ஒருவன் தீமைகள் செய்யும்போது ஊமையாய் இருந்துவிட்டு, அதே அவன் நல்லது
செய்தால் ஆஹா ஒஹோவென்று ஒருவரோ ஒரு கும்பலோ அளவுக்கதிகமாக புகழ்கிறது
என்றால் தெரிந்துக்கொள்ளுங்கள், அவர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக
இருக்கக்கூடும், இது அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்!
இங்கே சாதி கல்வியால், பொருளாதாரத்தால், பதவியால், பட்டத்தால், உலக அறிவால் அழியவில்லை, படித்தவர்களுக்கும் அது உள்ளூர ஒரு மகிழ்ச்சியை தந்துக்கொண்டிருக்கிறது, தாம் இந்தச்சாதி என்று பெருமிதம் கொள்ள வைக்கிறது, தன் சாதியைச் சேர்ந்த ஆட்களை காணும்போது உவகைக்கொள்கிறது, பணத்தைத் தவிர்த்து பரஸ்பரம் லாபம் பார்த்துக்கொள்கிறது, இத்தோடு நின்றுவிட்டால் பரவாயில்லை, அது அப்படியே வெறியாக மாறும்போது, பள்ளியில் மாணவர்களிடையே உப்புக்கு உதவாத விஷயத்தில் தொடங்கி, பிற்பாடு காதல் கல்யாணம், கொடுக்கல் வாங்கல் என்று எல்லாவற்றிலும் “உயிர்ப்பலி” கேட்கும் அளவிற்கு உருவெடுக்கிறது!

சுற்றிலும் பாருங்கள், உண்மை புரியும்! இல்லையென்றால் 120 கோடி மக்கள்
தொகையில் இந்தக் குற்றங்கள் சிறிய விழுக்காடு என்று மனதை தேற்றிக்கொண்டு
அமைதிக்கொள்ளுங்கள், மிகப்பெரிய அரசியல்வாதிகளாக மாறுவதற்கு
வாய்ப்பிருக்கிறது!
No comments:
Post a Comment