Friday, 30 May 2014

சுயநலமாய்?!

Photo: வழிந்தோடும் ஆற்றின் 
வேகமும் 
காய்ந்துத் தகிக்கும் ஆதவனின் 
மோகமும் 
கலந்துண்டான வெப்பத்தில் 
கார்மேகத்தின் ஊர்வலம்!
 
இருவேறு இயல்புகளின் 
காதலில் உருவானவன், 
மலைதனில் இடறி,
நீர் நோக்கிச் சிவந்து நின்ற  
செம்மண்ணில் மோகங்கொள்ள, 
குறும்பாய் வந்த காற்றின் மோதலில், 
தன் மோனத் திரைக்கிழித்து
காதலில் கட்டுண்டான் 
கார்மேகம்,
குழைந்தோடிற்றுக் காட்டாறு!!

ஒன்று வீழ்ந்து மற்றொன்றாக, 
மற்றொன்று வேறொன்றாக, 
ஒன்றன் இயல்பை ஒன்று  
சுமந்தப்படி மனம் கலந்த 
இயற்கைக் கூடலிலன்றோ,
வாழுதிங்கே மனிதக் கூட்டம் 
#சுயநலமாய்?!
வழிந்தோடும் ஆற்றின்
வேகமும்
காய்ந்துத் தகிக்கும் ஆதவனின்
மோகமும்
கலந்துண்டான வெப்பத்தில்
கார்மேகத்தின் ஊர்வலம்!

இருவேறு இயல்புகளின்
காதலில் உருவானவன்,
மலைதனில் இடறி,
நீர் நோக்கிச் சிவந்து நின்ற
செம்மண்ணில் மோகங்கொள்ள,
குறும்பாய் வந்த காற்றின் மோதலில்,
தன் மோனத் திரைக்கிழித்து
காதலில் கட்டுண்டான்
கார்மேகம்,
குழைந்தோடிற்றுக் காட்டாறு!!

ஒன்று வீழ்ந்து மற்றொன்றாக,
மற்றொன்று வேறொன்றாக,
ஒன்றன் இயல்பை ஒன்று
சுமந்தப்படி மனம் கலந்த
இயற்கைக் கூடலிலன்றோ,
வாழுதிங்கே மனிதக் கூட்டம்
#சுயநலமாய்?!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...