Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, 20 February 2023

வாழ்தலின் நொடிகள்

 

மனிதர்கள் வருகிறார்கள்
மறைகிறார்கள்
புத்தாண்டும் வருகிறது
மறைகிறது
வாழ்தலின் நொடிகள்
மட்டுமே
நம் கைகளில்!
❤️

No photo description available.

மாறும்

 No photo description available.

வேண்டும்

 No photo description available.

மருந்து

 May be an image of text that says 'உடைந்து நொறுங்கி போனாலும் சிதறல்களை பொறுக்கி சேர்த்து வைத்து திடமாக்கப்பட்ட சிறகில் மீண்டும் பறப்பேன் சோதனைகள் தரும் காலமே மீண்டு எழ வைக்கும் மருந்து! -Amudha Your uote.in'

அமைதியின் வாசம்

 May be an image of text that says 'அமைதியின் வாசம் பூக்களின் மணங்களில் மண்வாசனை தரும் மழையில் ஊர் உறங்கும் நேங்களில் ஆர்ப்பாட்டதுடன் சிலிர்த்து எழுகிறது! -Amudha 如 YourQuote.in uote.in'

கடந்து போகும்

 May be an image of text that says 'இன்னும் தீரவில்லை தூய அன்பின் தேடல்கள் இன்னும் தேயவில்லை ஏமாற்றங்களின் காட்சிகள் இன்னும் மறையவில்லை காயங்களின் வடுக்கள் இன்னும் காணவில்லை நம்பிக்கையின் கரங்கள் ஆனாலும் லும் மலர்ந்து சிரிக்கின்றது வாழ்க்கை இதுவும் கடந்து போகுமென! Amudha YourQuote.in'

நரகத்தின்_கட்டமைப்பு

கதிர்வீச்சின் வெம்மையில்
குருவிகள் காணாமல் போனது
வாய்க்கால்கள் சாக்கடையானதில்
தவளைகள் இல்லாமல் ஆனது
இரையே அருகிப்போனதில்
பாம்புகளும் அருகிவிட்டது
மின்சார வேலிகளில்
யானைகளும் மரித்துப்போனது
வண்ணமயமான சிட்டுக்குருவிகள்
கூண்டுகளுக்குள் அடைப்பட்டது
பேசும் கிளிகள் பேசுவதனாலேயே
மனிதர்களிடம் சிறைப்பட்டது
பூச்சிக்கொல்லிகளில்
புழுக்களும் மக்கிப்போனது
கடைகளின் இனிப்புப்பண்டங்களில் கூட
எறும்புகள் தள்ளிப்போனது
பிற உயிர்களை அழித்து
தமக்கென வடிவமைத்துக்கொள்ளும்
உலகத்தை நகரமென்றும் நாடென்றும்
மனிதர்கள் இப்படித்தான்
அறிவித்துக்கொல்(ள்)கிறார்கள்!

No photo description available.

அன்பு

 

விரல் முனையில்
தட்டச்சப்படும் வார்த்தைகளில்
உயிர்ப்பில்லை
கைபேசி வழியில்
கடத்தப்படும் மொழிகளில்
அன்பில்லை
நேரில் நலம் கேட்கும்
பார்வைகளில் கருணையில்லை
வலிகள் தந்த சூழ்நிலைகளில்
வந்த காயச்சுவடுகள்
நினைவிலில்லை
இருண்டு கிடக்கும் வெற்றிடத்தில்
ஒளியேற்றும்
எண்ணமுமில்லை
இருந்தும் என்ன
அவர்களிடத்தில் இல்லாததை
இங்கேயிருந்து எடுத்துச்செல்லட்டும்
என்று எப்போதும்
சிலர் புன்னகைக்கிறார்கள்!

பக்தி

அவரவர் மதங்களின்
கடவுளரின் ஊர்வலம் வருகிறது
மக்கள் கூட்டத்தில்
எல்லோரும்
கடவுளை நெருங்கிவிட
முயல்கின்றனர்
உடலளவில் நெருங்கி
கடவுளையோ தேரையோ
தொட்டுவிட நினைக்கும்
மனிதர்களின்
மனங்களை விட்டு
தூர செல்கிறார்கள் கடவுளர்கள்
கடவுளுக்கு கிட்டப்பார்வையென்று
இன்னும் நெருக்கி கொள்(ல்)கிறார்கள்
பக்தர்கள்!

 

No photo description available.

உதிர்ந்த சொல்

 May be an image of text that says 'உதிர்ந்த சொல் உதிர்ந்ததுதான் நீ ஒரு மன்னிப்பையோ ஆற்றுப்படுத்தும் அன்பையோ வெளியிடாமல் மேலும் மேலும் இறுக்கும்போது உடைந்த இதயம் உடைந்ததுதான்! -Amudha YourQuote.in'

ஓரவஞ்சனை

 May be an image of text that says 'Your uote.in உன் நினைவே ஆறுதலும் வேதனையும் இனிப்பையும் கசப்பையும் இணைத்தே வழங்குவது வாழ்க்கையும் நீயும் எனினும் உனக்கு கசப்பை நான் தந்ததேயில்லை கடவுளின் ஒரவஞ்சனை போல எப்போதும்! -Amudha'

மயில் தோகை போல்

 May be an image of text that says 'மயில் தோகை போல மனதை வருடுகிறாய் வானவில்லை போல் கண்கள் நிறைக்கிறாய் சோர்ந்து போகையில் நம்பிக்கை தருகிறாய் இந்தச் சிறிய வாழ்க்கையில் வாழ்வதற்கான ஆசானாகிறாய் உன்னை நாயென்றும் பூனையென்றும் உரைக்காமல் தோழென்றும் தோழியென்றும் நிறைவு செய்கிறேன்! Amudha YourQuote.in'

ஆணிவேர்_ஆட்டம்

 

இராவணனிடமிருந்து மீண்டபின்
சந்தேகித்த ராமனை விட்டு
ஒரு சோமனை மணந்தாள்
 
ஆடலரசியின் பின்னே
கோவலன் செல்ல
உதவாதவனுக்காக ஊரையெரிப்பது
வெட்டிவேலையென்று
மேலே படிக்க
அப்பன் வீடு சென்றாள்
 
நடுஇரவில் ஞானம் வேண்டி
விட்டுச்சென்ற சித்தார்த்தனை
தேடிப்பிடித்து மகன் ரகுலனை அவனிடம் ஒப்படைத்து
தேசாந்தரம் சென்றாள்
 
குடித்துவிட்டு கும்மாளமிட்ட
கணவனை வெட்டிவிட்டு
சிறைசென்றாள்
 
ஒருதலைக்காதலால்
தொல்லைக்கொடுத்தவன் மீது
ஆசிட் ஊற்றினாள்
கல்லூரி சென்ற
 
இப்படி பகீரென்று வந்த
காட்சிகளில் “ஒழுக்கம்” கெட்டுவிட்டதாக புலம்பி,
நாடு நாசமானதாக துடித்தது
இந்திய ஆண்சமூகம்!

அறியாமை

 May be an image of text that says 'எதையோ நினைத்து எதையோ பேசி எதையோ உணர்ந்து எதையோ இழந்து பேசி தீர்த்துவிடாமல் உணராமலே உணர்ந்ததாய் எண்ணி உறவு முறித்து விலகிப்போகிறோம்! Amudha ×E MMM Your uote.in'

மௌனத்தின் பொழுதுகள்

 May be an image of sky and text that says 'மௌனம் தழுவிய காலையில் சத்தமாய் சிறகடிக்கிறது பறவைகள் மகிழ்ச்சி சிறகுகளில் இருக்கிறது என்று பரிகசிக்கிறது என் மௌனத்தின் பொழுதுகள்! Amudha YourQuote.in uote.in'

குளிரட்டும் பூமி

 May be an image of 1 person and text that says 'நினைவுகளை கிளறிச் சென்றாய் ஏனோ மேகம் சூழ்ந்தது போல இருண்டு கிடக்கிறது மனது மழைத்தூறலாக வந்துவிடேன் கொஞ்சம் குளிரட்டும் பூமி! -Amudha Vα Youruote.in'

அலப்பறைகள்


அவசர ஊர்திகளை விட
அதிகமாய் ஒலிப்பான்களை அலறவிட்டு
விரைகின்றன
கட்சிக்கொடிகளைக்
கட்டிக்கொண்ட வாகனங்கள்
விரையும் வேகத்துக்கு
மக்கள் பணிகள் நிறையுமோ
என்று நோக்கினால்
அதே குண்டும் குழியுமான சாலைகள்தான்
ஆனால் சீறும் அந்த வாகனங்களோ
உயர்தரமான மகிழுந்துகள்! 😉

 

May be an image of 1 person, car, street, road, tree and sky

தோழமை

 

எங்கேயோ நிற்கிறாய்
திக்கு தெரியாமல் தவிக்கிறாய்
யார் யாரையோ உறவென்றாய்
எவர் எவரையோ நட்பென்றாய்
காற்று வீசும்போது
கலைந்திடும் மேகம் போல
மோகம் தீர்ந்ததும்
விலகும் காதல் போல
தேவை தீர்ந்ததும்
பறந்திடும் உறவுக் காகிதங்கள்
இதில் உண்மைத்தேடி
நீயும் தவிப்பதென்ன?
பொய் பிம்பங்களை நாடி
நாளும் களைப்பதென்ன?
மழைநாளில் மின்னும் வானவில்
காணாமல் போகும் கோடையில்
எதற்காகவோ இந்தச் சோகம்
தீருமோ மனதின் தாகம்
வண்ணத்துப்பூச்சி வாழ்க்கையில்
உணர்வுகளின் தேடலில்லை
கடமைகளை கடக்கையில்
தேடல்களில் அர்த்தமில்லை
மழைத்துளியை பருகிவிடு
வெப்பக்கதிரில் கரைந்துவிடு
மனங்களை கடந்துவிடு
அன்பினை மட்டும் தந்துவிடு
மலரும் பூப்போல வாழ்ந்துவிடு
விழும்போது ஆசையும் விடு
மெல்லத் தணியட்டுமே பூமி
சுமைகளை விட்டுவிடு!
எங்கேயும் நிற்காதே
திசையின்றி் தவிக்காதே
உறவெல்லாம் உறவல்ல
இரவுகள் எல்லாம் இருட்டல்ல
நீயே உந்தன் நம்பிக்கை
வாழ்ந்து கடக்கவே வாழ்க்கை!

 

May be an image of 1 person, outdoors and text

விட்டுச் செல்லலாம்

 May be an image of text that says 'uote.in விட்டுச் செல்கிறாய் மனதளவில் நெடுந்தூரம் மற்றுமொரு போலி முகமென்றே சலித்துக் கொள்கிறேன் அன்பெல்லாம் கானல்நீரே பயணத்தில் கூட அது தாகம் தீர்ப்பதில்லை பெருமழையும் நீயில்லை சுமக்க முடியா மேகம் சட்டென்று தெளித்துவிட்டு சென்றதை ஊற்றுநீரென்று உவகை கொண்டது என் மாயையே பாடம் கற்றுத்தரும் பயணத்தில் மரமாக நின்றிட மாட்டேன் நதியாக கடலையும் கடப்பேன் விட்டுச்செல்லலாம்! -Amudha'

குருட்டுப்பூனைகள்

 

அவர்கள் வியாபாரம் செய்ய வந்தார்கள்
இவர்கள் முழுக்கவே வியாபாரிகள்
 
அவர்கள் நம் நாட்டைச் சுரண்டினார்கள்
இவர்களும் பொதுத்துறைகளை விற்று
தனியார் கடன்களை தள்ளுபடி செய்து
அதையே செய்துக்கொண்டிருக்கிறார்கள்
 
அவர்கள் பிரிவினைகளை வளர்த்தார்கள்
இவர்கள் பிரிவினைகளில்தான் செழிக்கிறார்கள்
அவர்கள் கொத்துக்கொத்தாக 
மக்களை கொன்றார்கள்
இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக
உதவாத திட்டங்களின் மூலம்
பிரிவினை அரசியல் மூலம் 
மக்களை கொல்கிறார்கள்
 
அவர்கள் வரலாற்றில் கொஞ்சமே கொஞ்சம்
அறிவுடன் செயல்பட்டார்கள்
இவர்கள் மறைகழண்ட அறிவோடு 
நிறைய ஆணவத்தோடு 
நாளும் வரலாற்றை திரிக்கிறார்கள்
 
அவர்களின் அரசி பெண்
பெண்ணுரிமை பேணினார்கள்
இவர்கள் தலைமை நடிகர்கள்
நாளும் வன்கொடுமைகளை மறைத்து
பாலியல் குற்றவாளிகளுக்கு துணை நிற்கிறார்கள்
 
அவர்கள் சுயநலத்துக்கேனும் நாட்டின்
கட்டமைப்பை பலப்படுத்தினார்கள்
இவர்கள் வியாபாரிகளின் சுயநலத்துக்காக
இருக்கும் வளங்களை 
அழித்துக்கொண்டிருக்கிறார்கள்
 
அவர்களிடமும்
இந்த நாட்டின் எட்டப்பன்கள் கட்சி மாறி
மதம் மாறி கொள்கை மாறி
பிறர் ரத்தத்தை உறிஞ்சினார்கள்
இவர்களிடமும் மாநிலத்துக்கு மாநிலம்
எட்டப்பன்கள் பதவிக்காக பணத்திற்காக
பல்லிளிக்கிறார்கள் 
 
சொந்த மண்ணின் மொழி, உரிமை
அழிக்கிறார்கள்
அவர்கள் மொத்தமாய் சுரண்டி 
ஓடிவிட்டார்கள்
இவர்கள் மொத்தமாய் சுருட்டிக்கொண்டு
நம்மை தேச விரோதி என்று விரட்டுகிறார்கள்
 
அவர்களும் கொள்ளையர்கள்தான்
இவர்களும் கொடூரர்கள்தான்
அவர்களிடமிருந்து விடுபட 200 ஆண்டுகளானது
இவர்களிடமிருந்து விடுபட 
சூடும் சுரணையும் மிகும் ஆண்டு வரவேண்டும்
 
எதை வேண்டுமானாலும் செய்
எனக்கு பதவியைக் கொடு என்று அடிபணிகிறார்கள்
சாதித்தலைமைகள் மதப்போர்வையில்
இவர்களை நம்பும் மக்களோ
உரிமைகளை பறிகொடுத்து ஒரு கேடுகெட்ட வரலாற்றை
வருங்காலத்திற்காக விட்டு வைக்கிறார்கள்
அவர்களும் இவர்களும் யாரென்று உலகுக்குத் தெரியும்
ஆனாலும் குருட்டுப்பூனைகளாய் மக்கள்
விடியல் வரும் காலமே உண்மையானச் சுதந்திரம்!

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...