Tuesday, 8 September 2015

கீச்சுக்கள்!

செயல்படுத்த படாத எந்த நற்சிந்தனையும்
சிறப்புறுவது இல்லை!!!
ஐ மீன் சோம்பலைத்
துரத்தாவிட்டால் எதுவும் கிடைக்காது! :-)
----------------------------------------------------------------------------------------------
ஒட்டுப்போட்ட மக்களுக்கு சாதாரண குடிநீரை சுத்தமாய் வழங்க முடியாத அரசுதான் உயர்தர மதுபானங்களை குடிமக்களுக்கு வழங்க எலைட் பார்களையும் அமைக்கிறது!
feeling sarcastic.


-----------------------------------------------------------------------------------------------------------

சென்னைப் பல்கலைக்கழக விழாவுக்குப் பிரதமர் சென்னை வருகை
- செய்தி
நல்லா விசாரிச்சுப் பாருங்க, கடற்கரையோரம் உள்ள அழகிய கிராமம்ன்னு மேப்பைப் பார்த்து யாராச்சும் டூர் புக் பண்ணி இருப்பாங்க!
-----------------------------------------------------------------------------------------------------------------
முன்னாடியெல்லாம் தெருவில் போகும்போது அங்கே அங்கே போலீஸ் தலைத் தெரிஞ்சா, அம்மா அலுவலகம் போறாங்கன்னு ஊருக்கே தெரியும், இப்போ போலீசைப் பார்த்தா, அங்கே ஏதோ டாஸ்மாக் கடை இருக்கான்னு, கண்ணுத் தேடுது....

நோ வைல்ட் இமாஜிநேஷன் ....ஒன்லி, பொதுஅறிவு!
-----------------------------------------------------------------------------------------------------------
ஏதோ ஓர் உளமார்ந்த அன்பும் அசாத்திய நம்பிக்கையும் ஒருவரை வாழச் செய்கிறது, அவை பொய்த்துப் போகும் நொடிகளில் வாழ்க்கையும் பொய்த்துப் போகிறது!
--------------------------------------------------------------------------------------------------------------------
தோல்விகளும், அவமானங்களும், வேதனைகளும் தான் வாழ்க்கையைச் செதுக்குகிறது, நம்மையும் பிறரையும் சரியாய் உணர்ந்துக்கொள்ள துணைக்கு வருவதும் அவைகள்தாம்!
-------------------------------------------------------------------------------------------------------------------
After finishing IPS we should protect drunkards and after finishing IAS we should nod the head for corrupted politicians, IRS, IFS, graduates, and post graduates all forced to follow the trail and face the wrath of corruption and violence! Oh my nation! 
----------------------------------------------------------------------------------------------------------------------
Suppression only leads to revolution
And revolution alone leads to Reformation of the society!
‪#‎tasmac‬
--------------------------------------------------------------------------------------------------------------------
மாறி மாறி இருக்கும் கட்சிகளே ஆட்சிக்கு வந்து நாட்டைச் சுரண்டுவதற்குத் தேர்தல் என்ற ஒன்றை வைத்துப் பணத்தை வீணாக்குவதற்குப் பதில், சுழற்சி முறையில் இவர்களுக்குக் குத்தகைக்கு விட்டுவிடலாம்!
நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள், என்ன பேஸ் புக், ட்விட்டர் என்று இவர்கள் செய்யும் அலப்பரைதான் கொஞ்சம் அதிகம் என்று மந்திரிகள் கொஞ்சம் அலுத்துக் கொள்ளலாம்!
இனிமேலாவது தேர்தலில் ஒட்டுக்கேட்டு வருபவரின் கட்சியைப் சாதியைப் பார்க்காமல், தனி மனிதராய், அவர் இதற்கு முன் செய்தது என்ன, இதற்கு முன் ஜெயித்திருந்தால் அவர் தொகுதிக்கு செய்தது என்ன என்று அலசி ஆராய்ந்து ஓட்டுப்போடுங்கள் மக்களே!
---------------------------------------------------------------------------------------------------------------

சென்னையில் சில இடங்களில் குடிநீர் வராமல் இருக்க, பல இடங்களில் வந்த குடிநீரையும், கழிவு நீர்க் குழாய் வேலை, கேபிள் பதிக்கும் வேலை, மின்சாரப் பணி என்று அவ்வப்போது தோண்டி, குடிநீரோடு கழிவுநீரைக் கலந்தாயிற்று, தொடரும் புகார்களுக்கும் பதிலேதுமில்லை!
மழைப் பெய்கிறது, சாலையில் ஆறாக ஓடும் நீரும் சாக்கடையோடு கலக்கிறது, பல வீடுகளில் மழைநீர் சேகரிப்புக் குழாய் என்பது சாலையை நோக்கியே நீரைப் பாய்ச்சுகிறது, மழை நீர் சேகரிப்புத் திட்டமும் தூர்ந்து போய்க் கிடக்கிறது.

எந்தப் பணியிலும், ஒப்பந்த தொழிலாளர்களை மட்டுமே காணமுடிகிறது, மேற்பார்வையிட்டு வேலையைச் சரியாய் செய்கிறார்களா என்று பார்க்கும் அதிகாரிகள் உடனில்லை..... 

ஆங்கில ஆட்சியில் இந்திய நாட்டு மக்கள் எல்லோரும் குடிக்கக் கஞ்சிக் கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொன்ன போது, கஞ்சி இல்லாவிட்டால் என்ன பிரட் சாப்பிட சொல்லு என்று சொன்ன இங்கிலாந்து ராணியைப் போல, மழை நீர் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, குடிநீரில் சாக்கடைக் கலந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, அதுதான் தெருவுக்குத் தெரு டாஸ்மாக் இருக்கிறது, எலைட் பார் இருக்கிறது, அவரவர் வசதிக்கேற்ப சரக்கு வாங்கிக் குடிக்கச் சொல்லு என்று சொல்லுவார்களோ என்று நினைக்கும்போது......ஷப்பா....இப்பவே கண்ணைக் கட்டுது
நாட்டில் அதிகாரிகள் மந்திரிகளுக்கெல்லாம் கூட உடல்நிலை சரியில்லை போல!
-------------------------------------------------------------------------------------------------------------

ஒரு கத்தியை எடுத்துக் குத்துவது போல் வார்த்தையில் சிலரை கொல்வது எளிதாக இருக்கிறது, அதன்பிறகு வழியும் மௌனத்தைப் போல் வழியும் குருதியைத் துடைப்பதும், அந்த மாறாத வடுவை சகிப்பதும்தான் இயலாததாக இருக்கிறது
-------------------------------------------------------------------------------------------------------------------
பழமைவாதிகள், பாமரர்கள் சாதியை பெயரிலும், மனதிலும் சுமந்தார்கள்,
புதுமைவாதிகள், படித்தவர்கள், சாதியை இன்னமும் பெயரிலும், நடத்தையிலும் வழி நடத்துகிறார்கள்! 

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...