Thursday, 16 November 2017

முரண்களின்_தேசம்!

No automatic alt text available.


இந்தத் தேசம் வியப்பானது
இவர்கள் வலியை உணர்வதற்கும்,
எதையும் செய்வதற்கும்
ஒன்றாகவோ பலநூறாகவோ
மரணங்கள் நிகழவேண்டும்!

மரணங்களின் வாசனை
நீர்த்துப்போகும்போது
இவர்கள் இயல்பு திரும்பவர்
அந்த இயல்பு
அடுத்தமரணம்வரை
நீடித்திருக்கும்
இந்தத் தேசம் வியப்பானது

வெள்ளம் வரும்போது
மழைநீர் வடிகால் பற்றியும்
வறட்சி ஏற்படும்போது
மழைநீர் சேகரிப்பு பற்றியும்
இந்தத் தேசம் பேசும்
மறுபுறம் மரங்களை வெட்டியும்
மழைநீர் வாய்க்கால்களை
ஆக்கிரமித்தும் காட்டுப்பன்றிகள்
போல வாழ்க்கையும் நடத்தும்
ஆமாம்
இந்தத் தேசம் வியப்பானது

பேருந்து ஓட்டையிலோ
நீச்சல் குளத்திலோ
மின்தூக்கியிலோ
"நீட்"டினாலோ
பிள்ளைகள் மரணமடையும்
வேளைகளில்
"ஐயோ" வென்று
கூக்குரலிட்டு
பின் காரணிகளை களையாமல்
அடக்குமுறைக்கு அடிபணிந்து
எந்திர வாழ்க்கையில்
எதையும் கடந்து உழலும்
இந்தத் தேசம் வியப்பானது

அத்தனை அழுக்கான
அரசியல்வாதிகளும்
மரணங்களை எண்ணிக்கையென
கடக்கும் அதிகாரிகளும்
பளீரென்ற வெண்ணிறத்திலும்
பகட்டான உடைகளிலும்
ரத்தம் சுவைக்க தவிக்கும்
கிங்கரர்களைப் போல
பெரிய விலையுயர்ந்த
வாகனங்களில்
பவனி வரும்போது
இந்தச் சின்ன மனிதர்களையெல்லாம்
பெரிய மனிதர்களெனப் போற்றும்
இந்தத் தேசம் வியப்பானது

சாராயத்திற்கு
கொடுக்கும் நீதியை
காவிரித் தண்ணீருக்கு கொடுக்காமல்
கோலா கம்பெனிகளுக்கு
கொடுக்கும் நீதியை
விவசாயிகளுக்கு கொடுக்காமல்
மல்லையாக்களுக்கு கொடுக்கும்
மரியாதையை
மாணவர்களுக்கு கொடுக்காமல்
ஆகம விதிப்படி அர்சசகரென்று
ஒரு சாராருக்கு கொடுக்கும்
தீர்ப்பை
ஏழைகளின் கல்வியுரிமைக்கு
கொடுக்காமல்
பாராபட்ச நீதியரசர்கள் வாழும்
இந்தத் தேசம் வியப்பானது

படித்துப் பட்டம் பெற்று
அரசு வேலையடைந்து
மக்களிடம் கூச்சமேயில்லாமல்
பிச்சையெடுக்கும் வர்க்கமும்
ஓட்டுப்பிச்சையெடுத்து
அமைச்சர் பதவியடைந்து
மக்கள் பணத்தைச் சுரண்டும்
வர்க்கமும்
இவர்களிடம் கையேந்தியும்
இவர்களின் கைகளை நிறைத்தும்
காரியம் சாதித்துக்கொள்ளும்
மக்கள் வர்க்கமும்
நீதியையும் நியாயத்தையும்
இவர்களிடமே எதிர்ப்பார்த்து நிற்கும்
அட
இந்தத் தேசம் வியப்பானது

வியப்பான இந்தத் தேசத்தில்
மழையும் வெய்யிலும்
காலநிலையில் குழம்பி
புயலாலும் பூகம்பத்தாலும்
கறைகளை அகற்ற
முயற்சித்துக்கொண்டேயிருக்கிறது
மனிதர்கள் தம் நம்பிக்கையை
மீட்டெடுக்க வேண்டிய
அவசியத்தை நினைவுறுத்தியபடி!!!

இடஒதுக்கீடு

ஊட்டச்சத்துமிக்க உணவோ, பெரிய வீடோ, வாகனமோ, மின்விசிறியோ, குளிர்சாதனமோ, இப்படி எந்த வசதியும் இல்லை என்று ஏழைகள் தற்கொலை செய்துக்கொள்வதில்லை! கல்விக்கு மட்டுமே அவர்கள் ஆசைப்படுகிறார்கள், அது என்ன குற்றமா? படிக்காத பெற்றோர்களின் வறுமையை கல்வி மாற்றும் என்று நினைக்கிறார்கள்? அது குற்றமா? அடிமைப்பட்ட சாதிநிலையை, குனிந்தே நிற்கும் வாழ்க்கை நிலையை, கல்வி உயர்த்தும் என்று கனவு காண்கிறார்கள், அது குற்றமா?
இதுவரை நான் சாதியைப்போற்றியதில்லை, மிக நெருங்கிய நட்பில் எல்லா இனங்களும், எல்லா சாதியும் உண்டு, அவர்கள் எல்லாம், இந்த வேறுபாடுகளை மறந்து சமூகத்தின் மீது மிகுந்த அக்கறைக் கொண்டவர்கள், அதன்வழி செயல்படுபவர்கள், இந்த முகநூலிலும், சில அலுவலக வழி வந்த நட்பிலும் கூட நான் சாதியைத் தேடியதில்லை, கேட்டதும் இல்லை, எனினும் இன்று அனிதாவின் தற்கொலை, இங்கு இருப்பவர்களில் சிலரின் முகமூடியைத் தெளிவாக உரித்து காட்டியிருக்கிறது, அவர்களின் சாதி அவர்களின் வாயிலாக தெரிந்திருக்கிறது, நன்றி உங்களுக்கு, நீங்கள் பிணத்தையும் கூட சாதிய சாயத்தோடு பார்த்து மகிழும் கூட்டமே, கொஞ்சம் விலகி நிற்கிறேன்! 

உங்களுக்கு நீட் அவசியம் வேண்டும் என்றால்;
இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வி முறையை, அதையும் அரசே இலவசமாய் எல்லோருக்கும் பொதுவாய் வைக்குமாறு சொல்லுங்கள்,
நீட் பயிற்சியையும் அரசையே நடத்தச்சொல்லுங்கள் இலவசமாய்
பிற்படுத்தப்பட்ட, பின்தங்கிய குழந்தைகளுக்கு அவர்கள் மொழி, ஆளுமை, பாடங்களில் சிறப்புற பயிற்சி வகுப்புகளையும் அரசையே செய்ய சொல்லுங்கள்!

தேர்வில், பின்பு அதை திருத்துவதை, பின் மதிப்பெண் பட்டியலை, பின் நேர்காணலை, பின் அட்மிஷன் காட்சிகளை எல்லாவற்றையும் கணினி மயமாக்கி, பொதுமக்களுக்கு தொலைக்காட்சியில் நேரலையாக காண்பிக்கச்சொல்லுங்கள்!

28% சதவீதம் முதல் 50% சதவீதத்திற்கும் மேலாக வாங்கும் வரிகளை இதற்கும் செலவுசெய்ய சொல்லுங்கள்!

பிறகு, இதையெல்லாம் செய்ய அரசுக்கு வக்கில்லையென்றால், ஆட்சியைக்கூட தனியார் வசம் குத்தகைக்கு விட்டுவிட சொல்லுங்கள்!
இறுதியாக, "ஸ்டாண்டர்ட் வேண்டும்" அதனால் தேர்வு வேண்டும் என்றும், ஒரே வினாத்தாள் எல்லோருக்கும் என்று வழிமொழிபவர்கள், #கோயில்களில் #அர்ச்சகராக யார் வேண்டுமானாலும் ஆகலாம், இதற்கும் ஓரே நுழைவுத்தேர்வு வைத்து, மந்திரங்களை எல்லோரும் பயிற்சி வகுப்புகளில் கற்றுத் தேர்வு எழுதட்டும் என்றும் முன்மொழியுங்களேன் பார்க்கலாம்!

உங்களுக்கென்று ஒரு இடஒதுக்கீட்டை யாரையும் அண்ட விடாமல் பிடித்துக்கொண்டு, மற்றவர்களின் அடிப்படைக்கல்விக்கு தரும் இடஒதுக்கீட்டை எதிர்க்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை!

இப்போது நிவாரணம் அளிக்கும் தமிழக அரசும், ஆறுதலில் வேஷம் காட்டும் மத்திய அரசும், அரசின் மழுப்பலால் தமிழக மாணவர்களுக்கு இழப்பு ஏற்பட்ட போது, தானாய் முன்வந்து, எல்லோருக்கும் இலவச பயிற்சி இந்த வருடம் நாங்களே வழங்கி உங்களை நீட் தேர்வுக்கு தயார்ப்படுத்துகிறோம், கவலை வேண்டாம் என்று உறுதிமொழி தந்து செயல்படுத்தியிருக்கலாம்!
இறுதிவரை போராடிய பெண்ணை, காதல் தோல்வியால் செத்திருப்பாள் என்று உங்கள் வக்கிரங்களை வார்த்தைகளாக வடிப்பவர்கள் உங்கள் வீட்டுப்பெண் ஓடிப்போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் போதும்!
இந்தநாடு எல்லா மக்களுக்கும் ஒரே நீதியை தரும்போது, நீங்கள் உங்கள் நியாயங்களைப் பேசுங்கள் அதுவரை ஒரு மரணத்திற்கு கீழ்த்தரமாய் காரணங்களைக் கற்பித்து, உங்கள் சாதிய அழுக்குகளைக் கொட்டாதீர்கள்!
#அனிதா #Anitha #Neet #நீட் #இடஒதுக்கீடு

ஒரிஜினல்_லைசென்ஸ்

#அணுக்கதை
சாலையில்;
"என்கிட்டதான் ஹெல்மெட் இருக்கு, லைசென்ஸ் இருக்கு, ஆர்சி இருக்கு, நான் ஓவர் ஸ்பீட்ல வரல, சிக்னல் மீறல, அப்புறம் எதுக்கு காசு?"
"டேய் காச கொடுத்துட்டு கிளம்பு"
"சார் வண்டிய செக் பண்ணிக்கங்க சார், ஓரிஜினல் லைசென்ஸ் இருக்கு, லோடுக்கு டாகுமெண்ட்ஸ் இருக்கு"
"எங்கே உன் லைசென்ஸ் கொண்டா, இது ஒரிஜினல் இல்லையே, மூணுமாசம் உள்ள போறியா? காச கொடுத்துட்டு கிளம்பு"
தொலைந்தபிறகு, அந்தந்த அரசு அலுவலங்களில்;
"சார் லைசென்ஸ் தொலைஞ்சிடுச்சு"
"ம்ம், சரி டூ வீலரா இருந்தா .... ரூபா, 4 வீலரா இருந்தா ... ரூபா... ஆமா என்ன காரு??"
"@@@@@@?????"
#ஒரிஜினல்_காசு
#ஒரிஜினல்_லைசென்ஸ்

கீச்சுக்கள்!

அணைநீர் ஆவியாவதை தடுக்க தெர்மாக்கோல்,
விபத்துக்கள் குறைய ஒரிஜினல் லைசன்ஸ்,
கல்வி தரத்தை முன்னேற்ற அரசுப்பள்ளிகள் தனியார் மயம்
தர்ம யுத்தத்தை முடிக்க துணைமுதல்வர் பதவி
நமக்கு கிடைத்த இந்த
தமிழ்நாட்டு விஞ்ஞானிகளை
நாசா கடத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்! 😱

-------------
"மோடி இரண்டாயிரம் ரூபாயில் சிப்பு வெச்சிருக்காரு, அதோட மூவ்மெண்டை ஸாடிலைட் மூலமா கண்காணிப்பாரு"
"இந்த பணமதிப்பிழப்பில் பாருங்க, எல்லா கருப்புப்பணமும் வரப்போகுது, எல்லாருக்கும் 15 லட்சம் தரப்போறாரு"
"ஜிஎஸ்டியால விலையெல்லாம் குறைஞ்சு, நமக்கு நல்லது நடக்கப்போகுது"
"மோடியால தொழில் எல்லாம் முன்னேற்றம் அடையும், அவரு மாதிரி வராதுங்க"
"உபி யில பாருங்க, அது குஜராத் மாதிரி (!) மாறப்போகுது"
"அட வோட்டிங் மெஷினில் குளறுபடி செய்ய எல்லாம் வாய்ப்பேயில்ல"
"எல்லா பணத்தையும் வெச்சு இந்திய இராணுவத்தை பலமாக்கி வெக்கறாரு, ஒரு பய வாலாட்ட முடியாது"
.......இப்படி சொன்னவர்கள் எல்லாம்.............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
இனிமேலாவது "கண்ணாடிய துடைச்சுப் போட்டுக்கங்க!" 😜

-------------------------------


"50 நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள், பணமதிப்பிழப்பில் தோல்வி ஏற்பட்டால் என்னை கொளுத்திவிடலாம்!"
"ஜிஎஸ்டியை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது"
"மோசமான காங்கிரஸ் ஆட்சியின் விளைவுதான் பெட்ரோல் விலையேற்றம்"
இதெல்லாம் யார் சொன்னதென்று தெரிகிறதா??? 😜😜😜
#முன்னாள்_குஜராத்_முதல்வர்_இந்நாள்_பிரதமர்
God only should save this country from these politicians!
-------------------------------

இந்தச் சுனாமி, பூகம்பம், புயல், வெள்ளம், வறட்சி எல்லாம் பாரபட்சமான நம் சட்டத்தைப் போலவே செயல்படுகிறது, குறைந்தபட்சம் ஒரு எம்எல்ஏ கூட இதில் சிக்குவதில்லை!

--------------------------

If this #Original_license STOPs all accidents,
If #UP empowers and ensures the SAFETY of Women and Children,
If any #corrupt politician is HANGED for his corruption and crimes,
If the #Prime_minister STAYS in the country for 2 consecutive months
#Burnmealive 😂😂
---------------------------------------
இந்துவாக, முஸ்லீமாக, கிறிஸ்தவராக, பவுத்தராக, ஜெயினாக எதுவாக இருந்தால் என்ன? உயிர்கள் மதங்களைக் கொண்டு பிறக்கவில்லை! குழந்தைகள், மொட்டுவிடும் செடியைப்போன்று மனித உயிர்களாக மட்டுமே பிறக்கின்றனர், அவர்களைக் கொன்று இவர்களுக்கு என்ன ஆனந்தம் கிடைத்துவிட போகிறது? குழந்தைகளைக் கொன்று ஆனந்தம் அடைபவனை எந்த மதக்கடவுளும் மன்னிக்க மாட்டார்!
மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் கொலைகள் செய்பவர்கள், அதன் பின்னே துணை நிற்பவர்கள் எல்லாம் வாழும் தகுதி இழந்தவர்கள்! ஆணாய் இருந்தாலும், பெண்ணாய் இருந்தாலும், உலகெங்கிலும் அரசியல்வாதிகள் ஹிட்லரின் வீரிய பிம்பங்களாய் இருக்கிறார்கள்! Hell with these cannibals! 😞
அன்பும், காதலும் எப்போதும் பிச்சையாக இருக்கக்கூடாது, அது இருவருக்குமே இழிவைத்தரும்!
-------------------------------
சாராயம் விற்று, கல்வி விற்று, பெண்களை வைத்து வியாபாரம் செய்து, கொலைகள் செய்து, கொள்ளைகள் அடித்து, இப்படியெல்லாம் வன்முறைகள் செய்பவர்கள் அரசியலிலும், சமூகத்துக்காக குடும்பத்தை விட்டு, உயிர் பயம் விட்டு பாடுபடுவர்கள் சிறைக்கும், பின்பு தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள்! டிராபிக் ராமசாமியின் சமூகத்துக்கான உழைப்பை, அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தை, மேடையில் பேசி கிழிக்கும் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் தரவில்லை, அந்த நேர்மையையும், துணிச்சலையும், திரையில் மட்டுமே வீரம் காட்டும் எந்த நடிகனும் காட்டவில்லை!
தமிழ்நாட்டுக்கு என்றுதான் விடிவுகாலமோ தெரியவில்லை!
#டிராபிக்_ராமசாமி
--------------------------

காதலிகளையும், மனைவிகளையும் அழகிய, பணக்கார, முட்டாள்களாக எதிர்ப்பார்க்கும் சில ஆண்கள், அந்த முட்டாள்களின் வழி பிறக்கும் பிள்ளைகளை, புத்திசாலிகளாக எதிர்ப்பார்க்கிறார்கள்! இவர்களையே உலகமென்று நம்பி ஏமாறும் காதலிகளும்/மனைவிகளும் லூசுப் பெண்களாகவே வைத்துக்கொள்ளப்பட்டு, வாழ்ந்துமுடிக்கிறார்கள்!
ஒட்டுப்புல் போல யாரையும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்காமல், சுயமரியாதையுடன் வாழ, பெண்களுக்கும் ஆண்களுக்கும் சிறந்த கல்வியை சாத்தியமாக்குங்கள்!!!
#ஏட்டுச்சுரைக்காய்கள்_கறிக்கு_உதவாது!
---------------------------

விவசாயிகளாய் இருந்தாலும் மாணவ மாணவியர்களாய் இருந்தாலும், யாருடைய தற்கொலையும், மரணமும் அரசை ஒன்றும் செய்திடாது! இன்னும் சில வருடங்களில் இவர்கள் ஓட்டுக்கேட்டு வரும்போது, அவர்கள் கொடுக்கும் பணத்துக்கும், இலவசங்களின் வாக்குறுதிக்கும், வேட்பாளரின் சா(ஜா)திக்கும், மதத்துக்கும் மக்கள் ஓட்டுக்களை போடுவார்கள் பாருங்கள், அப்போதுதான் இத்தகைய எல்லா மரணங்களையும் நாம் வியாபாரமாக்கும் நம்முடைய அடிமாட்டு மனநிலை வெளிச்சமாகும்!
#அரியலூர்_அனிதா
----------------------------

மருத்துவ படிப்பு இல்லை என்றால் வேறு படிப்பு இருக்கிறது,
அனிதா செய்தது அறிவு கெட்டத்தனம்! - டாக்டர் கிருஷ்ணசாமி
தற்கொலையை நிச்சயம் ஆதரிக்கவில்லை, எனினும் இதுவரை நீங்கள் உட்பட, பல்வேறு பிரதானக் கட்சிகளும், லெட்டர் பேட் கட்சிகளும் அரசியலில் இருந்து இதுவரை தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு எதையும் செய்யாமல் இருந்தாலும், இன்னமும் கூட அரசியலை விட்டு விலகாமல், அரசியலிலேயே நீடித்திருக்கும் போது, மருத்துவம்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது தவறா மிஸ்டர் கிறுக் சாரி கிருஷ்ணசாமி?
#நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று நாடாகமாடி, மாணவர்களை இந்த நிலைக்கு தமிழக அரசு நிறுத்தியது அறிவுபூர்வமான செயலா?
#விவசாயிகள் வயிற்று வலியால் தற்கொலைச் செய்து கொண்டார்கள் என்றது போல, அனிதாவின் மரணத்திற்கு இன்னும் சில நாட்களில் மீடியாக்கள் "வழிகாட்டிகளால்" புதுவர்ணம் பூசும்!
#அரியலூர்_அனிதா #Anitha
---------------------------

மாண்புமிகு முதலமைச்சரே,
அந்த ஏழு லட்சம் எதற்கு முதலமைச்சரே?
இன்னும் எத்தனை லட்சங்கள் தரப்போகிறீர்கள் போன உயிரை மீட்பதற்கு?
விவசாயிகளுக்கு எத்தனை லட்சம் தரப்போகிறீர்கள்?
கூடங்குளத்து மக்களுக்கு, நெடுவாசலுக்கு, கதிராமங்கலத்துக்கு? 😞

28% சதவீதம் வரிகள் போதுமா? இல்லை 100% வேண்டுமா?
கூவத்தூரில் தொடங்கி, டெல்லியில் போராடி பெற்றுக்கொண்ட பதவியில், பலத்தில், கொஞ்சம் நிமிர்ந்து அந்தப்பெண்ணுக்காக, இதுபோல் கனவுகள் கலைந்து கலங்கி நிற்கும் பிள்ளைகளுக்காக, உங்களால் ஒரு துளி கண்ணீர் விட முடியுமா?
யார் செத்தாலும் நிவாரணம், கொன்றதே அரசுகள் எனும்போது, நிவாரணங்கள் போதுமா?
அரசு என்பது நம்பி வாக்களித்த மக்களுக்கு தாயைப்போல அல்லவா தாங்கி நிற்க வேண்டும், தகப்பனைப் போல வழிகாட்ட வேண்டும்? போட்டது ஒரு ஓட்டு, அதில் மூன்று முதல்வர்கள், நாற்காலியை பத்திரமாக பிடித்துக்கொண்டு எத்தனை நாட்கள் இப்படியே எல்லா மரணங்களுக்கும் நிவாரணம் கொடுத்து கடந்துப் போக போகிறீர்கள்? என்றாவது ஒருநாள் உங்களால் இந்தப் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக பார்க்க முடியுமா?
செத்தவள் ஒரு மாணவி, அவள் தலித்தா, வன்னியரா, கவுண்டரா, தேவரா என்று சாதி சாயம் பார்க்கும் மீடியாக்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள், கல்வியைத் தரமானதாக, இலவசமாக கிடைப்பதற்கு சாத்தியப்படுத்துங்கள், 28% சதவீத வரியும், சாலையெங்கும் நிறைந்திருக்கும் சாராயக்கடைகளும் பணவிஷயத்தில் உங்களை கைவிடாது!
இந்தக்கடிதம் என்பது என்னுடைய தனிப்பட்ட உணர்வுகள் என்பதை விட, எத்தனையோ தமிழக மக்களின் மனக்குமுறலும், ஆதங்கமுமே!
"ஒன்றுமே நடக்காது, இவ்வளவுதான் அரசு" என்று எல்லோரும் நினைப்பது போல் இந்த ஏழு லட்சத்துடன் கடமை முடிந்தது என்று கைகழுவினால், ஏழு கோடி மக்கள் மனதில் ஆறாத தழும்பாய் உங்கள் ஆட்சி மாறிப்போகும்!
முதலமைச்சர் என்ற கீரிடம் இருந்தாலும், அடிப்படையில் நீங்களும் மனிதர்தானே, ஏதாவது ஒரு நிமிடம் நீங்கள் மக்களுக்காக சிந்தித்தால், இதுபோன்ற ஆத்மாக்களுக்கு அதுவே பெரிய மரியாதை, உங்கள் நற்காரியங்களுக்கு இது ஒரு ஆரம்பப்புள்ளியாய் இருக்கட்டும்!
நன்றி! வணக்கம்!
#முதலமைச்சர் #அரியலூர்_அனிதா #நீட்
------------------

சமூகத்துக்காக தன்னந்தனியாக போராடும் முதியவரை அறையும் காவல்துறை, ஊழல் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்களுக்கு சல்யூட் அடித்து பாதுகாப்புக்கொடுக்கும் விந்தையான அமைப்பில், எல்லாவற்றிற்கும் வேடிக்கைப் பார்க்கிறோம்! வேடிக்கை மனநிலை தமிழகத்தின் சாபக்கேடு!
#டிராபிக்_ராமசாமி!
----------------
டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பு 16 ஆசிய பசிபிக் நாடுகளில் 18 மாதங்கள் ஊழல் நிலவரம் குறித்த ஆய்வில், ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்! லஞ்ச விகிதாச்சாரம் 69 சதவீதம்! இதற்கு முன்பு 76 ஆவது இடம், இப்போது முதலிடம்!
தீயாய் வேலை செய்திருக்கிறோம்!
#புதிய_இந்தியா #நயா_பாரத் #Transparency_International
----------------
 

மனைவியின்_பிள்ளையும்_கணவனின்_குழந்தையும்!










No automatic alt text available.
கொடுங்கையூரில் மாற்றுக்காதலால் சேர்ந்து வாழ்ந்த ஜோடியில் ஆணொருவன், மனைவிக்கு முதல் கணவன் வழி இருந்த மூன்று வயது ஆண் குழந்தையை, விடாமல் அழுததற்காக சுவற்றில் அடித்து கொன்றுவிட்டு பின்பு படிக்கட்டில் தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடியிருக்கிறான் என்ற செய்தியும், இறந்து போன அந்தக் குழந்தையின் புகைப்படத்தையும் காண நேர்ந்தது! சிறிது நாட்களுக்கு முன்னர் இரண்டாம் திருமணம் செய்த பெண், கணவனின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட செய்தியையும் படிக்க நேர்ந்தது, அவ்வப்போது "சித்தி" கொடுமை என்ற கண்ணீர் கதைகளையும் கேட்க நேர்கிறது, இவையெல்லாவற்றையும் சாதாரண செய்திகள் என்று கடக்க முடிவதில்லை!

அதிலும் இதுபோன்ற எல்லா திருமணங்களிலும், உறவுகளிலும், கணவனுக்கு முந்தைய வழி வந்த குழந்தையோ, அல்லது மனைவி வழி வந்த குழந்தையோ பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை!

கொலை செய்யும் அளவுக்கு பெரும்பாலும் "சித்திகள்" செல்வதில்லை, ஆனால் கொலையையும் எளிதாக செய்ய முடிகிறது ஆண்களால், ராயப்பேட்டையில் இரண்டாவது கணவன், மனைவி, அவளது பெண் குழந்தைகள் என்று வரிசையாய் ஐந்துபேரை கொன்றது நினைவில் இருக்கலாம்!
இரண்டாவது மனைவி அவள் குழந்தையென்றில்லை, நடைபாதையில் வசிக்கும் ஒரு கூலித்தொழிலாளி, தன் ஒரு வயது ஆண் குழந்தை சாலையோரத்தில் தூளியில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், மனைவியுடன் உறவுக்கு முற்பட்ட நிலையில், உறங்கிய குழந்தை பசிக்கு அழ, அந்த எரிச்சலில் அந்தத் தூளியை மரத்தில் மோதி குழந்தையைக் கொன்ற செய்தியும் உண்டு!

"ஒருவனை காதலிப்பவள் திருமணம் ஆனதும் அவனின் குடும்பத்தையே மணம் செய்து கொண்டவள் ஆகிறாள் என்றும், ஒருத்தியை காதலிக்கும் ஆண், அவளை மட்டுமே திருமணம் செய்துகொள்கிறான்" என்று ஒரு முதுமொழி உண்டு! இதன் காரணம் என்ன? கலாச்சாரம் என்பதையும் தாண்டி, ஆண்களின் வளர்ப்பு மனநிலையே பெரும்பாலும் காரணம்!

குடித்தால், புகைத்தால், ஒழுக்கம் கெட்டால், திருடினால், கொலை செய்தால், வேறொரு திருமணம் செய்தால், பலதார உறவு கொண்டால், இந்த எல்லா "ல்" களையும் ஆண்கள் செய்யும்போது, சாதாரண அன்றாட நிகழ்வாகவும், இதில் எதை ஒன்றையாவது பெண் செய்தால், "கலாச்சாரம், ஒழுக்கம்" என்று பெண்ணுக்கு போதிக்க ஆரம்பிக்கிறோம்!

மனப்பொருத்தம் இல்லையென்றாலும், மணவாழ்க்கையை பலர் சகித்துக்கொண்டு கடப்பதற்கு காரணம் குழந்தைகளே, அதுபோன்ற பல தகப்பன்களின், தாய்களின் சகிப்புத்தன்மைக்குப் பின்னேதான் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது! குழந்தைக்கே அச்சுறுத்தலாகும் போது கணவனை விட்டு பிரிதலும், கொலை செய்யும் அளவுக்கும் பெண்கள் செல்வது உண்டு! "பாதுகாப்பு" என்ற வளையம் கூட பெரும்பாலும் "பொருளாதாரம்" "சமூகம்" என்ற இரண்டையுமே சுற்றி வருகிறது!

பெற்றவர்கள், பெண்ணுக்கு படிப்பெதற்கு, சுய காலில் நிற்பதெதற்கு என்று பல லட்சம் செலவு செய்து திருமணம் செய்து வைக்க, ஒருவேளை அவன் குடிகாரனாகவோ, மோசமானவனாகவோ இருக்க நேர்ந்தால், சுய சம்பாத்தியம் இல்லாத பெண்ணுக்கு எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அவனையே சார்ந்து வாழும் நிலை ஏற்படுகிறது, சுய சம்பாத்தியம் இருந்தாலும், "போதனைகள் செய்யும் சமூகம்" என்ன சொல்லும் என்ற அச்சமும், தனியாக நின்றாலும் சீண்டும், இரண்டாவது திருமணம் செய்தாலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்ற எண்ணமும் அதே சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது!

மும்பையில் கணவன் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்ட, குடும்பத்தைத் தாங்கிப்பிடித்த மனைவி சுயதொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற, கணவனும் மனைவியும் குழந்தைகளும் என்று அருமையாய் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், பெண் தனியே இத்தனை சம்பாதிப்பதா என்ற காழ்ப்பில், அவளின் கணவனின் அண்ணனே படுகொலை செய்திருக்கிறான், கிடைத்திருக்கும் சிறிய அளவிலான பெண் சுதந்திரம் கூட பல ஆண்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், கணவனை அண்டியோ, விவாகரத்து ஆகிவிட்டால் இன்னொருவனை கணவனாக அண்டியோ வாழும் நிலையே பெரும்பாலான பெண்களுக்கு!

பெண்ணின் உணர்வை, உரிமையை, சுதந்திரத்தை மதிக்கும் பெரிய மனது வருங்கால ஆண்களுக்கு வரலாம், அப்போது இதுபோன்ற பிரச்சனைகள் குறையலாம்! அதுவரை வளர்ந்துவிட்ட ஆண்பிள்ளைகளின் மனதை மாற்றுவது கடினம்தான்!

குழந்தைகள் மீதான அன்பு, பாசம் எல்லாம், பெரும்பாலான ஆண்களுக்கு காமத்தின் சீற்றத்தில் மரித்துபோய்விடும், அதன் விளைவே இதுபோன்ற கொலைகள், குழந்தைகளின் மீதான வன்புணர்ச்சி குற்றங்கள்! இத்தனை காமச்சீற்றத்திலும், இதுதான் ஆண் இயல்பு என்று சப்பைக்கட்டினாலும், எந்த ஆணும் எத்தனை தேவையிலும் தன் தாயை புணர்வதில்லை, தாயென்றும் சகோதரியென்றும் இரத்தப்பாசமும், வளர்ந்துவிட்ட கட்டுப்பாடும் இருக்கிறது, குடித்துவிட்டால் எதுவும் தெரியாது, பாவம் என்பார்கள், என்ன குடித்தாலும் ஒருவன் சரியாய் தன் வீட்டிற்குச் சென்று தன் மனைவியை சாலையில் இழுத்துபோட்டு அடிக்கும் அளவுக்கு அவனுக்கு தெளிவு இருப்பதை கவனித்திருக்கிறீர்களா?

போதை, காமம், எதையும் கட்டுப்படுத்த பெண்களுக்கு முடியும்போது, முடியவேண்டும் என்று சமூகம் கட்டமைத்து வளர்த்துவிட்டிருக்கும்போது, ஆண்களுக்கு ஏன் அதுமுடியாது? பெண் கோபப்பட்டால் ஆகாது என்று அடக்கும் பெற்றோர், ஆண்பிள்ளை கோபப்பட்டால், அதே வார்த்தைகளைச் சொல்லாமல் ரசித்து மகிழும் நிலையில் வளர்ந்த அவன் இதுபோல் தன்பிள்ளையையோ, தன்னை நம்பி வந்தவளின் பிள்ளையையோ ஆத்திரத்தில் கொலைச்செய்வான்!

இங்கே மாற்றுக்காதல் சரியா? தவறா? பெண்ணுக்கு ஒழுக்கம் வேண்டுமா? வேண்டாமா? என்ற எந்த விவாதத்திற்கும் நான் வரவில்லை, அதுபோன்ற கேள்விகளை எழுப்பவும் இல்லை! எனக்கு நயன்தாராவையும், கமலையும் பிடிக்கும், இருவருமே அடுத்தடுத்து வேறு துணைகளை தேடிக்கொண்டதாலா என்று குதர்க்கமாய் கேள்வி எழுப்பாதீர்கள், இருவருமே வெளிப்படையானவர்கள், இருவருமே தான் பிரிந்த துணைகளை பற்றி எந்த அவதூறோ குறையோ சொல்லாதவர்கள், நீங்கள் வானாளவ போற்றினாலும், கழுவியூற்றினாலும் எல்லாவற்றையுமே ஒரு புன்சிரிப்பில் கடப்பவர்கள்!

உண்மையில் "என் வாழ்க்கை என் சுதந்திரம்" என்று வாழ்வது அத்தனை எளிதான காரியமல்ல, எனினும் குழந்தைகள் இருந்தாலும் கமலுக்கு கிடைத்த அந்தச் சுதந்திரம், குழந்தைகள் இருந்திருந்தால் நயனுக்கு கிடைத்திருக்குமா என்பது பெருத்த சந்தேகமே! பெண்ணின் குழந்தைகளை ஏற்றுக்கொள்ள ஆண்கள் இன்னமும் பக்குவபடவில்லை, இப்படிப்பட்ட சமூகத்தில், ஆணோ, பெண்ணோ, சேர்ந்து வாழும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளும் முன்னர், திருமணம் செய்ய முடிவெடுக்கும் முன்னர், முதல் திருமணம் என்றாலும் இரண்டாம் திருமணம் என்றாலும், "பிறக்கும் பிள்ளைகள்", "பிறக்கப்போகும் பிள்ளைகள்" எல்லாம் பெரும் பொறுப்பு என்று உணர்தல் வேண்டும், நம்மால் உருவாக்கப்பட்ட உயிர்களுக்கு நாமே பாதுகாப்பு, பொறுப்பு என்று உணர்தல் வேண்டும், நாம் உருவாக்கியதில்லை என்றாலும், துணையென்று நாம் தேர்ந்தெடுத்தவரின் வழி வந்ததால், துணைக்கு எப்படி பொறுப்போ அதே பொறுப்பை அந்தக் குழந்தைக்கும் காட்டியாக வேண்டும் என்று உணர்தல் வேண்டும், துணையிடம் காட்டும் அன்பையும் பரிவையும் அவளின்/அவனின் குழந்தைகளிடமும் காட்ட வேண்டும்! தான் பெற்றதோ, துணை பெற்றதோ, குழந்தைகள் பாரம் என்று கருதினால் உங்களின் தேவை காமம் மட்டுமே என்றறிக! பரஸ்பர மரியாதையில்லாமல், காமம் மட்டும் தேவைப்படும் ஆண்களை நம்பி திருமணம் செய்துகொண்டால், குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதை உணர்க!

தெளிவாய் இருந்து உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் போது ஒன்றுமறியா பிஞ்சுகளின் உயிர் போகாது! அவர்களின் வாழ்க்கை அவர்களின் உரிமையும்தானே?!

சாமியார்கள் ஜாக்கிரதை

ஒரொயொரு சாமியார் ஹரியானாவில், அந்தச் சாமியாரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டும், அவருக்கு ஆதரவாக வன்முறை செய்து, பல பேரை கொன்று, பலருடைய உடைமைகளை கொளுத்தி சேதம் செய்து வருகிறது மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டம், ஒரு மதவாத கட்சியை எங்கெல்லாம் வளர்த்து ஆட்சியைக் கொடுக்கிறீர்களோ அங்கெல்லாம் பொதுமக்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்படுகிறார்கள்! கோயம்புத்தூர் இதே தவறை ஏற்கனவே செய்துவிட்டது, திருநெல்வேலி செய்திருக்கிறது, பீகார் செய்துவிட்டது, டெல்லியும் மத்தியில் ஆட்சி அமைக்க செய்திருக்கிறது, இவர்களுக்காகத்தான் இங்கே தேசபக்தர்கள் என்ற பெயரில் கண்மூடித்தனமாக நாள்தோறும் பொங்குகிறார்கள்!
ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாநில காவல்துறையை வைத்து ஒரே நாளில் நசுக்க மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் முடியும் போது, ஹரியானாவில் இத்தனை உயிர்பலியை தடுத்திருக்க முடியாதா? காவல்துறையே உடந்தையாகும் போது, எல்லாமும் கட்டமைக்கப்படும் போது, வடநாடு என்றாலும் தென்னாடு என்றாலும், இந்தி என்றாலும், தமிழ் என்றாலும், செத்துவீழ்பவர்கள் யாரோ ஒருவரின் பிள்ளையோ, சகோதரனோ அல்ல, வெறும் கலவரத்தில் மாண்ட பிணங்களின் எண்ணிக்கையவர்கள்!
நாட்டில் நிறைய சாமியார்கள் இருக்கிறார்கள்,அவர்களைத் தேடித்தேடி காலில் விழுந்து அவர்களை குற்றவாளிகளாக, அரசியல் பின்புலம் அதிகரிக்கும் பலசாலிகளாக மாற்றிவிடாதீர்கள்! சாமியார்களின் உதவி அரசுயல்வாதிகளுக்கு தேவை, அவர்கள்தான் மக்களை மூளைச்சலவைச் செய்து ஆட்சியாளர்கள் விரும்பும் ஓட்டுக்களாய் மாற்றமுடியும்! ஆகவே "சாமியார்கள் ஜாக்கிரதை"

பாபாக்கள்

10000 bc என்று ஒரு படம், கடவுள் என்று ஒருவனை வைத்துக்கொண்டு, ஏகப்பட்ட அட்டூழியங்கள் செய்யும் அந்தக்கூட்டம், பிற பழங்குடி கூட்டங்களை அடிமையாக்கி, அந்தக்கடவுளுக்கு கோவில் என்று அடித்துத்துன்புறுத்தி வேலை வாங்குவார்கள், ஒரு பழங்குடித் தலைவன் மீட்பனாக, ஹீரோவாக இறுதியில் பல தடைகள் கடந்து, அடிமைப்பட்ட மக்களை ஒன்றினைக்கும் வேளையில், கடவுள் என்று நம்பப்படுபவன் வந்து நின்றதும், இயல்பாய் ஊறிய நம்பிக்கையில், அச்ச உணர்வில் எல்லோரும் தரையில் விழுந்து வணங்க, இறுதியில் ஹீரோ தன் வேல்கம்பை கடவுளாக மதிக்கப்படும் மனிதன் மீது "அவன் கடவுள் இல்லை" என்று சொல்லிக்கொண்டு எறிய, அந்தக்கடவுள் கொல்லப்பட்டு கீழே விழுகிறான், பின்பு ஒரு வழியாய் மக்களுக்கு வீரம் வருகிறது, விடுதலை கிடைக்கிறது!
இப்போது பஞ்சாபில், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாபா என்ற ஆசாமியால் கலவரம், கொலைகள் என்று பார்க்கும் போது, நாட்டில் எல்லா பாபாக்களையும் நினைத்துப்பார்க்க தோன்றுகிறது!

ஒருவன் காடுகளை அழித்துவிட்டு, பிள்ளைகளுக்கு மரங்களைப் பற்றி, நீர்நிலைகளை பாதுகாப்பதைப் பற்றி பாடம் எடுக்கிறான், இன்னொருவன், வாழும் வழி காட்டுகிறேன் என்று யமுனா நதியை அசுத்தமாக்கினான், இந்த ஒருவன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு குற்றவாளியாகிறான், இன்னொருவன் கஞ்சா புகைத்து உழன்று, திடீரென்று யோகாவில் இறங்கி இப்போது தொழிலாதிபராய் மாறிவிட்டான், பிரேமானந்தா, நித்யானந்தா என்ற வரிசையில், அயோக்கியத்தனத்தில் பிற மத குருமார்களின் பங்களிப்பும் உண்டு! துறவு என்றால் எல்லா ஆசைகளையும் துறப்பது, நம் நாட்டில் சாமியார்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் பெரும்பாலும் அந்தரங்கத்தில் பல பெண்களுடன் ஆடைத்துறக்கிறார்கள், உயர்ரக வாழ்க்கை வாழ்கிறார்கள், மந்திரிகளுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொள்கிறார்கள், கொள்ளையடிக்கிறார்கள், பொய் சொல்கிறார்கள், வியாபாரம் செய்கிறார்கள், செல்வம் குவிக்கிறார்கள், இவர்கள் உடையின் நிறத்தைத் தவிர வேறு எதுவுமே துறவை குறிப்பதில்லை, "அட எருமைகளா, இவர்கள் துறவிகள் இல்லை, மக்களுக்கு நன்மை நினைப்பவர்கள் கூட இல்லை, இவர்கள் ஜஸ்ட் கேடுகெட்ட அயோக்கியர்கள்" என்று10000 Bc யைப்போல் இந்த 21st a c யில் யாராவது வெடியை இவர்கள் மீது போட்டு சட்டத்தின் வாயிலாகவோ, தர்மத்தின் வாயிலாகவோ கதைமுடித்தால்தான் இந்தத் தேசம் மூச்சுவிடும் நிம்மதியாய்!
மனதில் தெளிவில்லாதவர்களுக்கு, கொஞ்சம் மந்த புத்திகாரர்களுக்கு, காணும் உயிர்களிடத்தில், இயற்கையிடத்தில், கோவில்களில் உள்ள தெய்வங்களிடத்தில் வராத நம்பிக்கையெல்லாம், சாமியார்கள் என்ற போர்வையில் வரும் ஆசாமிகளிடம் வந்துவிடுகிறது! நம் நாட்டிற்கு உடனடி தேவை மனநல மருத்துவர்களே, இல்லையென்றால் மத்திய அரசின் கருணையில் புதிய கேடி தாதாக்கள், மன்னிக்கவும், பாபாக்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்!

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...