Wednesday, 9 October 2013

மழையின் சாரல்

வெப்பம் குறைந்து
குளிர்ச்சியில் நெகிழ்ந்து
இருண்ட மேகங்களை
பரவசத்துடன் பார்த்து
மழை வரும்
என்ற ஆவலில் -
மலர் வான் பார்த்து நிற்க
மழைக்கு மௌனம்
கலைக்க மனதில்லை

 black and white Flower and rain Stock Photo - 14870283
 அழுத்தம் கூடி, அது
பொழியும் வேளை -
ஒரு காற்று வந்து
அதைக் கடத்திச்
செல்லலாம்

திசை மாறி
பொழிந்து - மழை,
அதன் வேகம்
தணியலாம்
பார்த்து நின்ற மலர்
மகரந்தம் தூவி
மண்ணில் மடியலாம்

எங்கோ
ஒரு மூலையில்
விதையாய் முளைத்து
மண்ணைப் பிளந்து
மறுபடி மலர்ந்து,
அம்மழை வேண்டி
மலர் மீண்டும்
வான் நோக்கி 
நிற்கலாம் - காற்று
மனமிரங்கி - இம்முறை
மழையின் சாரல்
தூவலாம்! 

கைப்பாவை மனசு!



கோபம் வருகையில் 
துள்ளியெழும்
வார்த்தைகள்....
பிரிவே ஆயுதமாகும் !

அன்பு எழுகையில்
வார்த்தை வற்றி
பஞ்சமாகும் ....
மௌனமே காதலாகும்!

Tuesday, 8 October 2013

நட்பு



 
லாபம் கருதிச் சேர்ந்தால்
வியாபாரம்

பதவிக் கருதி மோதினால் 
அரசியல்

இச்சைக் கருதிக் கலந்தால் 
காமம்

வாழ்க்கைக் கருதி மலர்ந்தால்
காதல்

சாதிக் கருதிக் கூடினால் 
கலவரம்

மதம் கருதித் திரண்டால் 
பதற்றம்

ஏதும் கருதாமல் -
ஆதரவாய் நின்றால்
அதுவே நட்பு !

Monday, 7 October 2013

நாம்



நான் என்ற நானில் இருந்து
என்னை மாறச் சொல்கிறாய்
நீ என்றும் நீயாகவே
இருந்து கொண்டு

என்னை மாற்றிக் கொண்டால்
மட்டுமே உனக்குப் பிடிக்கும்
என்றால் - மாறிய நான்
உண்மையில் யார்?

அன்பை கேட்டால்
அலுப்பாய் உணர்கிறாய்  -
அன்பை கேட்டல்
அன்பின் இயல்பு
நீ அலுப்பாய்
உணர்ந்தால், - அதற்கு
நானா பொறுப்பு?

பேசினால் திமிர் என்கிறாய்
பேசாவிட்டால் தினவு என்கிறாய்
மாறும் உன் இயல்பில்
நீ நீயெனத் தெரிவது
எனக்கு நீதானா?

நானும் நீயும்
நாமில்லை -
நானெனும் நானும்
நீயெனும் நீயும்
விலகும்வரை!

பழங்கதை



பூனைகளின்
பசிக்கிருந்த ஆப்பம் - அதை
குரங்கொன்று விட்டது ஏப்பம்

பாட்டி சொன்னக் கதையிது
மாறிக் கொண்டே வருகுது

பூனைகள் என்றும் பூனைகளாய் 
மந்தையில் சிக்கிய மாடுகளாய் 
குரங்குகள் பெருகினத் தலைவர்களாய்
நாடொன்று ஆனது இங்கே ஆப்பமாய்

ஆப்பமும் ஆகும் துண்டுகளாய்,
குரங்குத் தலைவர்களின் கைகளிலே
நாளை வரும் தேர்தலிலே!

பாட்டி சொன்னக் கதையிது
பாங்காய் இன்றும் பொருந்துது!

Thursday, 3 October 2013

குற்றப்பத்திரிக்கை

நேசிப்பின் நிழலில்
மிதக்கும்
சிறு தக்கை

கோபத்தின் பிடியில்
கணக்கும்
பெரும் பொதி

ஒவ்வொருவரிடமும்
உண்டு -  ஒரு
குற்றப்பத்திரிக்கை
வாசிக்க
அல்லது
வருத்தப்பட

Tuesday, 1 October 2013

கீச்சுக்கள்

GIVING is joyful, when it is received with LOVE!
Charity is wonderful when it is accepted with Generosity/Magnanimity!


-------------------------
ஒரு முழம் கயிறு, ஒரு துளி விஷம், ரயில் தண்டவாளம், ஆறு, குளம், உயரமான பகுதி, சாதி விஷமம், மத வெறித் தாக்குதல், விபத்து, சாராயம், கூலிப்படை.........................

ஓர் உயிர் தன்னை அழித்துக் கொள்ளவும் அல்லது அதனை அழித்து விடவும் எத்தனையோ வழிகள் இருக்கும் போது, ஒருவனை வாழ வைக்கவோ, அல்லது அவன் வாழ்ந்திடவோ ஒரு வழியும் இல்லாமல் போய் விடுமா?!

------------------------------------------------- 

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...