Tuesday, 8 November 2016

எஞ்சியிருக்கும் சுதந்திரம்

போலியான மருந்துகள்
தரமில்லாத மருத்துவம்
கலப்பட உணவுகள்
அழிந்து வரும் விவசாயம்
பெண் சிசுக் கொலைகள்,
மறுக்கப்படும் முன்னேற்றம்
பெருகும் சாராயம்,
போதையில் உழலும் ஆண் குணம்
பெருகும் விபத்துக்கள்,
கட்டமைப்புகளின் அலட்சியம்
ஒருதலைக் காதல் கொலைகள்,
சீரழியும் சமுதாயம்
ஆபத்தான அணுஉலைகள்,
சோதனை எலியாகத் தமிழகம்
சாதிக்கலவரங்கள்,
அறியாமையின் வெறியாட்டம்
மதக்கலவரங்கள்,
அரசியலின் உள்ளாட்டம்
யோசித்துப் பார்த்தால்,
மிகுந்த எச்சரிக்கையான வார்த்தைகளில்
இதையெழுதும்
ஒடுக்கப்பட்ட ஜனநாயக உரிமையும்
அமைச்சர்கள் உலா சென்றபின்
வீதியில் மிச்சமிருக்கும் சுதந்திரக் காற்றும்
இங்கே எஞ்சியிருக்கிறது
ஓட்டுப்போட்ட மக்களுக்கு!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...