Tuesday, 3 March 2015

பொறுமையுடன் பூமி




An Orange Man Aggressively Digging For Oil On Top Of The Globe, See The Aweful Mess Of The Earth He Is Making!
கண்களைக் கொத்தியது
போல் மரங்களைப் பிடுங்கி
இன்னும் இன்னுமென
நிலக்கரித் தோண்டி
வைரம் தங்கமென
அகழ்ந்தெடுத்து,
எடுத்து எடுத்து
மனிதன் சலித்துப்போன
வேளையிலும்
மிச்சமென இருந்த
குழிகளிலும்
அவனை "அதுவாய்"
ஏந்திக்கொள்ள
இசைவாய்த்தான்
இருக்கிறது
பொறுமையுடன்
பூமி 

1 comment:

  1. பொறுமையை
    சோதிக்க
    சோதிக்க.....
    பொறுமையாய்...

    ReplyDelete

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...