Tuesday, 18 September 2012

Dreams of suppressed everywhere

கரு, உரு கொண்டு
வரும் போது கனவு!

உரு கொண்ட கரு
மலர்ந்து சிரிக்கும் போது
கனவு!

மலர்ந்து சிரிக்கும்
மொட்டு, மழலை
பேசும் போது கனவு!

மழலை பேசிய
மலர், கனியாகி
நிற்கும் போது கனவு!

கனி மணம் வீசும் போது,
கனியின் கனவு மலர்கிறது!
மலர்ந்த கனவு
ஆதிக்கத்தின் கையில்
கசக்கப்படும் போது கனவு!

கசங்கிய கனியின்
கனவு, அழிவின்
கையில் அகப்படும் போதும்
கனவு!

இந்த கனியின் அழிவில்
வரும் விதை உலகை
வெல்லும் என்றக் கனவு!

கனவில் பிறந்து,
கனவில் வளர்ந்து
கனவோடு கலந்து,
கனவின் பாதிப்பைப் பதித்து,
கனவோடு கரையும்,
அந்த கனியின் கனவு...???
கனவுகள் தொடர்கதை..

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...