அடையார் பாலத்துக்கு முந்தைய சாலையின் திருப்பத்தில் முன்னே
சென்றுக்கொண்டிருந்த டிவிஎஸ் 50 ஒன்று நடுநடுவே வேகம் குறைத்து நின்றது,
அதன் ஓட்டுநர் எதற்கோ பின்னே வருபவர்களுக்கு ஒரு கையை உயர்த்திக்
காட்டிக்கொண்டே சென்றார், அவர் முன்னே எந்த வாகனமும் இல்லை, அவரும்
குறுக்கும் நெடுக்குமாய் செல்வதும், திடீரென நிற்பதும், கையை
உயர்த்துவதுமாய் இருந்தார், கடவுளே என்று யோசித்த வேலையில், கொஞ்சம் முன்னே
சென்ற லாரி, அவர் அருகில் சென்று கைநீட்டி ஏதோ திட்டிவிட்டு சென்றது, அதன்
பிறகே மனிதர் ஓரங்கட்டினார்!
ஆனால் இந்தச் சமூகம் எப்படிப்பட்டது பாருங்கள், பெரிய வாகனங்கள் புடைசூழ, ஒருவர் சாலையை அடைத்து, எல்லோரையும் மணிக்கணக்கில் நிற்க வைத்து பின் சவகாசமாய் செல்லும்போது நமக்கு வராத கோபமெல்லாம், ஒரு எளிய டிவிஎஸ் பிப்டி மீது வந்துவிடுகிறது, பாவம் அந்த டிவிஎஸ் பிப்டி மனிதர், குனிந்து கும்பிட்டால் முதல்வராகும் கனவில் கையை நீட்டி காட்டி ஒரு கனவுலகில் சென்றவரை, லாரி டிரைவரின் வசவுகள் நிகழ்வுக்கு கொண்டுவந்துவிட்டது!
எச்சரிக்கை: இது அரசியல் பதிவு அல்ல!
--------------------
மனிதர்களின் துயரங்கள் மரணத்தில்தான் தெரிகிறது
அல்லது அப்போதுதான் தெரிந்தது போல் நடிக்கிறோம்!
-----------------------
முன்னாள் பிரதமர் பேசவில்லை என்று கிண்டல் செய்தோம், இன்னாள் பிரதமர் பேசவே வேண்டாம் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறோம்! அவ்வளவு பயம்😜
----------------
எத்தனை உறவுகள் இருந்தாலும், பொங்கி வெடிக்கும் எரிமலை போல, தாங்க
முடியாதொரு நெருக்கடியை, சுமக்க முடியாமல் சுமந்து துவண்ட மனமொன்று,
யாருமில்லை என்ற ஒரு கணத்தின் இருட்டில், "தற்கொலை" என்ற முடிவை
எடுக்கிறது!
-----------------
நெடுஞ்சாலையில் வேகமாய் சென்றுகொண்டிருக்கும் ஒரு மகிழுந்தை, சட்டென்று ஒரு டிவிஎஸ் பிப்டியின் பின்னே நிற்க வைத்து, அதைத்தொடர வைக்கும் அந்த நிலைக்குப் பெயர்தான் ஜென்நிலை!
--------------
எந்த நம்பிக்கையையும் சிதைத்து விடாமல் வாழும் வாழ்க்கை வரம், ஆனால் அதன் எதிர்பதம்தான் வாழ்க்கை பொதுவில்!
--------------
A proactive communication is much appreciated instead of a reactive outburst of emotion!
-----------------
தினந்தோறும் அரசு செய்ய வேண்டிய கட்டுமானப்பணிகள் குறித்தும், மந்தமாய் செயல்படும் அரசு எந்திரம் குறித்தும் மக்கள் எழுப்பும் குரல்கள் செய்தித்தாள்களை நிறைக்கிறது, அரசை எதிர்ப்பார்க்காமல், மக்களே இறங்கி ஏரிகளை, குளங்களைத் தூர்வாருவதும், சாலைகளை சரி செய்வதும் கூட நடக்கிறது, வரிகளை மட்டும் வாங்கிக்கொண்டு, பல வாகனங்கள் புடைசூழ பவனி வரும் முதலமைச்சர், "சிக்கனமாய் இருந்து சேமிக்க குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்" என்று செய்தித்தந்திருக்கிறார்!
ஒருவேளை எந்தப்பணிகளையும் செய்யாமல் சிக்கனமாய் இருப்பதே உலகவங்கியில் பட்டக் கடனை அடைப்பதற்குத்தான் என்று நம்புவோம்!
இப்படிக்கு,
#தமிழக_நாசா_விஞ்ஞானிகள்_சபை!
ஆனால் இந்தச் சமூகம் எப்படிப்பட்டது பாருங்கள், பெரிய வாகனங்கள் புடைசூழ, ஒருவர் சாலையை அடைத்து, எல்லோரையும் மணிக்கணக்கில் நிற்க வைத்து பின் சவகாசமாய் செல்லும்போது நமக்கு வராத கோபமெல்லாம், ஒரு எளிய டிவிஎஸ் பிப்டி மீது வந்துவிடுகிறது, பாவம் அந்த டிவிஎஸ் பிப்டி மனிதர், குனிந்து கும்பிட்டால் முதல்வராகும் கனவில் கையை நீட்டி காட்டி ஒரு கனவுலகில் சென்றவரை, லாரி டிரைவரின் வசவுகள் நிகழ்வுக்கு கொண்டுவந்துவிட்டது!
எச்சரிக்கை: இது அரசியல் பதிவு அல்ல!
--------------------
மனிதர்களின் துயரங்கள் மரணத்தில்தான் தெரிகிறது
அல்லது அப்போதுதான் தெரிந்தது போல் நடிக்கிறோம்!
-----------------------
முன்னாள் பிரதமர் பேசவில்லை என்று கிண்டல் செய்தோம், இன்னாள் பிரதமர் பேசவே வேண்டாம் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறோம்! அவ்வளவு பயம்😜
----------------
சாமியார்கள் ஆட்சி செய்தால் என்னவாகும் என்று இந்தியா மற்றும் உபியைப் பார்த்தும், ஒட்டுமொத்த விஞ்ஞானிகள் ஆட்சிசெய்தால் என்னவாகும் என்று தமிழகத்தைப் பார்த்தும் தெரிந்துக்கொள்ளுங்கள்! 😏😜
-------------
இந்த விஞ்ஞானிகளின் ஆட்சியில் கொசுக்கள் கூட நட்டாமை செய்கிறது! 😜
----------------
----------------
-----------------
நெடுஞ்சாலையில் வேகமாய் சென்றுகொண்டிருக்கும் ஒரு மகிழுந்தை, சட்டென்று ஒரு டிவிஎஸ் பிப்டியின் பின்னே நிற்க வைத்து, அதைத்தொடர வைக்கும் அந்த நிலைக்குப் பெயர்தான் ஜென்நிலை!
--------------
எந்த நம்பிக்கையையும் சிதைத்து விடாமல் வாழும் வாழ்க்கை வரம், ஆனால் அதன் எதிர்பதம்தான் வாழ்க்கை பொதுவில்!
--------------
A proactive communication is much appreciated instead of a reactive outburst of emotion!
-----------------
தினந்தோறும் அரசு செய்ய வேண்டிய கட்டுமானப்பணிகள் குறித்தும், மந்தமாய் செயல்படும் அரசு எந்திரம் குறித்தும் மக்கள் எழுப்பும் குரல்கள் செய்தித்தாள்களை நிறைக்கிறது, அரசை எதிர்ப்பார்க்காமல், மக்களே இறங்கி ஏரிகளை, குளங்களைத் தூர்வாருவதும், சாலைகளை சரி செய்வதும் கூட நடக்கிறது, வரிகளை மட்டும் வாங்கிக்கொண்டு, பல வாகனங்கள் புடைசூழ பவனி வரும் முதலமைச்சர், "சிக்கனமாய் இருந்து சேமிக்க குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்" என்று செய்தித்தந்திருக்கிறார்!
ஒருவேளை எந்தப்பணிகளையும் செய்யாமல் சிக்கனமாய் இருப்பதே உலகவங்கியில் பட்டக் கடனை அடைப்பதற்குத்தான் என்று நம்புவோம்!
இப்படிக்கு,
#தமிழக_நாசா_விஞ்ஞானிகள்_சபை!
No comments:
Post a Comment