Saturday, 20 April 2019

ஆசிபா

ஒரு கோவிலில்
ஒரு கடவுளின் முன்னிலையில்
ஒரு பூசாரியால்
ஒரு கூட்டத்தால்
ஒரு உயிர் கொல்லப்பட்டது

கொலையைக்கொண்டாடும்
கேடுகெட்ட கூட்டம்
கடவுளின்
மீது வழிந்தோடும்
விந்துவை வழித்து
பிள்ளையின் குருதியுடன்
பிரசாதமென ருசித்து
இனி
வருங்காலத்தில்
அந்தக்கடவுளை
“விந்து நாயகன்”
என்று வழிபாடுசெய்துக்
கொள்ளலாம் (கொல்லலாம்)

எங்காவது
ஒளிந்துக்கொண்டிருக்கும்
கடவுளுக்கு
ஓரே விண்ணப்பம்
“எந்த ஆயுதம்
வேண்டும் இன்னும்
இவர்கள் குறிகள் அறுக்க?”

#Asifa


No photo description available.

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...