Saturday, 20 April 2019

வானம்_தெளிந்திருந்தது

அந்த வனத்தில்
அமர்ந்திருந்தேன்

அந்த மரம் அசையாதிருந்தது
காற்று வரவில்லை

அந்தப் பூ மலராதிருந்தது
வெளிச்சம் மலரவில்லை

அந்த வானம் பொழியாமலிருந்தது
கருமேகம் கூடவில்லை

அந்தக் காகம் கரையவில்லை
உணவின் தேவையில்லை

அந்தப் பொழுதில்
எதையும் எதிர்நோக்கவில்லை
உறைந்த கணத்தில்
மனதில் எதிர்ப்பார்ப்புமில்லை
#வானம்_தெளிந்திருந்தது!



Image may contain: 1 person, tree, outdoor and nature

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...