Tuesday, 8 November 2016

அவள் வீடு

படிப்பை மறுத்து
கட்டாயத் திருமணம்
செய்து வைத்த
பிறந்த வீடும்
உடல் வாதையின்
கவலையின்றி
ஆண் பிள்ளைக்காக
முன்னது மூன்றையும்
பெண்களாக ஈன்று
நான்கில் வந்து உதித்த
மகன் கொடுத்த
தற்காலிக விடுதலையில்
மூச்சுவிட்டு
எனக்கு இது பிடிக்கும்
என்று கணவனும்
அவன் உறவுகளும்
வரையறுத்த எல்லையில்
தனக்கென பிடிக்குமென்பதை
மறந்து
வாழ்க்கையின் ஆசைகளை
நினைவுகளின் நிழலில் உலர்த்தி
அவள் வெறுமையாய்
உழன்ற
அந்த புகுந்தவீடும்
தராத ஒரு பேரின்பத்தை
அந்த ஈடுகாட்டு ஆறடி
நிலம்
தந்த உணர்வில்
ஆயா நிம்மதியாய்
உறங்கிக் கொண்டிருக்கிறாள்!
"மாறாத இவ்வுலகத்தில்
பிறக்காதே இனி நீ!"
என்ற வேண்டுதலுடன்
அடுத்த தலைமுறை
பெண் ஒன்று
அச்சிதை அருகே
மௌனமாய் கரைகிறது!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...