Tuesday, 24 November 2015

கடவுள் காரணமில்லை

நாடு, மொழி, இனம், மதம், சாதி என்று
மனிதர்கள் வெட்டிக் கொண்டு சாக
ஒரு போதும் கடவுள் காரணமில்லை,
அவரை யாரும் பார்க்கவும் இல்லை,
கொலை செய்வதற்கு முன்பு நீங்கள்
கொல்லப்படுபவனின் கண்களை
உற்று நோக்கவும் இல்லை
இறந்தவனின் இறைஞ்சிய பார்வையில்
அவனின் கண்ணீர் துளிகளில்
அந்தக் கடைசி நேரக் கண்சிமிட்டலில்
கடவுள் தோன்றினார் - ஆமாம்
நீங்கள் அவரைப் பார்க்கவேயில்லை
இறைவன் மரித்துப்போனார்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...