Saturday, 20 April 2019

தப்பிப் பிழைக்கும் விதைகள்

ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு குழந்தைக்கு அவசர சிகிச்சைக்கு, உயிர் காக்கும் மருத்துவத்துக்கு பண உதவி தேவைப்படுகிறது, ஓடிப்போனவர்களுக்கு கொடுத்த கடனை மொத்தமாய் மருத்துவத்திற்கும், கல்விக்கும் செலவழித்திருந்தால், இங்கே பல லட்சம் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம், ஒரு விஜய் மல்லையாவைத் தொடர்ந்து, லலித் மோடி, நீரவ் மோடி பின்பு வரிசையாய் ஓடவும், திவால் அறிக்கை விடவும் காத்திருக்கும் வியாபாரிகள் என்று பட்டியல் நீள்கிறதே தவிர, ஓடியவர்களுக்கும், ஓட வைத்தவர்களுக்கும், மெத்தனமாய் இருந்த அதிகாரிகளுக்கும் எந்தத் தண்டனையும் இல்லை, எனினும் மக்களுக்கே மேலும் மேலும் வரிச்சுமை! 

நகரமே எரிந்தப்போது, பிடில் வாசித்த நீரோ மன்னனைப்போல, தேர்தல் களங்களிலும், காலங்களிலும் மட்டும் பேசும் ஒரு பிரதமரைப் பெற்றிருக்கிறோம்! வரிகளைக் கட்டிவிட்டு அடிப்படை உரிமைகளையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து திரணியில்லாத ஒரு தலைமுறையாய் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்!

நம் வீட்டில் கல்லெறியும் வரை, போராட அவசியமில்லை என்ற ஒரு கூட்டு மனநிலையும், நமக்கெதற்கு அரசியல் என்றும் ஒதுங்குகிறோம்!
காட்டெருமைகள் போல மத அரசியல் செய்பவர்களை, குடிக்கொடுத்து, குடிக்கெடுக்கும் சாராய அரசியல்வாதிகளை சாணக்கியர்கள் என புகழும் ஒரு கண்மூடித்தனமான மீடியா மனநிலையில் வாழ்கிறோம்! இந்தத் தலைமுறையை அடுத்தத் தலைமுறை மட்டுமே காப்பாற்ற வேண்டும், அது ஏன் என்றுதான் கல்வியும் மருந்துவமும் கடைச்சரக்காகப்படுகிறது, தப்பிப் பிழைக்கும் விதைகளை நம்பியே நாளை நாடு இருக்கப்போகிறது!

March 7, 2018

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!