Tuesday, 10 September 2013

ஏதுமற்றவன்

வெறித்து வெறித்து
நோக்குகிறேன்
வெறுமையும் என்னை
வெறித்தப்படி

யாதொன்றும் எனக்கு
புரியவில்லை
புரியாதவைகளுக்கும் என்னை
புரியவில்லை

பிச்சைப் பாத்திரம்
ஏந்தவில்லை
கேட்காமல் விழும்
பிச்சைகளுக்கும்
குறைவில்லை

என்முன் சிதறிக் கிடக்கும்
சில்லறைகள்
சிதைந்து கிடக்கும்
மனங்கள்தானோ

கொடுத்து இழந்தவன்
சிரிக்கிறேன்,
சிரிப்பலைகள் சிதறி விழ,
இறுதியாய் வாழ்கிறேன்

பிறழ்ந்த மனநிலையான் என
வாழப் பிறழ்ந்த மனிதர்கள்
கல்லெறிந்துச் செல்கிறார்கள்
அவர்கள் வாழ்க்கை முழுதும்
கற்களைச் சுமந்து கொண்டு!
 

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...