Tuesday, 7 March 2017

மீனவர்_படுகொலையாம்

மழை வெள்ளத்தில் செத்தவர்கள்
பேருந்தில் எரிந்தவர்கள்
பள்ளியில் கருகியச் சிறுமலர்கள்
மகா மகக் குளத்தின் நெரிசலில் மாண்டவர்கள்
விவசாயிகளின் தொடர்மரணங்கள்
கூடங்குளத்தில் கருகிய நிலங்கள்
நெடுவாசலில் காயப்போகும் நிலங்கள்
காடழித்ததால் இறந்துபோகும் வனஉயிர்கள்
என்று தொடர்ந்துக்கொண்டேயிருக்கும்
உள்நாட்டுக் கொலைகளுக்கே
நெடுமரமாய் நின்றவர்களிடம்
#மீனவர்_படுகொலையாம்
"நீதி" கேட்கிறார்கள்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...