#அணுக்கதை
“இப்படியாக சிந்திய நாட்டின் 74 ஆண்டுகால சுதந்திரம் கஜராத் மன்னர்களிடம் கைநழுவி போய் முடிவுக்கு வந்தது, அவர்கள் பண்டைய அமிழகத்தில் வளம் நிறைந்த பகுதிகளில் எண்ணெய் கிணறுகள் தோண்டி அவற்றை பாலைவனமாக்கினார்கள், தங்களின் எட்டப்பத்துரைகள் மூலம் எட்டுவழி பத்துவழி சாலைகள் போட்டு தங்கள் வணிகப்பொருட்கள் சாலைவழி விரைந்து செல்ல ஏற்பாடு செய்துக்கொண்டார்கள், கல்வி, ஆரோக்கியம், பல்வேறு சந்தைப்பொருட்கள், தொலைத்தொடர்பு, பெட்ரோலியம், ஆடைகள், காப்பர் என்று பல்வேறு வியாபாரங்களில் போட்டியே இல்லாமல் தனிப்பெரும் சர்வாதிகாரிகளாக திகழ்ந்தார்கள், பேருக்கு ஒருவரை அதிபராக பதவியில் அமர்த்திவிட்டு, தங்கள் மனம் போல வாழ்ந்தார்கள், ஒரு நகரத்தை எண்ணெய்க்காக, ஒரு நகரத்தை காப்பருக்காக, ஒரு நகரத்தை துறைமுக வணிகத்திற்காக, ஒரு நகரத்தை ஆயுதங்களுக்காக என்று ஒவ்வொன்றாய் அழித்தார்கள், மக்கள் சாராயக்கடைகளில் மதியிழந்து கிடக்க, போராடிய எஞ்சிய மக்கள் குண்டுகளுக்கு பலியானர்கள், பலர் நவீன மருந்து வியாபாரங்களுக்கு சோதனை எலிகளாயினர், நியாய மன்றங்கள்
எல்லாம் ஏதேதோ சொல்லி மக்களின் கோரிக்கைகளை, வழக்குகளை நிராகரித்தன, இறுதியில் ஒரு தேசமும் சில இனங்களும் அழிந்து எஞ்சியவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர்......”

என்று வேலைக்காரி பூர்ணாவின் பத்து வயது மகன் பாபு வரலாறை வாய்விட்டு
படித்துக்கொண்டிருக்க “அரே சுப்!” என்று அவனை அதட்டி நகர்ந்தார் முதலாளி!
#ஜனநாயகத்தின்_வீழ்ச்சி!
#ஜனநாயகத்தின்_வீழ்ச்சி!
No comments:
Post a Comment