Saturday, 20 April 2019

மகளிர்_தினம்

இன்னும் எத்தனைவிதமான வன்முறைகளுக்கு, கொலைகளுக்கு “குடியை” காரணமாக்க போகிறீர்கள்? உத்தியோக நேரத்தில் ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதற்குக் குடி? எல்லா ஆண்களும் எல்லாத்துறைகளிலும் குடியிலேயே உழன்றால், எப்போதும் வன்முறைகளும் குறையாது, குடியை விற்கும் அரசை யார் தண்டிப்பது? உண்மையில் குடியால் வன்முறையென்பதை விட, வன்முறைக்காக குடி என்பதே பொருத்தமாய் இருக்கும்!
குடியில் மூழ்கியவன், சாலையில் போகும் பெண்ணை வம்பிழுப்பவன், வக்கிரம் நிறைந்தவன், அவதூறு பரப்புபவன், அசிங்கமாய் பேசுபவன், கீழ்த்தரமான பார்வைக்கொண்டவன், மனதைக் காயப்படுத்துபவன், உணர்வுகளைக் கொல்பவன், அடிமட்ட புத்தியுடையவன், அதிகாரம் செய்பவன், வன்முறை செய்பவன் என இந்தச் சமூகத்தில் ஏதோ ஒரு குறையுடனோ அல்லது எல்லாக்குறைகளுடனோ பெரும்பாலான ஆண் பிள்ளைகள் வளர்க்கப்படுகிறார்கள், சுற்றியிருக்கும் அப்படிப்பட்ட ஆண்கூட்டம் மாறும் வரை பெண்ணுக்கு தனியே ஒரு தினம் கிடையாது!
#மகளிர்_தினம்

March 9, 2018

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!