அலையணும், குடுக்குறானுங்களா ஆயிர ரூவா, #%^**++$”

இன்னொரு இளைஞர்
“இன்னா ஆயா பாயிண்ட்டா பேசுறே, அப்போ ஆயிர ரூவா வேணா உனக்கு?”

“ஆமாண்டா அந்த ஆயிர ரூவாய கூட உங்கப்பன் வரிசையில நின்னு வாங்கினா நீ போய் கண்ட கருமாந்திரவனுக்கு தியேட்டராண்டா போய் அழுவே, எல்லாத்துக்கும் நாங்கதாண்டா போகணும், நீங்க ஆக்டருங்க பின்னாடி போங்க, இவனுங்க எல்லாம் ஆயிரந்தரேன் இரண்டாயிரந்தரேன் நாய்க்கு எலும்புத்துண்டு தர்றா மாரி தந்துட்டு புள்ள குட்டிங்களுக்கு சொத்து சேர்த்துட்டு ஓட்டு கேக்கசொல்லோ ஈஈன்னு பல்ல இளிச்சிகிட்டு வருவானுங்க, நாங்க எப்பவும் போல எப்படியாச்சும் தண்ணிக் கொண்டாந்து உங்களுக்கு வடிச்சுக்கொட்டணும், நகரு அந்தாண்டே”

பைக்கில் வந்த இன்னொருவர்
“ஆமாம் பாட்டி சொல்றது சரிதான், என்ன பண்றது? நாட்டுல சிஸ்டம் சரியில்ல”
இளைஞன், “இன்னா சார் தலைவர் ஃபேனா?” சிரிக்கிறார்
ஆயா, “தோ சொன்னா மாரி நடக்குது பாரு, வயசானவங்க புலம்பறோம், வயசு இருக்கறதுங்களும் புலம்புதுங்க, சுருட்றவன் சுருட்டிக்கிட்டு போறான், இந்த ஆத்தாதான் காப்பாத்தனும் போல!”

#சிஸ்டம்_சரியில்ல!

அனுபவம்

#அணுக்கதை
துணிக்கடையில் இருவர்:
“ஷப்பாஆஆஆ அண்ணே, கல்யாணத்துக்கு அம்மா பொண்ணு பாத்தபோது கூட ஒன்னும் சொல்லாம கட்டிக்கிட்ட, இப்ப ஒரு சட்டை எடுக்கறதுக்கு இத்தனை கட நடந்து, இத்தனை துணிய எடுத்துப்போட்டு ரொம்ப அக்கப்போர் பண்றே?”
“டேய், அப்ப பட்ட அடியில்தான் அன்னையிலிருந்து இப்படி அலசி ஆராய ஆரம்பிச்சிட்டேன்!? நீயாவது அண்ணணே பார்த்து கத்துக்க!”
கேட்டுக்கொண்டிருந்த துணிக்கடைக்காரர்: “சார் எவ்வளவு அடிச்சாலும் கிழியாத துணியிருக்கு காட்டவா?”
“??!!” 😳😥😥😥
#அனுபவம்

ஜனநாயகத்தின்_வீழ்ச்சி!

#அணுக்கதை
“இப்படியாக சிந்திய நாட்டின் 74 ஆண்டுகால சுதந்திரம் கஜராத் மன்னர்களிடம் கைநழுவி போய் முடிவுக்கு வந்தது, அவர்கள் பண்டைய அமிழகத்தில் வளம் நிறைந்த பகுதிகளில் எண்ணெய் கிணறுகள் தோண்டி அவற்றை பாலைவனமாக்கினார்கள், தங்களின் எட்டப்பத்துரைகள் மூலம் எட்டுவழி பத்துவழி சாலைகள் போட்டு தங்கள் வணிகப்பொருட்கள் சாலைவழி விரைந்து செல்ல ஏற்பாடு செய்துக்கொண்டார்கள், கல்வி, ஆரோக்கியம், பல்வேறு சந்தைப்பொருட்கள், தொலைத்தொடர்பு, பெட்ரோலியம், ஆடைகள், காப்பர் என்று பல்வேறு வியாபாரங்களில் போட்டியே இல்லாமல் தனிப்பெரும் சர்வாதிகாரிகளாக திகழ்ந்தார்கள், பேருக்கு ஒருவரை அதிபராக பதவியில் அமர்த்திவிட்டு, தங்கள் மனம் போல வாழ்ந்தார்கள், ஒரு நகரத்தை எண்ணெய்க்காக, ஒரு நகரத்தை காப்பருக்காக, ஒரு நகரத்தை துறைமுக வணிகத்திற்காக, ஒரு நகரத்தை ஆயுதங்களுக்காக என்று ஒவ்வொன்றாய் அழித்தார்கள், மக்கள் சாராயக்கடைகளில் மதியிழந்து கிடக்க, போராடிய எஞ்சிய மக்கள் குண்டுகளுக்கு பலியானர்கள், பலர் நவீன மருந்து வியாபாரங்களுக்கு சோதனை எலிகளாயினர், நியாய மன்றங்கள்
எல்லாம் ஏதேதோ சொல்லி மக்களின் கோரிக்கைகளை, வழக்குகளை நிராகரித்தன, இறுதியில் ஒரு தேசமும் சில இனங்களும் அழிந்து எஞ்சியவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர்......”


என்று வேலைக்காரி பூர்ணாவின் பத்து வயது மகன் பாபு வரலாறை வாய்விட்டு படித்துக்கொண்டிருக்க “அரே சுப்!” என்று அவனை அதட்டி நகர்ந்தார் முதலாளி!
#ஜனநாயகத்தின்_வீழ்ச்சி!

Thursday, 16 May 2019

தெளிவு

#அணுக்கதை
செந்தில் கவுண்டமணியிடம்;
“அண்ணே, எங்க பாட்டி ஒரு கதை சொல்லுச்சுண்ணே!”
“சரி சொல்லு”
“அது வந்துண்ணே, இந்த மாடுங்க எல்லாம் மனுஷங்க எங்கள ரொம்ப கொடுமைப்படுத்துறாங்கன்னு கையாலத்துக்கு போய் சிவன்கிட்ட முறையிட்டாங்களாம், அப்போ சிவன் சரி போங்க, நான் வந்து பாக்கிறேன்னு சொல்லிட்டு, ஆடி அசைஞ்சு ஒருநாள் நம்ம பூலோகத்துக்கு வந்தாராம், வந்தவரு பாத்தப்போ அன்னைக்கு மாட்டுப்பொங்கல், மாடுங்கள எல்லாம் அலங்கரிச்சு மனுஷங்க நல்லா கவனிச்சிட்டு இருக்கறத பார்த்துட்டு, அடடே நல்லாத்தானே கவனிக்கிறாங்கன்னு போயிட்டாராம்”

“சரி, இதயேண்டா இப்போ என்கிட்ட சொல்றே?”
“அது வந்துண்ணே இந்த மழை, புயல் எல்லாம் வந்து பாதி ஜனங்க செத்தப்பிறகு, ஊரு அழிஞ்சப்பிறகு, இந்த டெல்லியில் இருக்கற ஆளுங்க எல்லாம் ஐஞ்சு பத்துநாள் கழிச்சு எல்லாம் முடிஞ்சப்பிறகு அரைகுறையா பார்த்துட்டுப் போறாங்களே, அதைப்பார்த்து ஆயா இந்தக் கதை சொல்லுச்சுண்ணே!”
“டேய் தீச்சட்டி மண்டையா, கருத்தா பேசிட்டு ஏன்டா அரசியல்வாதிங்க முன்னாடி அன்னைக்குக் கூழைக்கும்பிடு போட்டே?”
“அடப்போங்கண்ணே, கதைசொன்னா கேக்காம நோண்டி நோண்டி கேள்விக்கேட்டுட்டு, நான் வர்ரேண்ணே”
“இரு நாயே, எங்க ஓடுறே?”
“நம்ம செல்லத்தாயி தோட்டத்திலே நயன்தாரா சூட்டிங்காம்ண்ணே!”
#தெளிவு

செய்திகள்_வாசிப்பது

#அணுக்கதை
“சென்னைக்கு வந்தது ஆட்டுக்கறிதானாம்!”
“யார் சொன்னா?”
“அட அந்த ஆடே சொல்லுச்சாம்ப்பா!”
“அப்போ அந்த மீன்கறின்னு எழுதியும், சுகாதரமற்ற முறையில் கொண்டுவந்ததெல்லாம்?”
“யோவ் இப்படி வேகமா கேட்டா எப்படி? யோசிக்க வேணாமா? ஆமா இன்னுமா நீ அதை மறக்கல, ரொம்ப விவகாரமான ஆளா இருப்பே போல?”
“சாப்பிடும்போது மீனா, ஆடா, நாயான்னு தெரிய வேணாமா?”
“அதானே பார்த்தேன், என்னடா நம்மாளுக்கு நிறைய அறிவு வந்துடுச்சோன்னு?!”

#செய்திகள்_வாசிப்பது!

பதவி

#அணுக்கதை
செந்தில், கவுண்டமணியிடம்: அண்ணே அண்ணே
கவுண்டமணி; சொல்டா நாயே
“ஏன்னே எப்படிண்ணே தேர்தல்ல நிக்காம படீர்ன்னு கால்ல விழுந்து முதல்வராயிட்டங்க?”
“டேய் கோமுட்டி தலையா, காரியம் ஆவனும்னா காலை பிடி இல்லைன்னா கழுத்த பிடின்னு சொல்லியிருக்காங்கடா!”
“அண்ணே இப்ப நான் உங்க கால்ல விழுந்தா என்னை முதல்வர் ஆக்கிடுவீங்களாண்ணே?”
செந்திலை ஏற இறங்க பார்த்துவிட்டு, “டேய் யார்ரா அங்கே இந்த மண்டையன தூக்கி உள்ள போடுங்கடா..”
“”அண்ணே அண்ணே என்னண்ணே இப்படி கேட்டதுக்கெல்லாம் திடுதிடுப்புன்னு உள்ள போடச் சொல்றீங்க? நீங்க ரொம்ப மோசம்ண்ணே”
கவுண்டமணி அழுதுக்கொண்டே, “ஏன்டா நானே அவனவன் கால்ல கையில் விழுந்து (மனசுக்குள், “தவழ்ந்தெல்லாம் போய்!”) இந்தப் பதவியை பிடிச்சிருக்கேன், நீ கூட இருந்துட்டே அத பிடுங்கப்பாக்குறீயா? எவனாவது ஆட்சிய பத்தி பதவிய பத்தி பேசினா எவனா இருந்தாலும் வெட்டுவேன், யாரா இருந்தாலும் உள்ளே தூக்கிப்போட்டு மிதிப்பேன்!” கோபமாக கத்துகிறார்
செந்தில், கோபத்துடன், “அண்ணே இதுக்கெல்லாம் நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க, என்கிட்டதான் வந்தாகணும்!”
அசால்ட்டாக, “சரி போ நாயே அப்படியே ஒரு பொறைய போட்டா சரியாகிட மாட்டே, நீ வாங்குற நாலு பத்துக்கு இந்தப் புரட்சி எல்லாம் உனக்கெதுக்கு, இதெல்லாம் அரசியல்ல சகஜம்ப்பா..”
#பதவி

துக்ளக்_ஜனநாயகம்

#அணுக்கதை;
“அறிவில்லாம இல்ல, அறிவு இருக்கவேதான் ஒழிக சொல்லுது!” என்று பிரிட்டிஷ் அரசி சொல்ல உடனே பாய்ந்து வந்து கைது செய்தார்கள் அடிமை பிராந்தியத்தின் காவலர்கள், அப்போது அங்கு வந்த நாய்ப்புலவர் “வள்” என பெண் புலவர்களை பிறாண்டி வைக்க, காவலர்கள் கண்மூடிக்கொண்டார்கள், வேடிக்கை விளையாட்டு நடந்த வேளையில் அங்கே வந்த அரசரையும் கைது செய்யச் சொல்லி ராணி கொதிக்க, “கைதாவது மயிராவது தயிராவது” என்றார் அரசர், புல்லரித்துப்போய் ஆர்ப்பாரித்தார்கள் மக்கள்! 😎👏🏻👏🏻👏🏻👏🏻
#துக்ளக்_ஜனநாயகம்

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...