மும்பையின் நெரிசலில் மற்றுமொரு விபத்து, ஏராளமான உயிர்ப்பலிகள்!
குறுகிய அந்த நடைமேடைக்கு மற்றொன்றை உருவாக்க 2015 ல் இருந்து யோசித்து,
2016 ல் இருந்து டெண்டர் விட்டு காத்திருக்கிறார்களாம், மக்கள் நலப்பணிகள்
என்றால் இப்படித்தான் ஆற அமர மக்கள் சாகும்வரை செயல்படுத்த
யோசித்துக்கொண்டேயிருப்பார்கள்!
சென்னையில் ஜிஎஸ்டி சாலையில், ராஜிவ் காந்தி சாலையில், கிட்டத்தட்ட பல இடங்களில் விளக்குகள் இல்லை, மக்கள் சாலையைக் கடக்க நடைமேடைகள் இல்லை, சீனப்பெருஞ்சுவர் போல சுவரை கட்டினாலொழிய மக்கள் சாலைதடுப்பின் மீதேறி நடுத்தெருவில் குதிப்பதை நிறுத்தப்போவதில்லை, மிகப்பெரும் அளவில் மக்களோ அல்லது மிக முக்கியப்புள்ளிகளோ அவர்களின் உறவுகளோ விபத்தில் சாகும்வரை இந்த அரசு நடவடிக்கை எடுக்காது, இதே போல் சாராயத்தால் மக்கள் மெதுவே சாகாமல், கொத்துக்கொத்தாய் சாகும்வரை இந்த அரசு சாராயம் விற்பதை நிறுத்தாது, ஒரு அனிதா என்றில்லாமல் ஓராயிரம் அனிதாக்கள் சாகாமல் இங்கு கல்வியில் மாற்றம் வராது, இந்த சில உதாரணங்களிலும் நீங்கள் தெளிவாய் புரிந்துக்கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான், இத்தனை மரணங்கள் நிகழ்ந்தால் அரசு மாற்றத்தை கொண்டுவருமா என்றால், நிச்சயம் இல்லை, மக்கள் உயிர்கள் என்பது அரசுக்கு எண்ணிக்கை கணக்குதான், நிறைய உயிர்கள் போகும்போதே மக்களாகிய நமக்கு ஆற்றாமை பெருகும், கோபம் வரும், கொஞ்சமேனும் கொதிப்போம், அரசு போனால் போகிறதென்று செவிசாய்க்கும்!
மக்கள் எவ்வழி அரசும் அவ்வழி!

No comments:
Post a Comment