Monday, 25 February 2013

மாயக்கூட்டம்






காரியம் வேண்டிச் சிரிப்பார்
காரணம் வேண்டி நடிப்பார்
மானிடனாய் பிறந்தவர் யாரும்
முழு மானிடராய் இல்லையடா

நாடி வரும் அன்பினை
நம்பியவரும் இல்லையடா
போலிகளின் உளறல்களில்
போதை கொண்டு உழல்வாரடா
வேதனை வேதனை
என்று நித்தம் சாவாரடா

ஒருமுறை மரணத்தை பலமுறை
காண்பாரடா
தினம் உள்ள வாழ்க்கையை
எண்ணியே பாராரடா!
தோல்வி தோல்வி என்று புலம்பும்
பரதேசி கூட்டமடா - இங்கே
வாழ்க்கை வாழ்க்கை என்று
ஒன்றுமே இல்லையடா

தேடிப்பிடித்து நிதம் பகைமை
காண்பானடா -
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும்
இவன்  கூட்டமடா,
எளிதான அன்பு எட்டிக் காயடா
இவர் சிந்தித்து செய்வது அழிக்கும்
செயல்கள்தானடா...

கருவறையில் உயிர்க் கொன்று
கல்லறையில் சிலை வைப்பானடா
வாழும் போது வராத சிந்தனைகள்
சாகும் போது பொங்குமடா........
வேடிக்கை மாந்தரடா - அடேய்,
இவர் மனம் கொன்று,
ப(பி)ணம் தின்னும் கூட்டமடா!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...