Wednesday, 5 February 2014

இவர்கள் தான்

இவர்கள் தான்,

1. தமிழ் இனத்தை அழிக்கத் துணைபுரிந்து, தண்ணீர் கொடுக்க மறுத்து, மின்சாரம் கொடுக்க மறுத்து, தினம் தினம் கடலில் உயிர் விடுபவனுக்குக் கருணைக் காட்ட மறுத்து, புளித்துப் போன பழைய பொருளாதார மேதைகளை வைத்துக்கொண்டு உள்ளூர்த் தொழில்களை நசித்து...................

2. எல்லாத் தவறுகளுக்கும் அடிப்படையாய் இருக்கும் "குடி" கொடுத்து "குடி" கெடுத்தும், இதைச் செய்வோம் அதைச் செய்வோம் என்று வாக்குறுதிக் கொடுத்த, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அத்தனை பெரும் எங்கே என்றே தெரியாமல், அறிக்கை மேல் அறிக்கை மட்டுமே அவ்வப்போது கொடுத்துக்கொண்டு, உள்ளுரில் ஓணான் பிடிக்காமல்.............

3. மதத்தின் அடிப்படையில் கலவரங்கள் செய்து விட்டு, சிறுபான்மை மக்களை நசுக்கி விட்டு, எதிர்ப்பு அரசியலின் அலையில் மக்களை மழுங்கடித்து.......

4. இங்கேயே அங்கேயே என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டு, இது சீனாவில் இருப்பதா, ரஷ்யாவில் இருப்பதா, கேரளாவில் இருப்பதா என்று ஏகப்பட்ட குழப்பத்தில், முதலில் இவர்கள் இருப்பது மக்களுக்குத் தெரிகிறதா என்ற சந்தேகத்தில்......

இவர்களும், மேலும் சிலரும், மீண்டும் நம்மை வேண்டி வருகிறார்கள், இதில் தேர்ந்தவரை- சிறந்தவரை, நாம் கண்மூடி தேர்ந்தெடுக்கப்போகிறோம் இந்த மாபெரும் ஜனநாயகத்தில்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...