Saturday, 20 April 2019

பேரமைதி


காற்றைத் தவிர்த்து
தள்ளி நிற்கிறேன்
மனதில்
புயலடிக்கிறது

நீரைவிட்டு
வெளியேறினேன்
விழிகள்
மழையில் மூழ்குகிறது

சிறகுகளை கொடுத்து
தரையில் ஊர்கிறேன்
மனம்
இயலாமையில் கனக்கிறது

வார்த்தைகளை வேண்டி
மொழியற்றுப் போகிறேன்
உதடுகள்
ஈரமின்றி உலர்கிறது

இப்போது ஏதுமில்லை
யாருடைய சுமையாகவும்
யாருடைய பயமாகவும்
இல்லாமல்
நீண்டிருக்கும் இந்த இருளில்
கேள்விகளற்ற சாலையில்
கேட்பாரற்ற பதில்களோடு
நானும்
ஒளிந்திருக்கும் நிழலும்
பேரமைதியோடு
தனியே!

#பேரமைதி


Image may contain: outdoor

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...