Saturday, 20 April 2019

தொலைந்தவளின்கூடு



தொலைந்தவளின்கூடு
--------------------------------------

வாயடித்து
போட்டிப்போட்டு
சீண்டிக் கோபப்படுத்தி
ஏனென்று
சண்டைப்பிடித்து
உரிமைக்குரலெழுப்பி
ஊடல் கொண்டு
பின் மறந்து
மன்னித்து
நெகிழ்ந்து
என எல்லாமுமே
காதல் நிரம்பியிருந்த
தருணங்கள்தான்

எப்போதும்
தன்னைத்தாண்டி
நினையாமல்
ஓயாமல்
நீ செய்த
புறக்கணிப்பில்
உள்ளமொடுங்கி
மௌனம் நிரம்பிவிட்டது
நாமாக பேசி
நாட்களாகிவிட்டது
என்னை மறந்த
உன் தினங்களை
நான்
வெறித்துப்பார்க்கிறேன்
உன் நாட்கள்
அழகாய் இருந்தால்
போதும்
பேசாத நாட்களை
மீட்டியென்ன செய்ய
சுருதிப்பிறழந்தபின்னே?
கேள்வியெதும்
தோன்றவில்லை
புன்னகைத்து
நகர்கிறேன்
தொலைந்தவளாக!

March 5, 2018
Image may contain: one or more people and text

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...