Tuesday, 8 September 2015

கண்ணாமூச்சி‬!


நலமென்றே பகர்ந்து நகர்ந்து விடுகிறேன்
பெரும்பாலும் - நலமா யென்று
நீ கேட்கும் பொழுதெல்லாம் - அவை என்
உடல்நலம் குறித்த கேள்வி யென்று
நான் வெறுமையை உணர்ந்துக்கொள்ளும் பொழுதினில்
வாசிக்கவியலாக் கடிதங்களைக் காற்றில்
எழுதுதல் போல்,
நலமில்லை மனமென்று
சொல்லத் துடிக்கும் வார்த்தைகளை,
நான் சொல்லவும் இல்லை,
நீ கேட்கவும் இல்லை,
நலத்துக்கு மாறான வார்த்தைகளை
கேட்டு நீ செய்யப்போவதும் ஏதுமில்லை,
நமக்கென்று
நேரமில்லாத இந்த வாழ்க்கைமுறையில்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...