Saturday, 20 April 2019

வாழாமல் போனவள்

உனக்கு
வலிக்கவில்லையா
என்கிறான்
வலியில்லாத இடம்
தெரியவில்லை
என்கிறேன்
ஏன் அழவில்லை
என்கிறான்
எதற்கெல்லாம்
அழவேண்டும்
என்கிறேன்
இருக்கும்
இடைவெளியில்
சிரித்துவிடு
என்கிறான்
இடைவெளிகள்
உறக்கத்தால்
நிரம்புகிறது
என்கிறேன்
எப்போதுதான்
சிரிப்பாய்
என்கிறான்
ஒரு மீளா
உறக்கத்திற்கு
முன்போ
பின்போ
என்கிறேன்
ஒரு மலர்
வளையம்
வைத்துவிட்டு
நகர்கிறான்
அந்தக்
கல்லறையிலிருந்து
மௌனமாக
நான்
சிரிப்பதை
காணாமலேயே!


No photo description available.

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...