Saturday, 21 November 2015

எது மழைத்தரும்?

ஏரிகளை அழித்தோம்,
குளங்களை ஒழித்தோம்
ஆறுகளின் தடங்களை மாற்றியமைத்தோம்!

காடுகளை அழித்தோம்,
விலங்குகளையும் கூண்டில் அடைத்து
வேடிக்கைப் பார்த்தோம்!


கடலிலும் கூடச் சாக்கடைக் கலந்து
எண்ணெய் கழிவுகள் கொட்டி
அதன் வனப்பைக் குலைத்தோம்!

நீவிர் எந்தக் குலமென்றாலும்
எத்தனை அதிகாரம் கொண்டாலும்
எந்தக் கட்சியென்றாலும் எந்தக் கொள்கையென்றாலும்
எப்பதவியில் இருப்பவரென்றாலும்
உங்களின் எதைக் கொண்டு
இயற்கையை மீட்டெடுப்பீர்?

உங்களின் எச்செல்வம்
நாளை சந்ததிக்கு நிழல் தரும்?
உங்களின் எப்பெருமை
அவர்களுக்கு நீர் தரும்?
உங்களின் எந்தக் கட்சி
அவர்களுக்கு உணவு தரும்?
உங்களின் எந்த அதிகாரம்தான்
நாளை மனிதர்களுக்கு மழைதரும்?

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...