Showing posts with label கீச்சுக்கள்!. Show all posts
Showing posts with label கீச்சுக்கள்!. Show all posts

Monday, 20 February 2023

கீச்சுக்கள்

 

 

சுயநலவாதிகளை கடந்து மனம் கடினப்பட்டு விடும்போது கண்ணீரும் வருவதில்லை, எதிர்ப்பார்ப்புகளும் இல்லை, காலப்போக்கில் வார்த்தைகள் குறைந்து ஓர் ஆழ்ந்த அமைதிக்குள் மூழ்கிவிடுகிறது இந்த வாழ்க்கை!

 ---------

அன்பு, கருணை, அரவணைப்பை யாருக்கும் கொடுக்கலாம் ஆனால் அதை எல்லாம் யாரிடமும் எதிர்ப்பார்க்காமல் நமக்கு நாமே நேசித்தலே வாழ்க்கையை எப்படியோ சமன் செய்து நகர்த்த உதவும், அதுவே தற்கால எதார்த்தம்!

செதுக்கி நிமிர்தல்

மனித உறவுகள் தரும்
வலிகளையும் வேதனைகளையும் கொண்டு
ஒன்று முறிந்தும் போகலாம்
அல்லது எழுந்தும் நிற்கலாம்
பிறர் கருணைக்கும் முடிவுக்கும்
விட்டுவிட்டால்
அது மரணம்
நம்மையே நாம்
செதுக்கி நிமிர்ந்தால் மட்டுமே
அது நம் வாழ்க்கை!

 

Thursday, 16 April 2020

உலகம்

வெற்றியும் தோல்வியும்
யாருக்கும் வரும்
எனினும் வெற்றி பெற்ற பின்னரே
உலகம் உங்களுக்கு
தன் காதுகளைத் தரும்!

அம்மா

வீட்டிலுள்ளவர்களுக்கு உடம்பு சரியில்லையென்றால் நாம் (அம்மாக்கள்):
“இந்தா தைலம் தேச்சுவிடறேன் தூங்கு!”
“இந்தா குட்டி சுடுதண்ணி, உப்பு போட்டு இருக்கேன், வாய் கொப்பளி தொண்டை சரியாகும்”
“டேய் துவரை ரசம், இந்தா குடிச்சிடு சரியாகிடும்”
இப்படி “.....” “....” “....”

நமக்கு (அம்மாவுக்கு) உடம்பு சரியில்லையென்றால்:
“இங்க பாரும்மா எல்லாம் மனசுதான் காரணம், வேலையெல்லாம் முடிச்சிட்டு (?!) தூங்கு!”
“சுடுதண்ணி வெச்சு வாய் கொப்பளிமா, கசாயம் வெச்சு குடி, ஆபிஸ் லீவ் போட்டுட்டியா அப்போ ஈவ்னிங் எனக்கு கோபி மஞ்ஜூரியன் செஞ்சு கொடு(!)...........”
அம்மா மைண்ட் வாய்ஸ் “பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே, நான் சுடுதண்ணிய குடிச்சிட்டு ஆபிஸூக்கே போறேன்!”
👀

Friday, 20 December 2019

கீச்சுக்கள்

பெரும்பாலான தமிழக கட்சிகளுக்கு கொள்கை என்பது வெங்காயம் போல, உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது, கேட்கும் நமக்குத்தான் கண்ணீர் வரும், அவர்கள் கரன்சியில் கண்ணை மறைத்துக்கொள்வார்கள்!
-------------------
இந்தியர்களின் கையாலாகாத இயலாமையில்
தமிழர்களின் கொஞ்சமும் சுரணையற்ற மறதியில்
கூட்டணி கேலிக்கூத்துக்கள்!
தேர்தலென்ற நடைமுறை தவிர்த்துவிட்டால்
இது மன்னர்கள் ஆட்சிக்காலமே!

கீச்சுக்கள்

தன்னிடம்
எதையும் எதிர்ப்பார்க்கக்கூடாதென்று
அம்மா மட்டும்
நினைத்திருந்தால்
இந்த உலகில்
உயிர்களே இருந்திருக்காது!

---------------------

உடல் இயக்கம்
தேயும் நேரத்தில்தான்
அன்பின் உண்மைமுகம்
தெரியவரும்!

------------------------

எப்போது புகழ் போதையில்
மூழ்குகிறோமோ அப்போது
நல்லவைகள் நம்மைவிட்டு
விலகிச்செல்கின்றன!

-----------------------

தேனீ தொடங்கி யானை வரை, இந்த விலங்கினங்களும், மற்ற பல்லுயிர்களுமே இந்தப்பூமி வாழக்காரணம், மனிதர்களுக்கோ இந்தப்பூமியை ஏதோ ஒரு விதத்தில் சுரண்டுவதே வாழ்தல் என்றாகிவிட்ட நிலையில், இந்தப்பூமியில் மனிதர்கள் அனைவரும் #அகதிகள்தான்!

கீச்சுக்கள்

எத்தனை அழகாய் இருக்கிறார்கள் மனிதர்கள்
நாம் எதையும் கேட்காதவரை!
---------------------------
பலரின் கனவுகளுக்காக
உழைப்பவர்களுக்கு
எப்போதும்
கனவுகள் சொந்தமில்லை!
----------------------

Thursday, 16 May 2019

வேறு வேறு

பிறரின் தேவைக்கு ஊறுகாயாக இருப்பதும்
பிறரின் மகிழ்ச்சிக்கு காரணமாய் இருப்பதும்
வேறு வேறு
முன்னது ஏமாளித்தனம்
பின்னது மனிதாபிமானம்!

செய்வதறியாது செத்துக்கொண்டிருக்கிறோம்

காடின்றி, உணவின்றி, நீரின்றி, தடம் மாறும் விலங்குகளை உடனடியாக கொன்றுவிடுகிறோம், நம்மை மெதுவே தின்றுக்கொழிக்கும், இரத்தம் உறிஞ்சும் அரசியல் அதிகார ஊழல் அட்டைப்பூச்சிகளை மட்டும் ஏதும் செய்யாமல் செய்வதறியாது செத்துக்கொண்டிருக்கிறோம்!

மாற்றத்தை வருங்காலம் செய்யும்

#மகனுடன் வெளியே சென்று திரும்பி வந்துக்கொண்டிருக்க, வழியில் தள்ளுவண்டியில் சப்போட்டா பழங்களை ஒருவர் விற்றுக்கொண்டிருந்தார், அவனுக்கு அது பிடிக்கும் என்பதால் ஒரு கிலோ சப்போட்டா பழங்களை வாங்க அவர் ஒரு ப்ளாஸ்டிக் கேரி பேக்கில் கொடுக்க, “ம்மா, ப்ளாஸ்டிக் பை வாங்கதேன்னு சொல்றேன்ல ? “
“சரிடா இப்போ எப்படி வாங்குறது?”
சட்டென்று என் சுடிதார் துப்பட்டாவை இழுத்து இதில் வாங்கிக்க” என்றான்
ப்ளாஸ்டிக் பையை திருப்பிக்கொடுத்துவிட்டு, துப்பட்டாவில் பழங்களை போட்டு மூட்டை போல் ஆக்கி தூக்கிக்கொள்ள, “தம்பி கருத்தா இருக்குது, நானும் துணிப்பையே வாங்கிடுறேன்பா” என்றார் பழவியாபாரி!
மாற்றத்தை வருங்காலம் செய்யும்! ❤️

Metoo

#Metoo போட வேண்டுமென்றால் அப்பத்தா ஆத்தாவில் இருந்து இப்போதுள்ள கொள்ளு பேத்திகள் வரை 99% சதவீத இந்தியப் பெண்கள் போட வேண்டும், ஏனென்றால் உலகிலேயே மோசமான ஆண்கள் இந்திய ஆண்கள் என்றும் மோசமான பெண்கள் இங்கிலாந்து பெண்கள் என்றும் ஒரு சர்வே சொல்லுகிறதாம்!
நல்லவர்கள், நேர்மையாளர்கள், பெண்ணை ஏய்க்காதவர்கள் மன்னிக்க! 😎 .

பெண்களே தாழ்ந்தவர்கள்

உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடெல்லாம் ஆண்களுக்குத்தான், எளிதில் வன்மத்துக்கும், வன்முறைக்கும், வேட்கைக்கும், எந்தப்பகைக்கும், போருக்கும் இலக்காகும் இந்தியப் பெண்களே எல்லாச் சாதியிலும் தாழ்ந்தவர்கள்!

முற்பகல் செய்யின்

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை கார்டு மூலம் செலுத்தலாம் என்ற பிறகு தமிழக தலைநகரம் வெறிச்சோடி போயிருக்கிறது, இருசக்கர வாகனங்கள் 200 சதவீதம் விதிமீறல்கள் செய்ய, அவர்கள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு, டெம்போக்களும் லாரிக்களும் மட்டும் ஓரங்கட்டப்படுகின்றன, அட இன்னுமா டெபிட் கார்ட் வாங்கல?
****
அமெரிக்கா என்றொரு நாடு இருக்கிறது, ஆப்கானிஸ்தான் என்றொரு அடியாளை வளர்த்துவிட்டு பின்னாளில் ஆப்பசைத்த குரங்காக அவதிப்பட்டது, அதுபோல விதிமீறல்களை கண்டுக்கொள்ளாமல் சாலையில் ஒரு ரவுடிக்கூட்டத்தை வளர்த்துவிட்டுக்கொண்டிருக்கிறது அரசு, நாளை இதே சாலையில் தான் அதிகாரிகளும் அமைச்சர்களும் பயணிக்க வேண்டும், எல்லா நேரமும் எல்லா உறவுகளுக்கும் சைரன் வைத்த வாகனம் வருமா இல்லை “G” என்ற எழுத்து சாலையில் சீறும் வாகனங்களை கட்டுப்படுத்தி விபத்தை தவிர்த்துவிடுமா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

அசுர வளர்ச்சி

கொலைகள், சாதிமத வெறியாட்டங்கள்,
வன்முறைகள் என்று மனித இனத்தின்
அசுர வளர்ச்சியின் பரிணாமத்தை பார்க்கும் போது
காட்டில் புலிகளோடு கூட வாழ்ந்துவிடலாம் என்று தோன்றுகிறது!

Image may contain: one or more people, people standing and text

கீச்சுக்கள்

ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளின் பள்ளியில் மகளுக்காக காத்திருக்க, அவளுக்கு முன் என்னிடம் ஓடி வந்த அவளின் தோழி: “இன்னைக்கு பிரிய தர்ஷினி இனி ஜென்மத்துக்கும் பவித்ராகிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டா ஆன்ட்டி”
“ஏன்?”
“அவதானே லீடர், போர்ட்ல பேசறவங்க நேம் எழுதுறா, ப்ரியா எங்களுக்கு ப்ரெண்டு, ப்ரெண்டு பேரையும் எழுதுவியான்னு சண்டை”
அதற்குள் மகள் வந்துவிட, “ஏன் ப்ரெண்ட் பேரை போர்ட்ல எழுதுற?” என்று கேட்க,
“ஸீ டீச்சர் என்கிட்ட பொறுப்பு கொடுத்திருக்காங்க, அவகிட்ட நான் பேசாதேன்னு சொன்னேன், அவ கேக்கல, ப்ரெண்ட்டா இருந்தாலும் நான் ஹானஸ்டா தான் இருப்பேன், ம்ம்” என்று விறைப்பாய் தலையை திருப்பிக்கொண்டாள். பள்ளியில் வகுப்பு லீடராக பின் பள்ளி லீடராக, நேர்மைடா நியாயம்டா என்று நான் நடந்துகொண்ட நிகழ்வுகளும், நிகழ்ந்த கலாட்டாக்களும் நினைவில் வந்தது, அது ஒரு கனாக்காலம் 😍 இந்த பிள்ளைகள் நேர்மையை நம்பி வளரட்டும், அதற்குள் இந்த பூமி சுத்தமாகட்டும்! ❤️

அரசியல்

எப்பவும் “வாழ்க” கோஷம் கேட்க விரும்பும் அரசியல்வாதிகள் மக்களை “வாழ வைக்க வேண்டும்” இல்லையென்றால் மொத்தமாய் ஒழிக!
----------------

எந்த கட்சி, எந்த அரசியல்வாதி, மக்களின் கருத்துகளை நிதானத்தோடு எதிர்கொள்வது என்று யோசிக்கிறேன், “எப்படி சுத்திப் பார்த்தாலும் இருட்டாத்தான்யா இருக்கு!” 🙄🙄🙄
#Fascist_parties
-------------------------

ஒவ்வொரு குற்றமும் ஒரு வியாபாரம்
பேரத்தின் தன்மைக்கேற்ப செய்திகள் மாறும்
இந்தியாவில் 

------------------------------

அவரவர் தேவைகளை நிறைவேற்றிய பின்னர் நமக்கு கிடைப்பது ஒன்று அறிவுரை அல்லது வாழ்க்கைப்பாடம், வலித்தாலும் புன்னகையுடன் கடக்க வேண்டும் பாதைகளையும் அனுபவங்களையும்!

புனைவுகள்

கொலைகாரனையோ, கொலைகாரியையோ காவல்துறை கண்டுபிடிக்கும் முன்பு, சம்பந்தபட்டவர்களின் வாக்குமூலங்கள் கிடைக்கும்முன்பு இந்தப் பத்திரிக்கைகள் மட்டும் கொலை நடந்தது எப்படி, யார் செய்தது, அவர்கள் எப்படிபட்டவர்கள், அந்த வீட்டு நாய்க்குட்டி முதல் கன்றுகுட்டிவரை என்று எல்லாவற்றையும் எல்லோரையும் பற்றி எழுதிவிடுகிறார்கள், நியாயமாய் காவல்துறை இவர்களை பிடித்துதான், குற்றத்திற்கு உடந்தையாய் இருந்ததாய் சொல்லி விசாரிக்க வேண்டும், புலனாய்வு என்பதை பெரும்பாலான பத்திரிக்கைகள் கற்பனை புனைவு என்றே புரிந்துக்கொண்டிருக்கின்றன, அதிலும் கொலையாளி பெண் என்று காவல்துறை ஒரு கோடு போட்டால் இவர்கள் கற்பனை குதிரையில் ரோடே போட்டுவிடுகிறார்கள், இதையெல்லாம் படிக்கும் போது எத்தனை வக்கிரமானவர்கள் நிருபர்களாய் இருக்கிறார்கள் என்பதும், எழுத்தாளர்களாய் இங்கே உலாவுகிறார்கள் என்பதும் புரிகிறது! 🙄🤨

சுறுசுறுப்பானவர்கள்

ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகத்திலேயே சுறுசுறுப்பானவர்கள் பட்டியலை அவர்கள் சராசரியாக ஒருநாளைக்கு நடக்கும் நடையை வைத்தும் இன்னும் சில காரணிகளை வைத்தும் தயாரித்திருக்கிறது, அதில் முதல் மூன்று இடங்களில் முறையே சீனா, ஜப்பான், ரஷ்யா என்று இருக்கிறது, எந்த இடத்திலும் இந்தியாவை காணோம், இந்த ஆட்களை சென்னை, டெல்லி, பெங்களூர் போன்ற பெருநகர சாலைகளில் தனியே சாலையை கடக்க விட்டிருக்கவேண்டும், பச்சை சிக்னலுக்காக காத்திருக்கும் நொடிகளை கூட விநாடிக்காமல் பறக்கும் நம்முடைய சுறுசுறுப்பில் அந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் இந்தியாவின் நகரங்கள் மட்டுமே இருந்திருக்கும்! 😉🙄

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...