Friday, 24 March 2017

காளி அவதாரங்களே தேவை

எந்தக்கோவிலைக் கட்டினாலும்
சிலைகளைச் சிறைவைத்து
கட்டண அடிப்படையில்
அந்தணர்களின் சமஸ்கிருத
மந்திரத்தில்
கம்பிகளுக்கு அந்தப்பக்கம்
காட்சித்தருவார் கடவுள்
திருட்டு மானுடர்களுக்கு
பயந்து
கம்பிகளில் அடைபடும்
சிலைகளுக்கு
மற்றுமொரு கோவிலெதற்கு?!

பெண்களை மதிக்காத
இந்தப்பூமிக்கு
மனைவியைச் சந்தேகித்து
தீக்குளிக்க வைத்த
ராமனின் கோவில்களைவிட
தீயவர்களைக் கொன்று
களிக்கும்
காளி அவதாரங்களே
அவசியத்தேவை!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...