Thursday, 18 June 2015

முரண்

 

 காயங்களை மனிதர்கள்
 தருகிறார்கள்
 காயம் ஆற்றும் மருந்தை மட்டும்
 காலம் தரும் என்கிறார்கள்!

 கோபத்தில் கொல்வதற்கும்
 தயக்கம் காட்டாத மனிதர்கள்,
 அன்பை வெளிப்படுத்துவதற்கு மட்டும்
 வெட்கம் கொள்கிறார்கள்!

 வாழ்வது ஒருமுறைதான்
 என்றும் சொல்லும் மனிதர்கள்
 ஒவ்வொரு தோல்வியிலும்
 பலமுறை சாகிறார்கள்

 வாழ்க்கைக்காகப் பணத்தை
 ஓடி ஓடி சேர்க்கிறார்கள்
 இறுதியில் தொலைத்துவிட்ட
 வாழ்க்கையை எண்ணி மாய்கிறார்கள்

 ஆறறிவு மனிதர்களின்
 தீராத ஆசையில்
 ஏழ்பிறப்பும் போதாது
 முரண்களற்ற முழுமையானதொரு
 வாழ்க்கைக்கு

 

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...