Tuesday, 18 September 2012

நோக்கம்

சுழன்றோடும் சுழல்கள்
எதுவாயினும்,
'அக்கா, உங்கள் வீட்டில்
எங்கள் அனைவர்க்கும்
இடமிருக்குமா?' என
முந்நூறு குழந்தைகளின் பிரதிநிதியாய்
என் கைபிடித்து கேட்ட ஒரு மழலையின்
வார்த்தைக்காகவே நான்
ஓடி கொண்டேயிருக்கிறேன் ஓய்வில்லாமல்
இறக்கும் முன் இயன்றதை செய்து விடும்

வேகத்தில்!
நோக்கத்தில் மாற்றமில்லை
வேக தடைகள் எதுவாயினும்!

ஒரு வார்த்தை கொல்லும்
ஒரு வார்த்தை வெல்லும்
நம் வாழ்க்கை வீழ்வதற்கோ - அல்லது
வாழ்வதற்கோ? - அது நம் கையில் தான்
என்பதை காலம் ஒருநாள் சொல்லும்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...