Showing posts with label நிகழ்வுகள்! Politics!. Show all posts
Showing posts with label நிகழ்வுகள்! Politics!. Show all posts

Wednesday, 15 April 2020

இந்திய_ஜனநாயகம்

பாதி உலகம் அடிமைப்படுத்தி
பிரிட்டன் பெருமிதம் கொண்டது
இரண்டு அணுகுண்டுகள் தாங்கி
ஜப்பான் நிமிர்ந்து நின்றது
செர்னோபில் வெடித்து
ரஷ்யா விழித்துக்கொண்டது
ஆப்கானிஸ்தான் வளர்த்து
அமெரிக்கா பாடம் கற்றது
இனப்பகையில் மூழ்கி
இஸ்ரேல் படைபெருக்கியது
உரிமைக்காக பாலஸ்தீனம்
போராடிக் களைக்கிறது
மாபெரும் வர்த்தகம் வளர்த்து
சீனா உலகளாத் துடிக்கிறது
அடிமைப்பட்ட நாடுகளும்
அடிமைப்படுத்திய நாடுகளும்
மக்கள் உரிமையை நிலைநாட்ட
சுதந்திரம் பெற்று
எழுபத்தியிரண்டு ஆண்டுகளாகியும்
#இந்திய_ஜனநாயகம் மட்டும்
இன்னமும் அடிமைப்பட்டே கிடக்கிறது!

ஸ்டெர்லைட்

பள்ளிகளை மூடி
சாராயக்கடைகளை திறப்பவர்கள்
விவசாய நிலங்களை அழித்து
சாலைகள் போடுபவர்கள்
அரசுத்துறை நிறுவனங்களை மூடி
தனியாருக்கு வளங்களை தாரைவார்ப்பவர்கள்
இந்தியாவில் கால் பதிக்காமல்
வானத்திலேயே வாழ்க்கை நடத்துபவர்கள்
இலவசங்களை வீசி
ஊழலில் சொத்துசேர்ப்பவர்கள்
வரிகளை அதிகரித்துக்கொண்டும்
பற்றாக்குறை நாடகம் நடத்துபவர்கள்
ஒருபக்கம் ப்ளாஸ்டிக் தடைசெய்து

 மாசுக்கட்டுபாடு நாடகம் நடத்தி
மறுபக்கம் நீர், நிலம் காற்று மாசுப்படுத்தும்
ஆலைகள் வளரச்செய்பவர்கள்
ஒருநாளும்
#ஸ்டெர்லைட் ஆலைக்கு
எதிராக துரும்பைக்கூட
கிள்ளமாட்டார்கள்!

Saturday, 20 April 2019

நியாயப்படுத்திக்கொள்வோம்

ஸ்னைப்பர்
குண்டுகளை வைத்து
வீழ்த்தியபோது
அவர்களை
நக்ஸலைட்டுகள்
என்றும்,

அவ்வப்போது
திருட்டு வழக்குகளும்,
கஞ்சா வழக்குகளும்,
குண்டர் தடுப்புச்சட்டங்களும்
பாய்ந்தபோது,
அவர்களை
திருடர்கள்,
பொது அமைதிக்கு
சேதம் விளைப்பவர்கள்
என்றும் கூறி
நம்முடைய கைக்கட்டி
வேடிக்கைப்பார்க்கும்
நிலைக்கு
காரணங்கள்
தேடிக்கொண்டோம்


பல லட்சம் மரங்கள்
அழிக்கப்படும்போது
மரண ஓலம் கேட்காமல்
காதுகளை மூடிக்கொண்டு
சாகும் மரங்களை
நக்ஸலைட்டுகள் என்றோ
பொது வழியை
அடைத்துக்கொண்டு
அமைதிக்கு பங்கம்
ஏற்படுத்தியவர்கள் என்றோ
வளர்ச்சி வீக்கம் என்ற
பொய்களைக்கொண்டோ
இதை நியாயப்படுத்திக்கொள்வோம்
ஏ, அடிமை தேசமே! 😓😓😓

சுடுகாடே மிச்சம்

ஒரு முதல்வரை 75 நாட்கள்
மறைத்து வைத்தபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

ஓட்டுகளை பெறாமல்
புறவழியில் ஆட்சியை பிடித்தபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்


கல்விச்சாலைகளை மூடி
வீதி முழுக்க சாராயக்கடைகளை
திறந்த போது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

அந்த மாணவன்
மேம்பாலத்திலிலிருந்து குதித்து
தற்கொலைச் செய்துகொள்ள
கண்டுக்கொள்ளாமல் சிரித்தபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

விவசாயிகள் போராட்டத்தில் சாக
மீனவர்கள் குண்டுபட்டு சாக
எதற்காகவும் இல்லாமல்
தம் பதவிக்காக டெல்லி விரைந்தபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

எதையும் செய்யாமல்
கடவுளாய் உருவகப்படுத்தி
விளம்பரம் செய்துகொண்டபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

நீட்டின் போர்வையில்
மாநிலத்தின் கல்வியுரிமை பறிக்கப்பட்டபோது
குனிந்து கும்பிடு போட்டுக்கொண்டிருந்தபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

நீட்டின் மெத்தனத்தில்
உயிர்கள் பலியானபோது
தனியார் அமைப்பின் மீது பழிதூக்கிப்போட்டபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

அணையை காக்க
தெர்மாக்கோலில் படகுவிட்டு
அதையும் சில லட்சங்களென
செலவு கணக்கு எழுதியபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

300 மரங்கள் நட
எட்டு லட்சம் செலவென்று
கல்வெட்டு செதுக்கியபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

99 நாள் நடந்தப் போராட்டத்தில்
100 ஆவது நாளுக்கு
144 போட்டபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

குருவியைக் கூட சுட
உரிமையல்லாத நாட்டில்
மனிதர்களை மயிர்களாக கருதி சுட்டபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

உயிருக்கு ஒரு தொகை
உறுப்புக்கு ஒரு தொகை
என்று பேரம் பேசிய போது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

ஜல்லிக்கட்டின் நிறைவில்
கட்டவிழ்த்த வன்முறையின்போது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

எதற்கும் விழிக்காமல்
எல்லாவற்றையும் நகைச்சுவையாய்
எடுத்துக்கொண்டால்
நாளை விழிக்கும்போது
#சுடுகாடே மிச்சமிருக்கும்!

Bansterlite

ஜூலை மாதம் 2014 ஆம் வருடம்
“ஆந்திர மாநிலம் கிழக்கு கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த நகரம் எனும் கிராமத்தில், கெயில் நிறுவனத்தின் (இந்திய எரிவாயுக் கழகம்) இயற்கை எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 19 பேர் தீயில் கருகி பலியாயினர்”
26 ஆம் தேதி ஏப்ரல் மாதம், 1986 ஆம் ஆண்டு
உக்ரைன் சோவியத் யூனியனில் புகழ்பெற்ற செர்னோபில் அணு விபத்து ஏற்படுகிறது. உடனடியாகவும், அதற்கு பின்பும் நூற்றுக்கணக்கான பேர்கள் அணுவினால் கொல்லப்படுகிறார்கள்!
நிற்க! இப்படி உலகளவிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அழிவை ஏற்படுத்திய அணுவுலைகள், கெயில், மீத்தேன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் திட்டங்கள் எல்லாம் மொத்தமாய் தமிழகத்தில், இதற்கு, வரலாற்றில் அடுத்தக்கட்டமாக;
மே 22 2018 ஆம் ஆண்டு
ஸ்டெர்லைட் - வேதானந்தா குழுமம் - முதலாளிகள் - அகர்வால்கள்
தனியாருக்காக தமிழக அரசு துப்பாக்கிச்சூடு நடத்தி 15 க்கும் (எண்ணிக்கை ஏறிக்கொண்டு) மேற்பட்டவர்களை கொன்றது!
ஜல்லிக்கட்டு வன்முறை, இப்போது இந்த வன்முறை, இன்னமும் மிச்சமிருக்கிற ஆட்சிக்காலத்தில் இப்படிப்பட்ட சாதனைகள் தொடரும், அதற்கு காவல்துறையும் பக்க பலமாக இருக்கும், அத்தனையும் செய்துவிட்டு தைரியமாக ஓட்டுக்கேட்டு வருவார்கள், மக்களின் மறதியின் மீதும், சாதிப்பற்றின் மீதும், எதையும் காசுகொடுத்து வாங்கிவிடும் சந்தை நிலவரத்திலும் இவர்களுக்கு அசாத்திய நம்பிக்கையுண்டு!!!
#Bansterlite

பெரிய திருடர்கள்

நம்முடைய காவல்துறைக்கு அசாத்திய திறமை இருக்கிறது, முதல்வர், பிரதமர் வருகிறார்கள்
என்றால் ஒரு சின்ன தடங்கல் கூட இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள், ஒரு கலெக்டரின் மொபைல் போன் காணாமல் போய் விட்டால் ஒரே நாளில் கண்டுபிடித்து விடுவார்கள், எந்தக் காட்டுக்குள் எந்த வீரப்பன் இருந்தாலும் கண்டுபிடித்து விடுவார்கள், மெரீனாவில் தடையுத்தரவு என்றால் இரண்டு சாலைகளுக்கு முன்பே ஒரு ஈ காக்கையை கூட நுழைய விட மாட்டார்கள், ஒரு மாபெரும் கூட்டத்தை கலைக்க வேண்டுமென்றால், மெரீனாவில் கலைத்ததை விட வேகமாய் கலைத்துவிடுவார்கள்! 

தூத்துக்குடியில் கலெக்டர் அலுவலகம் வரை வரவிட்டு, பின்பு ஸ்னைப்பர்கள் வைத்து சுடுவதில் எல்லாம் திட்டமிடல்கள் இல்லை, மக்கள் தான் அராஜகம் செய்தார்கள், எல்லா காணொளிகளும் அப்படித்தான் வரும், பின் அதில் வந்த அனைவரும் எந்த வயது என்றாலும் தீவிரவாதிகள், அப்பாவி அரசாங்கத்துக்கும், காவல்துறைக்கும் இதில் ஒரு பங்கும் இல்லை, ஆனால் இனி எந்தப் போராட்டம் என்றாலும் ஸ்னைப்பர்கள் நிச்சயம் என்ற பயத்தை உருவாக்கியிருக்கிறார்கள், ஸ்டெர்லைட் ஆலை, வேறு எதாவது விஷ ஆலை, நாடு முழுக்க அணுவுலைகள் என்று எல்லாவற்றையும் தமிழ்நாட்டில் அமைத்துக்கொள்ளலாம், முழுதாய் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் வரை ஆட்சி செய்துகொள்ளலாம், பின்பு பினாமி சொத்துக்கள் இருக்கும் தேசத்துக்கு சென்று விடலாம்!

தமிழ்நாட்டின் நான்கு மூலைகளிலும் அழிவுத்திட்டங்களை செயல்படுத்தி, மக்களை போராட்டக்காரர்களாக்கி, அவர்களை நடுவீதியில் சுட்டுக்கொன்று, ஒரு பக்கம் அவர்களை தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தி, மறுபக்கம் முதலை கண்ணீர் வடித்து நிவாரணம் தந்து, அரசு வேலை தந்து அடிமையாக்கும் இந்த சாணாக்கியத்தனம், சாணாக்கியனே அறியாததது
இத்தனை உயிர்கள் போராட்டங்களில் பலியாவது எதற்கு என்று எண்ணினால், நாட்டின் வளங்களை காப்பதற்காக, அரசு இதைச் செய்தது எதற்காக என்றால் தனியார் முதலாளிகளுக்காக, இந்த நாடு சீரும் சீறப்புமாய் இருக்கட்டும், சுட்டுக்கொள்ளும் காவல்துறைதான் நண்பர்கள், சுடச்சொல்லும் அரசுதான் நம்முடைய ஆட்சியாளார்கள், எது எப்படி இருந்தால் என்ன அதுதான் செத்தபிறகு காசு வருகிறதே, போதும்!

அடிமை சமூகம்


Image may contain: text

தள்ளாடும் தன்மானம்


Image may contain: text

Sunday, 17 February 2019

21 ஆம் நூற்றாண்டின் மனித வளர்ச்சி என்பது புற்றுநோயின் வீக்கம்!

21 ஆம் நூற்றாண்டின் மனித வளர்ச்சி என்பது புற்றுநோயின் வீக்கம்!
இந்தக்கட்டுரையை எப்படி ஆரம்பிக்கலாம்? புள்ளிவிவரங்களோடா? எத்தனைக்கோடி புள்ளிவிவரங்கள் கொட்டிகிடக்கிறது, அவையெல்லாம் என்ன மாற்றத்தை கொண்டுவந்துவிட்டது?

எகிப்திய நாட்டின் இருபது வயது இயக்குநர் சாராவின் குறும்படத்தைக் காண நேர்ந்தது, அதில் 21ஆம் நூற்றாண்டு எத்தகையது என்கிறார்! ஒரு கட்டமைக்கப்பட்ட முதலாளித்துவம் சிலபேரை செல்வந்தர்களாக்க, பலகோடி மக்களை ஏழைகளாகவே வைத்திருக்கிறது, உலக மக்கள் தொகையில் ஒரு சதவீத மக்களிடம் உலகின் முப்பத்தைந்து சதவீத செல்வம் கொட்டிக்கிடக்கிறது, இது எப்படி சமத்துவத்தை நிலைநிறுத்தும்?

இந்தக்கட்டமைக்கப்பட்ட சமுதாயத்தில், அதிர்ஷ்டம் மட்டுமே ஒருவருக்கு உரிமையை தருகிறது, இன்று உங்கள் உடைமை உங்களிடம் இருக்கிறது என்றால் அது உங்களின் அதிர்ஷ்டம் மட்டுமே, ஒருவரின் அதிர்ஷ்டமும் கூட மற்றவரின் மறுக்கப்பட்ட நீதியில்தான் கிடைக்கிறது! இங்கே பக்கோடா சுடுபவன் அரசாங்கத்திடம் 43000 கடன் வாங்கி வியாபாரம் செய்வது அவனது அதிர்ஷ்டம், நாளை அவன் விஜய் மல்லையாவனால், அது அவனது நல்லநேரமே, அதே நேரம் வாங்குகிற மாதச்சம்பளத்தில் ஒருவனிடம் வரியைப்பிடுங்கிக்கொள்கிற அரசாங்கம், அவனுக்கு குறைந்தப்பட்சம் எந்த கட்டமைப்பு வசதிகளையும் சாலைமுதற்கொண்டு செய்து தருவதில்லை! உங்களின் நீதி என்பதும் மற்றவர் காட்டும் கருணையில்தான் அமைந்திருக்கிறது!

இங்கே நீங்கள் பக்கோடா சுட்டாலும், வரிகள் கட்டுவதற்காகவே உழைத்தாலும், இங்கே வெற்றி என்பதும் “உங்களுக்கு என்ன தெரியும் என்பதைவிட யாரை தெரியும் என்பதில் தான் அடங்கியிருக்கிறது!”
நம்முடைய பள்ளிகளும், கல்லூரிகளும் நாம் பிறருக்கு அடிபணியவே கற்றுத்தருகின்றன, சுயசிந்தனையற்ற ஒரு சமுதாயம், ஒரு மனிதனின் வெற்றியாக பணத்தையும், பதவியையும், திரைவெளிச்சத்தையும், புறத்தோற்றத்தையுமே காண்கிறது, உண்மையான திறமைகளை அல்ல!

ஒரு மைதானத்தில் உதைக்கப்படும் ஒரு பந்து பலகோடி மக்களை உசுப்பேற்றுகிறது, வெறி கொள்ள வைக்கிறது, அதற்குப் பாய்ச்சப்படும் மீடியா வெளிச்சம், கடைகோடியில் இன்னமும் வறுமையில் உழலும் மக்களையோ, பட்டினிச்சாவுகளையோ காட்டுவதில்லை, ஆடம்பரப்பொருட்களில் இருக்கும் மோகம், சகமனிதர்களை நேசிப்பதில் இல்லை, ஸ்மார்ட் போன்கள் இல்லாமல் இங்கே பலரால் வாழ்ந்துவிட முடிவதில்லை, காடுகள் அழிக்கப்படுவதைப்பற்றியோ, நம்முடைய சுயநலத்தில் பூமி குடையப்படுவதைப் பற்றியோ, பூமி சூடாவதுப்பற்றியோ, உணவுச்சங்கிலியில் நம் கை ஓங்கியிருக்கிறது என்பதற்காக கண்டபடி உயிர்களை வதைப்பது பற்றியோ நமக்கு கவலையேதும் இல்லை, நாம் வாழும் பூமி, நாம் வகுத்த விதிமுறைகள் நமக்கானது மட்டுமே, அது பூமிக்கோ நம் தலைமுறைக்கோ, பிற உயிர்களுக்கோ தீங்கு விளைவிப்பதைப் பற்றி நமக்கு கவலையேதுமில்லை, இப்படித்தான் நாம் எதை கொண்டாட வேண்டும் என்று மீடியா முடிவு செய்கிறது!

திரைவெளிச்சத்தில் இருக்கும் போலியான மனிதர்களை நேசிக்கக் கற்றுக்கொள்கிறோம், நிசர்சனத்தில் உழைப்பவர்களை அலட்சியப்படுத்துகிறோம், சுயநலம் என்பதை வெற்றியாகவும், அன்பு என்பதை பலவீனமாகவும் கட்டமைத்திருக்கிறோம்! “பிறக்கும் குழந்தைகள், தன்னுடைய நிறத்தையோ, இடத்தையோ, சாதியையோ, மதத்தையோ தேர்வு செய்ய முடிவதில்லை, இருப்பினும் அதைவைத்தே மனிதர்களின் உரிமைகளை நிர்ணயிக்கிறோம், இது எப்படிச்சரியாகும்?”

அரசியலில் ஒருவன் ஊழல்களை திறம்பட செய்து, சுயலாபத்திற்காக காலில் விழுவதும், பின்பு கழுத்தைப்பிடிப்பதுமாக இருந்தால், “ஆகா எப்படிப்பட்ட புத்திசாலி!” என்று புகழ்கிறோம், இந்தச் சமுதாயத்தில் புத்தியும், வெற்றியும் இப்படித்தான் அடையாளம் காணப்படுகிறது, வெற்றி என்பது இப்படித்தான் என்று நிர்ணயிக்கப்படுகிறது, நேர்மறை என்பதும் எதிர்மறை என்பதும் கிடைக்கும் சூழ்நிலையைக்கொண்டு மாறுபடுகிறது அல்லது மாற்றிக்கொள்ளப்படுகிறது, ஓட்டுக்குக் காசுக்கொடுத்தால் வாங்கிக்கொள், மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய் என்பது நவீன வெற்றியின் தாரக மந்திரமாகவும், புத்திசாலித்தனத்தின் குறியீடாகவும் மாறியிருக்கிறது! இதில் தனித்தன்மை என்பது மாட்டிக்கொள்ளாமல் திருடுதலில் இருக்கிறது, மனசாட்சியில், மனிதத்தன்மையில் இல்லை!

முந்தைய நாளின் விடியலில் நான்கு மணிப்பொழுதில் வாகனங்களற்ற நெடுஞ்சாலையில் அலுவலகத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தப்போது முன்னே வேகமாய் சென்றுக்கொண்டிருந்தக்காரொன்று சற்றுத்தடுமாறி நின்று பின் ஒதுங்கிச்சென்றது, அதன் பின்னே சென்றுக்கொண்டிருந்த என் வாகனத்தை நிறுத்த நாயொன்று நடுரோட்டில் அடிப்பட்டு குற்றுயிரும் குலைவுயிருமாக கிடக்க, வாகனத்தை நடுரோட்டில் நாய்க்கு அரண்
கட்டி நிறுத்தி, இடதுபுறம் வந்த வாகனத்தை உதவிக்கேட்டு நிறுத்தினேன், நான் நிறுத்தி இறங்கவும், இறந்துக்கொண்டிருந்த நாயை எழுப்பிவிடும் முனைப்பில் அதுவரை நடுரோட்டில் போராடிக்கொண்டிருந்த மற்றொரு நாயொன்று ஏதோ ஒரு நம்பிக்கையில் விலகிச்சென்றது, சில இளைஞர்கள் நிறுத்திய வாகனத்திலிருந்து இறங்கி அதன் வாயில் நீருற்ற நாயின் உயிர் அடங்கியது, பின்பு இறந்த நாயின் உடலை சாலையின் மறுப்பக்கம் எடுத்துச்சென்று பாதுகாப்பாய் நகர்த்தியப்பின் வீடு வந்துச்சேர்ந்தேன், ஒரு இறப்பைக்கண்டுவிட்டு வந்தப்பின் உறக்கமில்லை, வேகமாய் மோதியவனுக்கும், வேடிக்கைப் பார்த்தவர்களுக்கும் அது வெறும் நாயின் உயிராய் இருக்கலாம், ஆனால் நாம் வாழும்
பூமியில் மனிதர்களாகிய நாம் நம்முடைய மேதாவினத்தை இப்படித்தான் நிறுவியிருக்கிறோம், பேசத்தெரிந்த சகமனிதர்களை நிறம், நாடு, சாதி, மதம் என்று பேதம் காட்டி உரிமைகளை வரையறுத்தது மட்டுமல்லாமல் சக உயிர்களுக்களான மிருகங்களுக்கும், இயற்கைக்கும் நம்முடைய தேவைகளுக்குட்பட்டே நீதியை வைத்திருக்கிறோம்!

இந்த நவீன மனிதர்களின் கட்டமைக்கப்பட்ட இயந்திர உலகத்தின் வேறுபாடுகளும், போலித்தன்மைகளும் எப்போது முடிவுக்கு வரும்? எந்திர மனிதர்களை தரவுகளை வைத்தும் நம் வெற்று புத்திச்சாலித்தனத்தின் அடித்தளத்தை வைத்தும் உலகை நிர்மாணிக்கும் வேளையில், என்று நம்முடைய உண்மையான புத்திசாலித்தனம் சரியான சமூகநீதியை அனைவருக்கும் அனைத்துக்கும் சாத்தியப்படுத்துவதில்தான் உள்ளது என்பதை உணரப்போகிறோம்?!

அந்த மாற்றம் எப்போது வரும், நாம் எப்போது விழித்துக்கொள்ளப்போகிறோம்?

Image may contain: one or more people

தப்பிவிடும் வாய்ப்புகள்

கூரிய ரம்பமொன்று
அறுப்பதையறியாமல்
கிளையின்
முனையிலொரு அணில்
பழத்தினை சுவைக்கிறது
மாற்றம்
எத்தகையதென்பதை
உணராமல்
வாக்குச்சாவடியில்
ஓட்டை விற்றுப்பெற்ற
மூலதனத்தினை
மக்கள் மனம் ரசிக்கிறது
முன்னதில் அணில்
தப்பிவிடும் வாய்ப்புகள்
அதிகம்!
Image may contain: outdoor

நிகழ்வுகள்

அவசரத்திற்கு, இரண்டு கிலோமீட்டர் குறைவான தூரத்திற்கு ஆட்டோ வை அழைத்தால் 50 ரூபாய் என்றார், அதற்கு பஸ் கட்டண உயர்வை காரணம் காட்டினார், “வெயில், மழை, திரும்பும் போது சவாரிக் கிடைக்காது, ஐடி ஊழியர், ஸ்டிரைக் வரிசையில சம்பந்தமேயில்லாம பஸ் ஃபேர் காரணம் காட்டுறீங்க?!” என்றால், “ஹி ஹி ஆட்டோ டிரைவர்னா அப்படித்தான்மா” என்கிறார் ஆட்டோ டிரைவர்!
என்ன செய்வது, சட்டமன்ற ஏழைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாய் ஊதிய உயர்வு அளித்துவிட்டுதான் எடப்பாடி அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது, இதுபோன்ற முன்யோசனையுடன் செயல்படும் மக்களுக்கான அரசை குறை சொல்லவா முடியும்?!”

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...