கையில் பத்து மாத குழந்தை, வயிற்றில் ஒரு ஆறு மாத குழந்தை, பத்து மாத குழந்தையை அதட்டி உருட்டி மிரட்டுகிறாள் தாய் அதன் அழுகையை நிறுத்த......மேலும் வீரிட்டு அழுகிறது குழந்தை!
ஒரு இரண்டு வயது குழந்தை, அருகே ஒரு வயது குழந்தை, ஒரு வயது குழந்தை ஏதோ கேட்க அதை கொடுக்கவில்லை என்று இரண்டு வயது குழந்தைக்கு சரியான அடி கொடுக்கிறார் தாய்....
அதுவும் குழந்தைதானே அடிக்காதீர்கள் என்றேன், ஏன் அவன், இவனை விட ஒரு வயது பெரியவன் தானே, இதெல்லாம் தெரிய வேண்டாமா என்றாள்....வளர்ந்த உனக்கே, எது குழந்தை என்று தெரியவில்லை, இரண்டு வயதுக்கு எப்படி தெரியும் என்றேன்!
கல்வி அறிவு இல்லாதிருத்தல், இருந்தாலும் அறிவு முதிர்ச்சி இல்லாமல் இருத்தல், குழந்தைகளை தன் கோபதாபங்களின் வடிகாலாக பயன்படுத்துதல், ஊட்டச்சத்து மிக்க உணவு தாராதிருத்தல், பிற குழந்தைகளை வைத்து தன் குழந்தையை தாழ்த்தி பேசுதல்........எத்தனையோ நிகழ்வுகள் தினம் தினம் நிகழ்கிறது பெண்களாலும், ஆண்களாலும்.....வீட்டில் வன்முறை காணும் குழந்தை, அரவணைப்பு இல்லாத குழந்தை, பிறிதொரு நாளில் ஏதாகவும் ஆகலாம், சில கொடுமைகளுக்கு, சில விலங்குகளுக்கு இரையாகவும் ஆகலாம்!
பெண்களுக்கு சரியான கல்வியறிவும், சரியான வயதும், குறைந்த வயது வித்தியாசமும், பொருளாதார அறிவும், சுய சிந்தனையும், அவர்களின் திருமண வாழ்விற்கும், குழந்தை வளர்ப்பிற்க்கும் மிகவும் அவசியம்.....எல்லாவற்றிற்கும் மேல் உயிரின் அருமை தெரியாமல், தாய்மை உணராமால் இருக்கும் ஒரு பெண் தாயாவதே பெரும் தவறு......அவளை தாய்மை அடையச் செய்யும் ஆணும் தவறிழைத்தவனே!
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...பின் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே...
ReplyDelete