Saturday, 20 April 2019

முடிவில்லா பாதை!

அந்தத் திருப்பத்தில்
சந்தித்துக்கொண்டோம்
பால்யத்தின் கதைகளை
பகிர்ந்து மகிழ்ந்தோம்
சில நாட்கள் உண்மையையும்
பல நாட்கள் பொய்யையும்
கதைத்துக் கரைத்தோம்
மாறா சுமைகளுடன்
பயணிக்கும் பயணியின்
நிலையில் நான்
பயணம் சுவைக்காத
மனநிலையில் நீ
இருவரும் நலமேயென
பொய்யுரைத்து
விலகிச் சென்றோம்
பிரிவோம் சந்திப்போம்
என்றெண்ணி
மனபாரங்கள் உணராமல்
தனித்தே பயணிக்கிறோம்
நெடுந்தூரம்
முடிவில்லா ஒரு பாதையில்!


Image may contain: people standing, sky and outdoor

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...