Saturday, 20 April 2019

பேரன்பாக திரும்பி வரும்

நீரை உறிஞ்சிய
மேகங்கள்
மழையாய்
பூமிக்கு,

தேனை
உறிஞ்சிய
தேனீக்கள்
மகரந்த சேர்க்கையாய்
பூக்களுக்கு

மண்ணைப்பற்றிய
மரங்கள்
பிராணவாயுவாய்
கிரகத்துக்கு

உளியால்
உடைந்த கற்கள்
சிலைகளாய்
கோவிலுக்கு

கனிகளாய்
வந்தவைகள்
மீண்டும்
விதைகளாய்
மண்ணுக்கு

இயற்கையில்
ஈனும்
அன்பெல்லாம்
பேரன்பாக
திரும்பிவருகிறது
மீண்டும் மீண்டும்
சுயநல
மனிதர்கள்
பாடம் படிக்க!!!


Image may contain: plant, nature and outdoor

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...