Monday, 22 December 2014

நவீன‬ புத்தர்கள்

போதிமரத்தினடியில் சித்தார்த்தன்
புத்தன் ஆனான்
வீதியெங்கும் டாஸ்மாக் கடைகளில்
சித்தார்த்தன்கள் குடிமகன்கள் ஆனார்கள்
அவன் துறந்ததும் இவர்கள் துறந்ததும்
குடும்பம்தான் - முன்னதில்
ஞானம் வந்தது - பின்னதில்
நாடே மந்தைகூட்டமாய் ஆனது!
‪#‎நவீன‬ புத்தர்கள்!

கீச்சுக்கள்!,

பயங்கர வாகன நெரிசலில், கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறிய ஆம்புலன்சுக்கு, சில வாகனங்கள் வழி விட, அருகில் வந்த ஆம்புலன்சுக்கு நானும் வண்டியை நகர்த்த, ரியர் வியு மிர்ரரும் இல்லாமல், ஆம்புலன்ஸ் ஒலியும் காதில் கேட்காத வண்ணம் காதில் ஹாண்ட்ஸ்ப்ரீ அணிந்துப் பாட்டுக் கொண்டே, ஒருவன் தன் பைக்கில் கிடைத்த இடைவெளியில் முன்னே நுழைந்து, அவனுக்குதான் நான் வழி விட்டதாய் நினைத்து ரொம்பச் சமர்த்தாய்க் கையை உயர்த்தி நன்றி வேறு கூறிவிட்டுச் சென்றது அந்த ஜந்து.....எங்க இருந்துடா வரீங்க?
நாளைக்கு உங்களுக்கு எது ஆனாலும் இப்படி ஒருத்தன் குறுக்கே வந்து, அந்தச் சில நிமிடங்களில் உயிர் போனால் என்ன செய்வீர்கள்?
‪#‎மந்திரிகள்‬ வரும்போதெல்லாம் வயர்லெஸ், வாக்கி டாக்கி என்று டெக்னாலஜி உபயோகப்படுத்தி வாகன நெரிசலை சரி செய்யும் போக்குவரத்து அதிகாரிகள், உயிர்களைக் காக்கும் ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்த எதையேனும் செய்யட்டும்!

கீச்சுக்கள்!

மோடியின் மந்திரிசபையில் உள்ளவர்களுக்கு இதிகாசங்களையும், புராணங்களையும் தூசித் தட்டுவதும், மந்திரங்களையும் தந்திரங்களையும் கொண்ட சமஸ்கிருதத்தை வளர்ப்பதும், பாரபட்சமாக ஒரு புதிய இந்து மதக் கோட்பாட்டை உருவாக்குவதுமே வேலையாய் இருக்கிறது.....
இந்தச் சாமியார்களை எல்லாம் கோவில் பூசாரிகளாக்கிவிட்டு, நீங்கள் சுற்றுப்பயணம் செல்லுங்களேன் ஜி, உங்கள் பயணமாவது நிம்மதியாய் இருக்கும் மோடி சர்க்கார் ஜி!
feeling determined.
---------------------------------------------------------------------------------------------------------
கடைக்குட்டியாய்ப் பிறந்துவிட்டால்
எல்லாம் கடைசியில்தான் கிடைக்கிறது/வருகிறது,
கடமைகளையும், வசவுகளையும், துயரங்களையும் தவிர!  
---------------------------------------------------------------------------------------------------

Don't pour more than what the cup can hold, anything overwhelming is futility!
----------------------------------------------------------------------------------------------------
எங்கேயும் வாழலாம், மகிழ்ச்சியும் நிம்மதியும் இல்லத்தின் அளவில் இல்லை, அது உள்ளத்தின் அளவே!

----------------------------------------------------------------
U have dug up the earth enough, now please note that there is treasure in abundance in the allocated space of Swiss, and you can produce lot of methane from the wealth engulfed corrupted ministers and officers body/stomach!
When you touch their treasure and extract their methane the resultant effect would be emission of nuclear radiation! ‪#‎Newtons‬ final theorem! 

ஞானம்

எல்லாம் இழந்தப் பிறகு
ஏது சுயம்?
இழந்தப் பின் வருவதே
ஞானம்! 😇

#‎ஒன்றின்‬ விடுதலை!

 
கண்ணீரில் ஏதும்
கரைந்திடாது
மரணத்தில் மாற்றம்
நிகழ்ந்திடாது
மலர்கள் கூட
மலர்ந்திடாது
அந்தக் கல்லறையின் முன்
மெய்யென உருகி வழியும்
உங்களின்
பொய் வார்த்தைகளால்!

அந்த மரணத்தின்
விடுதலையை விட்டு
சற்று விலகி நிற்போம்
போகும் உயிர் சுதந்திரமாய்
சுவாசிக்கட்டும் ஒரு காற்றையேனும்
இந்த பொய் சூழ் உலகை விட்டு!
‪#‎ஒன்றின்‬ விடுதலை!

சுயநலச் சுதந்திரம்!


 உன் விருந்தை முடித்துக்கொண்டு
என் உணவைத் தட்டிவிட்டாய்
உன் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு
என் உதடுகளைப் பூட்டிவிட்டாய்
மலர்களையுனக்கு நான் பரிசளிக்க
உன் முட்களால் எனக்கு மாலையிட்டாய்

சுமைகளைச் சுமந்து உன்னையும்
நான் சுமக்க,
என்னை ஒருபோதும் சுமக்காத
உனக்கு, நான் ஒரு
சுமையாகிப் போனேன்,
உணர்வுகள் மொத்தமும் உனக்கே
உரிமைபட்டதைப் போல் நீ சீறி
விழும் வேளைகளில்,
உணர்வற்று மரத்துப்போகும் என்
வலியும் கூட ஓர் உணர்வுதானே அன்பே?

மௌனமே மொழியாய் மருகி
நின்றபோதிலும்,
முயன்றுத் தோற்று வார்த்தையில்
வர்ணம் கூட்டும் போதிலும்,
எப்போதும் மாறாது உன்னிறம்!

என்றோ ஒருநாள்,
நான் தேய்ந்தொழிந்துப் போகையில்
அமாவாசை இரவில் நிலவினைத் தேடும்
குழந்தையைப் போல் நீ நிற்கக்கூடும்,
அப்போதும்
ஒரு வெளிச்சக் கீற்றை உனக்காக
உன் வாசலுக்கு அனுப்பி வைப்பேன்
இனியும் எப்பொழுதும் நீ நீயாகவே இரு
உனக்கேனும் நிலைக்கட்டும்
அந்த சுயநலச் சுதந்திரம்!

அன்பெனும் திறவுக்கோல்

 
ஆசையாய் வரும் குழந்தையை
அலுப்பாய் ஒதுக்கி நடந்தும்,
வாலைக் குழைத்துவரும் நாயை
எரிச்சலில் எட்டி உதைத்தும்,
அன்பில் உதிரும் வார்த்தைகளை
சினத்தின் குடுவையில் ஏந்தியும்,
ஈயென இரக்கும் வறுமையை
அருவெறுப்பில் அலட்சியப்படுத்தியும்,

ஒருநாள் பொழுதில்,
நீக்கமற நிகழ்த்திவிட்ட
வன்முறையின் நினைவை,
நீண்டதொரு இரவின் உறக்கத்தில்
தொலைத்தெழுகிறோம் - முந்தைய
தினம் கொல்லப்பட்டவர் உயிர்த்தெழ
மறுநாள் அன்பில் நேர்ச் செய்துவிடும்
நோக்கத்தில்!

அன்பெனும் திறவுக்கோல்
எல்லோருக்கும் வசப்படுவதில்லை!

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...