Wednesday, 31 October 2012

ஒலியற்ற மொழி


எனக்கு அடையும் அவியலும்
மகள்
எனக்கு பரோட்டா குர்மா
மகன்
எனக்கு இட்லி போதும்
அப்பா
வர விருந்தாளிக்கு மதியம்
சமையல் சேத்து சமைச்சிடு....
உத்தரவுகள் குவியும் தினமும்

ஒருவருக்கும் தோன்றவே இல்லை
அம்மாவை கேட்க வேண்டுமென்று
ஒருவருக்கும் தெரிவதும் இல்லை 
அம்மாவுக்கு என்ன பிடிக்கும் என்று! 
 

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...