Tuesday, 18 September 2012

நட்பு


எப்போதும் கைப்பிடித்து
கதைப்பேசி திரிந்தோம்
பின்பு சிலகாலம்
கடிதம் மூலம் கதைத்தோம்
அடுத்து பல சமயம்
கைப்பேசியில் வார்த்தைகளை வடித்தோம்
இன்று பல நேரம்
சமூக வலைத்தளத்தில் நம்

ஆன்மாவை தொலைத்தோம்

இப்படியே நட்பு
பல தளங்களை அடைந்தாலும்

ஏன் ஒற்றை விரல் நீ பிடித்து
நான் உன் தோள் அணைத்து,
நடந்த நேரம்......
நம் உள்ளத்தில் எழுந்த
உணர்வதனை - உணர்வினால்
உண்டான நம்பிக்கைதனை
இந்த
கைப்பேசியும் கணினியும்
வடிக்கும் வார்த்தைகள் மீட்டேடுக்குமோ தோழி?

பிறப்புக்கும் இறப்புக்கும்
வருகை தருவது
ஒன்றிரண்டு வார்த்தைகளில்
கணினியிலும் அலைபேசியிலும்
உணர்வுகளை பகிர்வது மட்டுமே
இன்று நட்பாகி போனது
நெஞ்சம் சுடுகடானது!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...