Tuesday, 8 November 2016

காதல்



அந்த மழைநேரத்து மாலையில்
அமிருதவர்ஷினி இசைத்த நீதான்
மயங்கியப் பொழுதில்
சகானாவில் காதல் இயம்பினாய்
கம்பீரம் இழந்த அட்டானவில்
அவ்வப்போது கோபமும் சோகமுமாய்
வரலியும் சிவரஞ்சனியும் நாட்டியமாட
பூபாளத்தின் விடியலை எதிர்நோக்கியது
மனது
ராகங்கள் இப்போதும் மனதில்
இசைக்கிறது
கருணையற்ற உன் அமிருதவர்ஷினியோ
மேகங்களிடம் தோற்று
என் கண்களில் வெல்கிறது
கல்யாணியின் ஆலாபனையில்
ஆனந்தபைரவியின் நினைவுச்சாரலில்
அந்த மழைநேரத்து மாலையில்
சஞ்சரிக்கும் காதலை
நீ மீட்டெடுக்கும் பொழுதில்
அமிருதவர்ஷினியை
நாம் சேர்ந்திசைக்கலாம்!


No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...