Wednesday, 9 October 2013

அதற்குப் பிறகு ஒன்றுமில்லை!

 
 பணத்தைப் பற்றிப்
பேசிய பிறகு
(திரு)மணத்தைப்
பற்றிப் பேசவில்லை

இனத்தைப் பற்றிக்
கொந்தளித்த பிறகு
ஒரு மனத்தைப்
பற்றிச் சிந்திக்கவில்லை 

அவள்(ன்)தான் என்று
லயித்த பிறகு
இவளை(னை)ப்
பற்றி யோசிக்கவேயில்லை 

கடுமை கொண்டு
கொன்றப் பிறகு
இனிய வார்த்தைகளில்
உயிர்பிக்கவில்லை

சொத்துப் பிரித்துத்
தொலைந்த பிறகு
உறவுத் தேடி
வரவேயில்லை

நெடுவானத்தில் ஒன்று
மறைந்த பிறகு
விடியல் ஒன்று
தோன்றவேயில்லை

மறுதலித்து மருகி
நிற்கும் மனம்,
இதுவே கடைசி
என்று நினைத்திருக்கவில்லை,
ஓர் இறுதி ஊர்வலத்தில்
கலந்து கொள்ளும் வரை! 

1 comment:

  1. ஆம் அதற்குப் பிறகு ஒன்றுமில்லைதான்...

    ReplyDelete

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...