Friday, 20 December 2019

சிஸ்டம்_சரியில்ல!

#அணுக்கதை
குழாயடியில், ஒருவரை பார்த்து இன்னொருவர்
“என்ன இங்கே நிக்கிறீங்க? தண்ணி வரலையா?”

“ம்ம்ம் எங்கம்மா தண்ணி வருது? எல்லா பம்பிலும் சாக்கடைதானே வருது, இந்தக்கோவில் பம்ப்லதானே ஏதோ தண்ணி வருது?”

“ஏங்க்கா ஆயிரத்தை வாங்கீட்டாங்களா? குடுக்கக்கூடாதுன்னு கோர்ட்ல சொல்லிட்டாங்களாமே?”

“ம்க்கும், பாடையில போறவனுங்க, குடிக்க தண்ணியில்ல, சாக்கடத்தண்ணி வருது, தெருவுக்கு தெரு சாராயக்கடைய தொறந்துவுட்டுட்டு, எல்லாத்தண்ணியையும் அங்கே இறைக்குறானுங்க போல, அததது குடிச்சிட்டு மூத்திரத்தை அடிச்சிட்டு மல்லாந்து கிடக்குதுங்க, இதுல ஒரு கொடந் தண்ணிக்காக ரோடு ரோடா நாயா அலையணும், குடுக்குறானுங்களா ஆயிர ரூவா, #%^**++$”

இன்னொரு இளைஞர்
“இன்னா ஆயா பாயிண்ட்டா பேசுறே, அப்போ ஆயிர ரூவா வேணா உனக்கு?”

“ஆமாண்டா அந்த ஆயிர ரூவாய கூட உங்கப்பன் வரிசையில நின்னு வாங்கினா நீ போய் கண்ட கருமாந்திரவனுக்கு தியேட்டராண்டா போய் அழுவே, எல்லாத்துக்கும் நாங்கதாண்டா போகணும், நீங்க ஆக்டருங்க பின்னாடி போங்க, இவனுங்க எல்லாம் ஆயிரந்தரேன் இரண்டாயிரந்தரேன் நாய்க்கு எலும்புத்துண்டு தர்றா மாரி தந்துட்டு புள்ள குட்டிங்களுக்கு சொத்து சேர்த்துட்டு ஓட்டு கேக்கசொல்லோ ஈஈன்னு பல்ல இளிச்சிகிட்டு வருவானுங்க, நாங்க எப்பவும் போல எப்படியாச்சும் தண்ணிக் கொண்டாந்து உங்களுக்கு வடிச்சுக்கொட்டணும், நகரு அந்தாண்டே”

பைக்கில் வந்த இன்னொருவர்
“ஆமாம் பாட்டி சொல்றது சரிதான், என்ன பண்றது? நாட்டுல சிஸ்டம் சரியில்ல”
இளைஞன், “இன்னா சார் தலைவர் ஃபேனா?” சிரிக்கிறார்
ஆயா, “தோ சொன்னா மாரி நடக்குது பாரு, வயசானவங்க புலம்பறோம், வயசு இருக்கறதுங்களும் புலம்புதுங்க, சுருட்றவன் சுருட்டிக்கிட்டு போறான், இந்த ஆத்தாதான் காப்பாத்தனும் போல!”

#சிஸ்டம்_சரியில்ல!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!