Monday, 30 November 2015

தேவன்கள் இல்லா நகரம்

 

குடிப்பது அவனா அவளா
என்று பார்க்கிறீர்கள்
அவன் என்றால்
பரிதாபமோ இல்லையென்றால்
ஓர் அலட்சியமோ
அவள் என்றால்
உங்கள் கற்பனைக்கு
தீனிக் கொடுக்கிறீர்க ள்
எழுதுவது அவனா அவளா
என்று பார்க்கிறீர்கள்
அவன் என்றால்  
எழுத்தை மெச்சியும்
அவள் என்றால்
அவளை எடைபோட்டும் செல்கிறீர்கள்
புத்திக் கொண்டு பேசுவது
அவனா அவளா என்று பார்க்கிறீர்கள்
அவன் என்றால் புகழ்ச்சியும்
அவள் என்றால் இகழ்ச்சியும் செய்கிறீர்கள்
சாலையில் விரைவது
அவனா அவளா என்று பார்க்கிறீர்கள்
அவன் என்றால் சாதாரணக் காட்சியாகவும்
அவள் என்றால் 
சிறப்புக் காட்சியாகவும் காண்கிறீர்கள்
எல்லாவற்றிலும் யாரோ
ஓர் அவளைத் தாழ்த்திவிட்டு
உங்கள் அவளை மட்டும்
தேவதை என்கிறீர்கள்!
 
தேவன்கள் இல்லாத நகரத்தில்
தேவதைகள் என்ன செய்வார்கள் பாவம்?

 





No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...