#அணுக்கதை
"யோவ் வா, துண்டுப்போட்டாச்சு, கையப்புடி, எவ்வளவு? ம்ம் ..கட்டாது கட்டாது"
"இந்தம்மா நீ வா, ஆங்...ம்ம் சரி சரி பார்ப்போம்"

"இந்தய்யா, இந்தம்மா, நல்ல கொழுத்த மாடு, ரெண்டு பேரும் மச மசன்னு பேசாமா,
நல்ல ரேட்டா போட்டு சொன்னீங்கன்னாதான் யாருக்காச்சும் ஒருத்தருக்கு
முடிக்க முடியும், முதலாளி நல்ல ரேட் எதிர்பார்க்கிறாரு" ("என் கமிஷனா வேற
எடுக்கணும் நானு - ஏஜெண்டின் மைண்ட் வாய்ஸ்)
ஆணும் பெண்ணும் ஒரே குரலில் "அடி மாடா போகப்போற மாட்டுக்கு இன்னும் எவ்வளவு தருவாங்க, ம்க்கும்! "
ஏஜெண்ட் "என்னது அடிமாடா, இன்னும் அதோட இரத்தம் வர வரைக்கும் கறந்து, தோல் வத்திப் போறவரைக்கும் உங்களுக்கு இந்த மாட்ட விட மனசு வராதுன்னு எனக்குத் தெரியும், எடக்குமடக்கா பேசி அந்தா நடுவுல இருக்குற முதலாளியே மாட்ட பத்திட்டுப் போற மாதிரி பண்ணீடாதீக, சாதுவா பாத்துட்டு இருக்குற மாடு வேற உங்க எகனமொகன பேச்ச கேட்டு மிரளுது, மாடு முட்டறதுக்குள்ள பேரத்தை முடிங்க!"
பேரம் முடிந்து ஒருவர் கயிற்றை இழுத்துக்கொண்டுப் போக ஜல் ஜல் என சலங்கையொலிக்க மாடுத்துள்ளிச் சென்றது!
யாருக்கு மாடுன்னு கேக்கறீங்களா? "அடிமாட்டுக்கு" முதலாளி யாரா இருந்தா என்ன? 😜
#மாட்டுச்சந்தை #மனிதமந்தை

No comments:
Post a Comment