Tuesday, 18 September 2012

நம் கை நம்பிக்கை மட்டும்


பூக்கள் உதிர்கின்றன
வாசம் மட்டும் காற்றில்

மரங்கள் சாய்கின்றன
வேர்கள் மட்டும் மண்ணில்

உறவுகள் பிரிகின்றன

உதிரம் மட்டும் உடம்பில்

மனங்கள் விலகுகின்றன
நினைவுகள் மட்டும் நெஞ்சினில்

தோல்விகள் தொடர்கின்றன
நம்பிக்கை மட்டும் வாழ்க்கையில்

காய்ந்த சருகாக விழுந்தாலும்
மண்ணில் உரமாவோம்
விதையாக விழுந்தாலும்
மரமாக எழுந்து நிற்போம்

கைப்பிடித்து கழுத்தறுக்கும்
மனிதர்களை தவிர்த்து
துன்பத்திற்கும் இன்பம் செய்து
பயண வழி தூரம் - நல்ல
பாதை மாறாமல் நடப்போம்
நம்பிக்கை மட்டுமே மனதில்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...