Friday, 30 May 2014

கீச்சுக்கள்!

தாய் வீட்டுச் சீதனமெனப் பெருமை கொள்வது பொன்னிலொ, பொருளிலோ இல்லை, அம்மாவின் மனப்பக்குவம், மற்றும் சமையல் கைப்பக்குவம் வரப் பெற்றாலே வரம்!
# இப்படிக்கு, சாப்பாட்டுராமி! 

----------------------------------------------------------------------------------------
Photo: அன்பு கொண்ட இருவேறு உள்ளங்களில், 
இயல்பு மாறமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் உள்ளம் குழந்தை 
எதையும் மாற்றிக் கொண்டு நதி போல் பயணிக்கும் உள்ளம் தாய்மை 
தாய்மையும், குழந்தைத்தனமும் கலந்ததே அன்பு! 
அன்பினால் அமைவதே உறவு! 

அன்பு கொண்ட இருவேறு உள்ளங்களில்,
இயல்பு மாறமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் உள்ளம் குழந்தை
எதையும் மாற்றிக் கொண்டு நதி போல் பயணிக்கும் உள்ளம் தாய்மை
தாய்மையும், குழந்தைத்தனமும் கலந்ததே அன்பு!
அன்பினால் அமைவதே உறவு!

-------------------------------------------------------------------------------------------------
குடிசையில் இருந்தாலும், கோபுரத்தில் இருந்தாலும்
இருப்பதை ரசிக்கத் தெரியாத உள்ளங்களுக்கு
வாழ்வில் நிறைவே இருப்பது இல்லை
#ஓட்டைப் பாத்திரம்

--------------------------------------------------------------------------------------------------
ராஜபக்க்ஷேவுக்கு அழைப்பிதழ் அனுப்பி, 37 இடங்களில் நாமம் போட்ட தமிழக மக்களுக்குத் தங்கள் முதல் நன்றியறிவிப்பைத் தொடங்கி உள்ளனர்
#நேற்றே நில அதிர்வுத் தொடங்கி விட்டது!

---------------------------------------------------------------------------------------------------------
   

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...