Friday, 30 May 2014

அப்பாவின் அன்பு

சிலவேளைகளில்
பள்ளிச் சிறுமியாய்,
ஒருபொழுதில்
மணமானவளாய்,
அரிதான நேரங்களில்
பிள்ளைச் சுமந்திருந்தவளாய்,
நினைவுத் தப்பி
படுக்கையில் வீழ்ந்தபின்
மகளைப் பற்றிய நிகழ்வுகளை,
மாற்றி மறந்து கேள்விகள்
கேட்ட தந்தைக்கு -
தன் மகளை மட்டும் எளிதில்
மறக்கமுடியவில்லை
மற்றவர்களைப்போல்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...