
Monday, 20 February 2023
விண்மீன்களின்_வாழ்க்கை
உன்னுடன் வாழ்ந்த நினைவு
தூரத்தில் இருக்கும் விண்மீனாக
மனதின் ஆழத்தில் உள்ளது
அவ்வப்போது வீண்மீன்கள்
கண்சிமிட்டும் நேரமெல்லாம்
வாழ்வதற்கான உன் ஆசைகள்
நினைவில் அலையடிக்கும்
உயிர்க்கொல்லியில் இறப்பாயென
நீயும் நினைக்கவில்லை
எனக்கும் துயரம் மாளவில்லை
என்றாவது சில மனிதர்களின்
பேராசை முடியும் போது
உன்னைப்போன்ற எளிய மனிதர்களின்
சாதாரண வாழும் ஆசை
சாத்தியமாகலாம்
அதுவரை
வீண்மீன்களின் எண்ணிக்கை
கூடலாம்
என்னைப்போல யாரோ எங்கோ
இதே வேண்டுதலை வைக்கலாம்!
Subscribe to:
Posts (Atom)
The Unheard
There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...
-
My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...
-
பெண்கள் பளிங்கு பொம்மைகளாக , உழைக்கும் எந்திரமாக , பிள்ளைகளுக்கு நல்ல தாயாக , உணவு சமைப்பவளாக , ஆதரவு தரும் தோளாக , பல இடங்களில் , கேட...
-
நேற்றைய இரவை இறகென உதிர்த்து வானில் எழுகிறது குருவி! இன்றைய விடியலில் நாளைய பயத்தையும் சேர்ந்தே சுமந்து பயணப்படுகிறான் மனிதன்!




